• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

Monday, 9 February 2015

தன்ஹா மூவீஸ் சார்பில் நிஜ தாதாக்கள் நடித்த அதிரடி படம் | படத்தை கதை எழுதி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி

தன்ஹா மூவீஸ் சார்பில் நிஜ தாதாக்கள் நடித்த அதிரடி படம் | படத்தை கதை எழுதி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி 

 இப்போதெல்லாம் படத்துக்குப் படம் தாதாக்களைப் பார்க்கிறோம். தாதாக்களாக புதுப்புது நடிகர்கள் நடிப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நிஜ
தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா? அப்படி ஒரு படமாக உருவாகியிருப்பதுதான் சபரன்.

இந்தப் படத்தை கதை எழுதி தயாரித்துள்ளது முதல் நடித்துள்ள நடிகர்கள் வரை பலரும் நிஜ தாதாக்கள்தான்.

தன்ஹா மூவீஸ் சார்பில் படத்தை கதை எழுதி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி என்பவர்.

இவர் கேரளாவில் பிரபல தாதா. பல நிழல் உலகம் இவருக்கு ஒளி உலகமாகத் தெரியும் அளவுக்கு பரிச்சயம்.

சபரன் படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.புவனேஷ். இவர் ஏற்கெனவே தமிழில் ஆறாவது வனம் ,மலையாளத்தில் பகவதிபுரம் படங்களை இயக்கியவர்.

தாதா ஒருவர் நாயகனாக நடித்தாலும் ஏற்று நடிக்கிற கதாபாத்திரம் போலீஸ் அதிகாரி.

இப்படத்தின் கதை என்ன?

கோவை அருகே ஒரு குண்டுவெடிப்பு நடக்கிறது. அது பற்றி புலனாய்வு செய்ய புறப்படுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி.

விசாரணை செய்யத் தொடங்கினால் தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பது போல பல நிழல் உலக தாதாக்கள், பலநாட்டு தீவிரவாதிகள், அரசியல் புள்ளிகளின் தொடர்புகள், அரசியல்வாதிகளின் தேச துரோகங்கள் எல்லாம் அம்பலமாகின்றன.

ஆணிவேர் எது என்று கண்டறியும் முயற்சியே சபரன் படக்கதை.சபரன் என்றால் வேட்டைக்காரன். ஒரு வேட்டைக்காரனாய் எழுந்து புறப்பட்டு நாசக்கார கும்பலை வேரறுப்பவன்தான் இந்த நாயகன் சபரன்.

இந்தப் படத்தின் கதை ,திரைக்கதை அமைத்து பல கதாநாயகர்களிடம் படமாக்க முயன்று பல லட்சங்கள் செலவு செய்து அலைந்திருக்கிறார் அம்ஜத்.

ஆனால் நம் நாயகர்கள் இந்த நிஜ தாதாவுக்கே தண்ணி காட்டிவிட்டார்கள். கடைசியில் தானே தயாரிப்பது என்று முடிவெடுத்து இறங்கி விட்டார்.

இயக்குநரைக் கூட தடாலடியாகவே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஒரு நண்பர் மூலம் இயக்குநருக்கு இந்த தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

கடத்தாத குறையாக கேரளாவில் ஒரு படகுவீட்டில் ஒரு நாள் அடைத்து வைத்து மிரட்டாத குறையாக ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இது ஜிகர்தண்டா அசால்ட் சேது கதைபோல இருக்கிறதே என்றால்" ஆமாம் என்கிறார் இயக்குநர் புவனேஷ்.

"சினிமா ஆசையில் ஒரு அப்பாவி டைரக்டரை மிரட்டி தன்னை கதாநாயகனாக்கும் ஒருவனின் கதைதான் ஜிகர்தண்டா . அதைப் போலத்தான் என்னையும் ஒரு வகையில்

டைரக்டர் ஆக்கினார்கள் எனலாம். கதை, திரைக்கதை, லொக்கேஷன் எல்லாம் தயார்செய்து வைத்திருந்தார்கள். நீ டைரக்ட்செய்தால் போதும் என்றார்கள். அப்படி என்னை சிக்க வைத்த படம்தான் சபரன் என்கிறார்.

