• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

Sunday, 11 May 2014

செவிலியர் தினம்: வைகோ வாழ்த்து

செவிலியர் தினம்: வைகோ வாழ்த்து

 சென்னை, மே. 12 -ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:


இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 12.05.1820_ஆம் ஆண்டு பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் சேவையைத் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாகஅப்பணியில்முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தினார்.

அவர் பிறந்த மே 12 ம் நாளே உலக செவிலியர் தினமாகும்.பிளாரன்ஸ் நைட்டிங் கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களைத் தேர்வு செய்து, மத்திய, மாநில அரசுகள் மே_12 ஆம் நாளில் அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி கண்ணியப்படுத்தி கவுரவிப்பதே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும்.புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக  ஈடுபடுத்தி பணியாற்றிக் கொண்டு வரும் அனைத்து செவிலியர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நன்றி : தினபூமி

கை, கால் செயல் இழந்த கன்னியாகுமரி பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி தீவிர உயர் சிகிச்சை அளிக்கவும் ஜெயலலிதா உத்தரவு

கை, கால் செயல் இழந்த கன்னியாகுமரி பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி தீவிர உயர் சிகிச்சை அளிக்கவும் ஜெயலலிதா உத்தரவு 

சென்னை,
கை, கால் செயல் இழந்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை பெண்ணுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கவும், தீவிர உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தைராய்டு நோய் பாதித்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம், மடத்துவிளை, கன்னக்கோடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி சீதாலட்சுமி என்பவர் தைராய்டு நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கடந்த மார்ச் மாதம் 2–ந்தேதி அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் பின் விளைவுகள் காரணமாக அம்மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், தொடர் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தொடர்ந்து தீவிர மருத்துவக்கண்காணிப்பு பிரிவில் சீதாலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினாலும், இவரது கை, கால்கள் செயலிழந்த நிலையில் இருந்ததாலும், மேல்சிகிச்சைக்காக சென்னை, அரசு பொதுமருத்துவமனையில் கடந்த 1–ந்தேதி அன்று தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இவருக்கு தற்போது திரவ உணவு குழாய் வழியாகவும், டிரிப் வாயிலாகவும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இயன்முறைப்பயிற்சி (பிசியோதெரபி) வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இவரது உடல்நிலை பற்றிய விவரங்கள் எனது கவனத்திற்குத் தெரியவந்தவுடன், இவருக்கு தீவிர உயர்சிகிச்சை அளிக்குமாறு சென்னை அரசு பொதுமருத்துவமனை நிர்வாகத்திற்கு நான் உத்திரவிட்டேன். அதன் அடிப்படையில், மருத்துவர் டிட்டோ தலைமையில் நரம்பியல், இரத்தநாளம், மருத்துவம், மயக்கவியல் போன்ற பல்வேறு உயர்சிகிச்சை வல்லுநர்களைக்கொண்ட ஒரு சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவரது ஏழ்மையான குடும்ப சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு சிறப்பினமாக இவரது குடும்பத்திற்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நன்றி : தினத்தந்தி

'ஜல்லிக்கட்டு போட்டிகள் சுப்ரீம் கோர்ட்டில் ஆய்வு மனு'

'ஜல்லிக்கட்டு போட்டிகள் சுப்ரீம் கோர்ட்டில் ஆய்வு மனு'

சென்னை:'ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு, மறு ஆய்வு மனு மூலம் அனுமதி பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தமிழர்களின் நீண்ட நெடிய, பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாக, வீர விளையாட்டுகள் போற்றப்பட்டு வருகின்றன.வீரமும், காதலும், தமிழர் பண்பாட்டின் இரு கண்கள். உலகெங்கிலும் இருந்து, தமிழகத்தை நோக்கி, பிறநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்திடக் கூடிய, பண்பாட்டுத் திருவிழா ஜல்லிக்கட்டு.தமிழகத்தில் உள்ள, 60 ஆயிரத்திற்கும், மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கேரளாவுக்கு அடிமாடுகளாக அனுப்பப்படும் அபாயத்தை தவிர்க்க வேண்டும். இந்த நோக்கத்தோடும், தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்கும், தமிழக அரசு உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதியை பெற வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

நன்றி : தினமலர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் வீழ்ந்தது பெங்களூர் யுவராஜ் அதிரடி வீண்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் வீழ்ந்தது பெங்களூர் யுவராஜ் அதிரடி வீண்