அப்படி மிரட்டி எடுத்த படம் எப்படி வந்திருக்கும்?

"அவர்களது உருட்டு மிரட்டலை முரட்டு அன்பு என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் தெரியாமல் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று நினைத்தேன்.

பிறகுதான் அவர்களின் இயல்பே அதுதான் என்று புரிந்து கொண்டேன். தயாரிப்பாளரின் சினிமா பற்றிய ஆர்வம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

போலீஸ் பற்றி எத்தனையோ படம் வந்திருக்கும். இது போலீஸின் பெருமையைக் கூறுகிற படமாக இருக்கும்.இது வழக்கமான படமாக இருக்காது. காதல், காமெடி எல்லாம் இருக்காது.

முழுநீள ஆக்ஷன் படம். எனக்கு எல்லா வசதியும் கொடுத்தார்கள்.படப்பிடிப்பில் சம்பளத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை. "என்கிறார்.

புதுமுகங்கள் பிரஷாந்தி, தீபிகா என்கிற மாடல்கள் இருவர் நடித்துள்ளனர். பிரதான வில்லனாக டார்வின் க்ரூஸ் நடித்துள்ளார். காதல் தண்டபாணி, அப்புக்குட்டி, வின்சென்ட் அசோகன், தலைவாசல்விஜய், போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர் . துபாயில் உள்ள நிஜமான தாதாக்களும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பிடங்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, பொள்ளாச்சி, கொடைக்கானல்,பாண்டிச்சேரி, வால்பாறை, கேரளாவில் கொச்சி, கொல்லம் மட்டுமல்ல ஹிமாச்சலப் பிரதேசத்தில் பனிமூடிய ரோடாக் பார்க் ,அந்தமான் என இந்தியாவில் பல பகுதிகளிலும் படமாகியுள்ளது. இது மட்டுமல்ல பஹ்ரைன், துபாய் போன்று வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு பெரிய செட் போட்டும் படப்பதிவு நடந்துள்ளது.

படத்தில் 5 பாடல்கள். ஒருபாடலுக்கு துபாய் க்ளப்பில்.. இதற்காக ரஷ்யா பெல்லி டான்சர்களை அழைத்து ஆடவைத்துள்ளனர்..

இசை பி.பி. பாலாஜி..பாலாஜி சூரன் துணை முதல்வர் படங்களுக்கு இசையமைத்துள்ளவர். . சிட்டிராஜ் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

பாடல்கள் புவனேஷ். ஸ்டண்ட் சுப்ரீம் சுந்தர், நாக் அவுட் நந்தா, நடனம் பாபி, நிர்மல், அருண். இப்படம் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார் -எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது


இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார் -எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

 ஒரு சிறிய இடைவௌிக்கு பின்னர், சினிமாவில் மீண்டும் அதே உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளார் நடிகர் கவுண்டமணி.

 தற்போது, ''வாய்மை'' என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளவர்,

அடுத்தப்படியாக ''49-ஓ'' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த இரண்டு படங்களும் விரைவில் வௌிவர உள்ள நிலையில், இப்போது புதிதாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இப்படத்திற்கு, ''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'' என தலைப்பு வைத்துள்ளனர்.

இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் கவுண்டமணி உபயோகப்படுத்தும் கேரவன் மிகுந்த பொருட்செலவில் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டி-ஷர்ட், ஜீன்ஸ், கூலிங்கிளாஸ் என... ஒரு டீன்-ஏஜ் பையன் போன்று தோற்றமளிக்கிறார் கவுண்டமணி.

முழுக்க முழுக்க காமெடி படமாகும் உருவாகும் இப்படத்தில், கவுண்டமணியின் பட்டைய கிளப்பும் காமெடிகள் எப்போதையும் விட இந்தப்படத்தில் அதிகமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் சூட்டிக்கொண்ட டாக்டர் சீனிவாசன், விஜய்யின் புலி படத்தில்


தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் சூட்டிக்கொண்ட டாக்டர் சீனிவாசன், விஜய்யின் புலி படத்திலும் நடிக்க போவதாக தகவல் வௌியாகியுள்ளது

 கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ''புலி''.

 பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார்.

 விஜய் ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

 நீண்ட இடைவௌிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார்.

 இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், விரைவில் பாடல் காட்சிகளுக்காக விஜய் உள்ளிட்டவர்கள் வௌிநாடு பறக்க இருக்கின்றனர்.

இந்நிலையில், லத்திகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமாகி, தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் சூட்டிக்கொண்ட டாக்டர் சீனிவாசன், விஜய்யின் புலி படத்திலும் நடிக்க போவதாக தகவல் வௌியாகியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் சீனிவாசனிடம் புலி தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

சமீபத்தில், ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வௌியான ஐ படத்திலும் தனது வழக்கமான ஸ்டைலில் வந்து காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்தார் சீனிவாசன்.

இப்போது அடுத்தப்படியாக விஜய் படத்திலும் தனது காமெடி சேட்டைகளை செய்ய இருக்கிறார்.

தமிழில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் ஹிந்தியில் அஜய் தேவ்கன்


தமிழில், சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில், ஹிந்தியில், அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார்

 ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கத்தில், தமிழில் பெரும் வெற்றி பெற்ற படமான காஞ்சனா படம், ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

 ஹிந்தியிலும், லாரன்சே, படத்தை இயக்க உள்ளார்.

 தமிழில், சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில், ஹிந்தியில், அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார்.

 மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி் ரீமேக்கிலும், அஜய் தேவ்கன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிகை வித்யா பாலன்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளளர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, வித்யா பாலன் கூறியதாவது, இந்த ஆண்டில், பல படங்களில் நடிக்க உள்ளேன்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்கள் தான் என்னை அதிகமாக தேடி வருகின்றன.

ஆனால், இதுவரை எந்த பயோபிக் படத்தில் நடிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று வித்யாபாலன் கூறியுள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான தி டர்ட்டி பிக்சர் படத்தில், சில்க் ஸ்மிதா கேரக்டரில், வித்யா பாலன் நடித்தார்.

இந்த படத்திற்காக, வித்யா பாலன், சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sunday, 8 February 2015

குத்து நடனத்தில் பட்டைய கிளப்பிய மாதுரிமா



பெங்கால் நடிகையான மாதுரிமா பானர்ஜி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியான நடிகையாகிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தமிழில் வெளியான ஆம்பள படத்திலும் இவர் நடித்திருந்தார், தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நாக சைதன்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குநர் சுதீர் வர்மா இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருக்கிறாராம் மாதுரிமா.

சும்மா கவர்ச்சிக்காக மட்டும் இந்த பாடலை படமாக்கவில்லை படத்தின் முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் கதையோடு ஒன்றியே வருகிறது என்று கூறுகிறார் இயக்குநர் சுதீர் வர்மா.

பாடல் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜூனியர் என்டிஆரின் டெம்பர் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், மேலும் ஆக்ஷன் காட்சிகளிலும் இவர் பட்டைய கிளப்புகிறாராம்.

ஹாட்ரிக் ஹிட்டடித்த நிக்கி கல்ராணி


இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'டார்லிங்' நல்ல ஓப்பனிங்கை தந்துள்ளதால், வரும் நாட்களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவை ஒரு கலக்கு கலக்கத்தான் போகிறார் அழகு டார்லிங் நிக்கி கல்ராணி.