பெங்களூர்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றியை பெற்றது.
கெய்ல் ஏமாற்றம்
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. டாஸ் ஜெயித்த பெங்களூர் கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால் தொடக்கம் பெங்களூர் அணிக்கு திருப்திகரமாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 4 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 19 ரன்னிலும், இந்திய ஜூனியர் கேப்டன் விஜய் ஜோல் 16 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். இதனால் பெங்களூர் அணி 3 விக்கெட்டுக்கு 40 ரன்களுடன் தடுமாறியது.
யுவி ஜாலம்
இந்த இக்கட்டான சூழலில் 4-வது விக்கெட்டுக்கு யுவராஜ்சிங்கும், டிவில்லியர்சும் கைகோர்த்து பிரமாதப்படுத்தினர். ரூ.14 கோடி மதிப்புக்கு ஏற்ப ஆடாததால் நெருக்கடியில் சிக்கி தவித்த யுவராஜ்சிங், தன் மீதான விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலடி கொடுத்தார். ராஜஸ்தான் பந்து வீச்சை பின்னியெடுத்த அவர் நாலாபுறமும் சிக்சர் மழை பொழிந்தார். எந்த பவுலர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. டிவில்லியர்சும், வழக்கம் போல் ரன்வேட்டையாடி ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.
அணியின் ஸ்கோர் 172 ரன்களாக உயர்ந்த போது யுவராஜ்சிங் 83 ரன்களில் (38 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் யுவராஜ்சிங்கின் அதிகபட்சம் இதுவாகும். டிவில்லியர்ஸ் (58 ரன், 32 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
20 ஓவர்களில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. கடைசி 12 ஓவர்களில் மட்டும் 120 ரன்களை திரட்டினர்.
ராஜஸ்தான் திரில் வெற்றி
பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தானுக்கு ரஹானே (24 ரன்), கருண் நாயர் (56 ரன்) நல்ல தொடக்கம் தந்த போதிலும் ஷேன் வாட்சன் (1 ரன்), ஸ்டூவர்ட் பின்னி (1 ரன்), சாம்சன் (13 ரன்) சீக்கிரம் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் ரஹானேவைத் தவிர மற்ற 4 பேரையும் சுழலில் மிரட்டிய யுவராஜ்சிங் காலியாக்கினார். 106 ரன்னுக்குள் 5 விக்கெட் (13.3 ஓவர்) விழுந்ததால் அந்த அணி ஊசலாடியது.
இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவன் சுமித்தும், ஜேம்ஸ் பவுல்க்னெரும், 36 பந்துகளில் 83 ரன்கள் தேவைப்பட்ட போதிலும் அடித்து நொறுக்கி பெங்களூருக்கு அதிர்ச்சி அளித்தனர்.
ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவன் சுமித் 48 ரன்களுடனும் (21 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), பவுல்க்னெர் 41 ரன்களுடனும் (17 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் நின்றனர். ராஜஸ்தானுக்கு இது 6-வது வெற்றியாகும். பெங்களூருக்கு 6-வது தோல்வியாகும்.
நன்றி : தினத்தந்தி

Thursday, 8 May 2014

Today (09-May-2014) Tamil Nadu +2 (HSC) Examination Results - 2014 are released at 10.00 Hrs.

Tamil Nadu +2 HSC Result 2014

Today (09-May-2014) Tamil Nadu +2 (HSC) Examination Results are released.


+2 Examination Results Expected on 9th May 2014  at 10:00 Hrs


http://tnresults.nic.in/



+2 Examination Results Expected on 9th May 2014  at 10:00 Hrs

Monday, 5 May 2014

மதுராந்தகம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

மதுராந்தகம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

மதுராந்தகம், மே. 5–



இன்று அதிகாலை பாஸ்கர், மனைவி–குழந்தை மற்றும் மாமனார் கிருஷ்ணன், உறவினர்கள் பாலாஜி, மகேஷ் ஆகிய 6 பேர் காரில் சென்னையை நோக்கி வந்தனர்.

அதிகாலை 5.30 மணி அளவில் மதுராந்தகம் பை பாஸ் சாலையில் வந்தபோது முன்னால் சென்ற ஆம்னி பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் கார் நிலை தடுமாறி பஸ்சின் பின்பகுதியில் மோதியது.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி காரை இடித்து தள்ளியது. இதில் கார் பஸ்சின் பின் பக்கத்தில் உள்ளே புகுந்து நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி டாக்டர் பாஸ்கர், அவரது மனைவி பாக்கியலட்சுமி, குழந்தை அரசு உள்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

விபத்து நடந்ததும் லாரி டிரைவரும், ஆம்னி பஸ் டிரைவரும் வண்டிகளை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். பஸ்சின் பின்பகுதியில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.

மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பஸ்சின் பின் பகுதியில் கார் சிக்கி இருந்ததாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து வெல்டிங் எந்திரம் மூலம் காரை துண்டு துண்டாக வெட்டி 6 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்னி பஸ் டிரைவர் ஓட்டம் பிடித்ததால் அதில் இருந்த பயணிகள் தவித்தனர். பின்னர் வேறு பஸ்களில் அவர்கள் ஏறிச் சென்றனர்.

டாக்டர் பாஸ்கர் குடும்பத்துடன் தாம்பரத்தில் நடந்த ஒரு திருமணத்திற்கு வந்தார். வழியில் விபத்தில் சிக்கி குடும்பத்துடன் பலியாகி விட்டார்.

விபத்து பற்றி தெரிந்ததும் உறவினர்கள் கதறி அழுதபடி மதுராந்தகம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பலியானவர்களின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுராந்தகத்தை அடுத்த படாளம் கூட்டுரோட்டில் நேற்று நடந்த விபத்தில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுவாமிநாதன் உள்பட 3 பேர் பலியானார்கள்.

தற்போது 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர் விபத்துக்களை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செஞ்சியைச் சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் பாஸ்கர் (வயது32). விஜயா கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (28). இவர்களது 8 மாத குழந்தை ஆண் குழந்தை வர்ஷன் அனிருத்.

நன்றி - மாலை மலர்

சென்னை, பெங்களூரில் அமெரிக்க, இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி

சென்னை, பெங்களூரில் அமெரிக்க, இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி

சென்னை,

சென்னை மண்ணடியில் சில நாட்களுக்கு முன் ஜாகீர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளி பிடிப்பட்டான்.இலங்கையின் கண்டியைச் சேர்ந்த இவனை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தமிழகத்துக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தார்.அவன் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் அவனது கூட்டாளிகள் சிவபாலன், முகமத சலிம் ஆகியோர் பிடிபட்டனர்.

இவர்கள் இருவரும் சென்னையில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விட்டது தெரியவந்தது. அவர்களது வீடுகளில் சோதனையிட்டு ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஜாகீர் உசேனிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினார்கள். அப்போது அவன் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தான்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்க பாகிஸ்தான் திட்ட மிட்டுள்ளது. இதற்கான உளவு வேலையை செய்வதற்காக ஜாகீர் உசேன் சென்னை வந்தான்.பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் வேவு பார்த்த ஜாகீர் உசேன், அந்த கட்டிடங்களையும், அவ்வழியே செல்லும் சாலை அமைப்புகளையும் போட்டோக்கள் எடுத்து அவற்றை இணைய தளம் மூலம் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளான்.


இதற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டியுள்ளனர். தாக்குதலை திட்டமிடுவதற்காக மாலத்தீவில் இருக்கும் மேலும் 2 பேரை சென்னைக்கு அனுப்ப ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு முடிவு செய்திருந்தது.அவர்களுக்கான பயண ஆவணங்களை தயாரிக்கும் பணியும், அவர்கள் ரகசியமாக மறைந்து வாழ்வதற்கான இடத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் ஜாகீர் உசேனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் ஜாகீர் உசேன் பிடிப்பட்டதால் பாகிஸ்தான் சதி முறியடிக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியாவில் உள்ள வெளி நாட்டு தூதரகங்களை தகர்க்க ஐ.எஸ்.ஐ அமைப்பு சதி செய்ததாக கூறப்படும் குற்றச் சாட்டை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி முகம்மது தவுத் எடிஷாம் மறுத்துள்ளார்.பாகிஸ்தான் இது போன்ற செயல்களில் எப்போதும் ஈடுபடாது என்றும் அவர் கூறினார்.

நன்றி : தினத்தந்தி

தேமுதிக நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் திறக்க விஜயகாந்த் வேண்டுகோள்

தேமுதிக நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் திறக்க விஜயகாந்த் வேண்டுகோள்


சென்னை, மே.5-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த கோடை காலம் எப்பொழுது முடியுமோ என்ற ஏக்கம்தான் இன்று மக்களிடம் மேலோங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் கோடை காலத்தின் கொடுமையை தவிர்க்க நம்மால் இயன்ற நற்பணிகளை ஆண்டுதோறும் நாம் செய்து வருகிறோம். மக்களுக்கு உதவிட தண்ணீர் பந்தல்கள் அமைத்து நல்ல குடிதண்ணீர், நீர்மோர், பானகம், போன்ற தாகம் தணிக்கும் வசதிகளை செய்வது வாடிக்கையாகும்.