இதற்கான அச்சாரத்தை கடந்த வருடம் வெளியான '1983' படமே வலுவாக போட்டுத்தந்து விட்டது. பெங்களூரு பொண்ணான நிக்கி கல்ராணி, கன்னடத்தில் அறிமுகமானாலும் கடந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்த '1983', ஓம் சாந்தி ஒசானா' மற்றும் 'வெள்ளிமூங்கா' ஆகிய மூன்று படங்களும் ஹிட்டடிக்க, இப்போது முன்னணி ஹீரோக்களின் பார்வை 'நிக்கி' பக்கம் தான். இது தவிர தெலுங்கு, கன்னட ஹீரோக்களும் நிக்கியை கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

காற்றுள்ள போதுதானே தூற்றிக்கொள்ள முடியும். தனது மவுசு கூடுவதை பார்த்த நிக்கி, தனது சம்பளத்தை 2௦ லட்சத்திலிருந்து 6௦ லட்சமாக உயர்த்திவிட்டாராம். தற்போது மலையாளத்தில் திலீப்புக்கு ஜோடியாக இவர் நடித்துவ ரும் 'இவன் மர்யாதராமன்' படம் வரும் சம்மர் ரிலீஸாக வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல வினீத் சீனிவாசன் ஜோடியாக 'ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா' மற்றும் சுரேஷ்கோபியுடன் 'ருத்ர சிம்ஹாசனம்', தமிழில் பாபி சிம்ஹா ஜோடியாக ஒரு படம் என ஹவுஸ்புல் புக்கிங்கில் போய்க்கொண்டு இருக்கிறார் நிக்கி. இதனால் தமிழில் இவர் ஆதியுடன் நடித்துள்ள 'யாகவராயினும் நா காக்க' படத்தின் மீதும் எதிர்பார்ப்பு விழுந்துள்ளது.

செல்பியை விரும்பாத குஷ்பு


செல்பி எடுப்பதில் தனக்கு ஈடுபாடு கிடையாது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

மனிதனின் மூன்றாவது கையாக மொபைல்போன் மாறியுள்ள நிலையில், அதில் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

தங்களை தாங்களே செல்பி எடுத்தும் மற்றும் பிரபலங்களுடன் நின்றபடி செல்பி எடுத்துக்கொண்டும், அந்த போட்டோக்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

செல்பி எடுப்பது குறித்து, நடிகை குஷ்பு கூறியதாவது, 'செல்பி' எடுப்பதில தனக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது; என்னோட சேர்ந்து நீங்க 'செல்பி' எடுக்கிறது, சுத்தமா பிடிக்காது! அதனால, என் கூட சேர்ந்து புகைப்படம் எடுத்துக்க விரும்புனா, உங்க நண்பர்களை வைச்சு 'க்ளிக்' பண்ண சொல்லுங்க என்று குஷ்பு கூறியுள்ளார்.

கற்பு குறித்து சர்ச்சை கருத்து கூறியது மற்றும் பாரதமாதா தோற்றத்தில் குஷ்பு என அவ்வப்போது குஷ்பு, மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கிர்தி சனோனை அவுட் ஆக்கிய எமி ஜாக்சன்


பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் சிங் இஸ் பிலிங் படத்தில், கிர்தி சனோனிற்கு பதிலாக, எமி ஜாக்சன் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்த கிர்தி சனோன், அதேநேரத்தில், வருண் தவானுடன் மற்றொரு படத்தில் கமிட் ஆனதன் காரணத்தினாலேயே, இந்த மாற்றம் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கரின் ஐ படத்தில், எமி ஜாக்சனின் நடிப்பு, பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேயாகும் ஆலமரம்


கடந்த ஆண்டு ஆலமரம் என்ற படம் வெளிவந்தது. ஆலமரத்துக்கு கீழே கொல்லப்படும் ஒரு பெண் ஆவியாகி ஆலமரத்தில் தங்கியிருந்து பழிக்குபழி வாங்கி கொல்கிற கதை. இப்போது மரப்பாச்சி என்ற ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் ஆலமரமே பேயாகி பழிவாங்குகிறது.

"ஒரு இடத்தை விட்டு நகர முடியாத ஆலமரம் எப்படி எதிரிகளை பழிவாங்குகிறது என்பதுதான் புதுமையான திரைக்கதை. ஆன்மாக்கள்தான் இந்த உலகை ஆள்கிறது.

மனிதர்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து திருந்தினால் ஆன்மாக்கள் மன்னிக்கும் இல்லையேல் அதற்கான தண்டனையை தந்தே தீரும் என்கிற கருத்தை சொல்கிறது படம்" என்கிறார் அறிமுக இயக்குனர் கே.எஸ்.முத்து மனோகர். படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே.