அதற்கொப்ப இந்த ஆண்டும் தே.மு.தி.க. சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து முறையாக அவை செயல்பட வழி வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பணியே மகேசன் பணி என்ற உணர்வோடு கழக தோழர்கள் இந்த எனது வேண்டுகோளை தலையாய பணியாக கருதி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் பெரும்பாலும் கூடுகின்ற அனைத்து இடங்களிலும், அவர்களின் தாகம் தணித்திடும் வகையில் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள் தண்ணீர் பந்தல் திறப்பதற்கான அனுமதியை தங்களுடைய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்து முறையாக பெற்று தண்ணீர் பந்தல் திறப்பு விழாவை சிறப்பாக செய்திட வேண்டுகிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
கோடை காலம் என்றாலே கொளுத்தும் வெயில்தான் நினைவுக்கு வருகிறது. இந்த ஆண்டு என்றும் இல்லாத அளவிற்கு ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. வெந்த புண்ணில் வேலை எறிவதைப் போல, ஏற்கனவே நொந்து போய் உள்ள மக்களுக்கு மின்வாரியம் அமல்படுத்தும் மின்வெட்டு தாங்க முடியாத துயரத்தை தந்து வருகிறது. குடிக்க தண்ணீர் முதல், இரவு படுத்துத்தூங்க மின்விசிறி வரை இன்று மின்சாரம் இன்றியமையாத தேவையாக இருந்து வருகிறது.

நன்றி - மாலை மலர்

Sunday, 4 May 2014

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


மதுரை, மே. 4–

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் 24 மணி நேரமும் பயணிகளின் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக நேற்று நள்ளிரவில் பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

ஒரு மர்ம ஆசாமி 108–க்கு போன் செய்து ‘இன்னும் சற்று நேரத்தில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் குண்டு வெடிக்கும்’ என கூறிவிட்டு சுவிட் ஆப் செய்து விட்டான்.

இதைத் தொடர்ந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அண்ணாநகர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாயும் அழைத்து செல்லப்பட்டது.

பஸ் நிலையத்தில் 12.45 மணியில் இருந்து ஒவ்வொரு பகுதியாக மெட்டல் டிடெக்டர் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். திடீர் என பஸ் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சென்று சோதனையில் ஈடுபட்டதை அறிந்த பயணிகள் பீதியடைந்தனர். பலர் பஸ் நிலையத்திற்கு வெளியே அவசர அவசரமாக சென்றார்கள். வெளியூர் செல்லும் பயணிகள் பரபரப்புடன் காணப்பட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. சோதனைக்கு பிறகு ஒன்றும் இல்லை என தெரிந்த பிறகே பயணிகளும் அங்கு கடை வைத்து இருப்பவர்களும் நிம்மதியடைந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு 108–க்கு இதே போல் ஒரு மர்ம ஆசாமி போனில் பேசி மீனாட்சி அம்மன் கோவிலில் குண்டு வெடிக்கும் எனகூறிவிட்டு போனை கட் செய்து விட்டான். பின்னர் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தபோது சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது மதுரை மக்களை பீதியடைய வைத்துள்ளது.

பொதுமக்களை பீதியடைய செய்யும் இது போன்ற மிரட்டல்கள் விடும் ஆசாமிகளை போலீசார் கண்காணித்து கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சமூக ஆர்வலர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.

நன்றி - மாலை மலர்

மும்பை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது : 15 பயணிகள் பலி

மும்பை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது : 15 பயணிகள் பலி

மும்பை: மும்பை அருகே திவா-செவந்த்வாடி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன.  இதில் 15 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தடம் புரண்ட பெட்டிகளுக்குள் சிக்கியிருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தால் கொங்கன் ரயில்வே தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரகோத்தானே& ரோகா ரயில் நிலையங்களுக்கிடையே இந்த விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

நன்றி : தினகரன்

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு


சென்னை, மே, 4–
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தின் அருகே தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 17.3 மி.மீ., கொடைக்கானலில் 15.6 மி.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில் 10.7, புதுச்சேரி 6.3, பாம்பன் 4.2, அதிராம்பட்டணம் 4.4, காரைக்கால் 1.5., மதுரை, பாளையங்கோட்டையில் தலா 1.2, தூத்துக்குடியில் .9 மி.மீ மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி - மாலை மலர்