ஜெம்ஸ் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து இதனை உருவாக்கி வருகிறார்கள். வசந்த், சுகன்யா ஹீரோ, ஹீரோயின்களாவும் கல்லூரி மாணவர்கள் மற்ற கேரக்டரிலும் நடிக்கிறார்கள். பால கணேஷ் இசை அமைக்கிறார்.

மாணவர்களே உருவாக்கியுள்ள கிராபிக்ஸ் காட்சிகளுடன் திகில் படமாக வெளிவர இருக்கிறது மரப்பாச்சி.

அசைவ நடிகையான காஜல் அகர்வால்


சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே நான் ரொம்ப ஆச்சாரமான பேமிலி அதனால், அளவுக்கு மீறியெல்லாம் அசைவமாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு சைவ நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் காஜல்அகர்வால்.

ஆனால், தமன்னா, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளின் அதிரடி பிரவேசம் காஜல் அகர்வாலையும் தற்போது அசைவ நடிகையாக மாற்றி விட்டுள்ளது.

அதன்காரணமாக, தெலுங்கில் ராம்சரணுடன் அவர் நடித்து வெளியான கோவிந்துடு அந்தாரிவாடேலே. எனற படத்தில் பல காட்சிகளில் ஆபாசமாக நடித்திருந்தார் காஜல். அதனால் படம் சென்சாருக்கு சென்றபோது காஜல் சம்பந்தப்ப்ட்ட பல காட்சிகளை கத்தரிக்க வரிந்து கட்டினார்களாம் சென்சார்போர்டு அதிகாரிகள்.

அதனால், அப்படத்தின் டைரக்டரான கிருஷ்ணவம்சியே பின்னர், சில ஆபாச காட்சிகளை நீக்கிவிட்டு படததை சென்சாருக்கு அனுப்பினாராம்.

அப்படி அவர் நீக்கிய சில காட்சிகள் படு ஆபாசமாக இருந்ததாம். அதில் ஒரு காட்சியில் காஜல்அகர்வால், தனது ஜாக்கெட் பட்டனை கழற்றிவிட்டு பின்னழகை ராம்சரணிடம் காண்பிப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இதனால் முன்பு ஒரு முறை தனது ஆபாச போட்டோக்கள் இணையதளத்தில் வெளியானபோது ஸ்ருதிஹாசன் டென்சன் ஆனதைப் போன்று இப்போது காஜல்அகர்வாலும் இந்த படக்குழுவினர் மீது செம கோபத்தில் இருக்கிறாராம்.

வசூலில் சரித்திரம் படைத்த என்னை அறிந்தால்



அஜித் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் விழாகோலம் பூண்டுள்ள படம் ‘என்னை அறிந்தால்’. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்துள்ளார்கள்.

மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும் உலகமெங்கும் அதிகப்படியான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படத்தின் முதல் நாள் வசூல் மற்ற படங்களை விட அதிக வசூல் படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.12.80 கோடியும், கேரளாவில் ரூ.3.75 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.54 கோடியும், பிற மாநிலங்களில் ரூ.1.36 கோடியும், வெளிநாடுகளில் ரூ.9.75 கோடியும் என மொத்தம் 30.20 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வசூல் சாதனை படைத்த புதுப்படங்களில் என்னை அறிந்தால் 2வது இடத்தை பிடித்ததாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தின் முதல்நாள் வசூல் ரூ.37 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது. லிங்கா முதலிடத்திலும் என்னை அறிந்தால் இரண்டாவது இடத்திலும் இடம் பெற்றிருக்கிறது.

விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ’ ரூ.27 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்திலும், விஜய்யின் ‘கத்தி’ ரூ.23 கோடி வசூல் செய்து நான்காவது இடத்திலும் உள்ளது.

இதேபோல் என்னை அறிந்தால் படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைக்க உள்ளது. இதுவரை தமிழில் வெளிவந்த எந்த படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்து வருகிறது. அதேபோல், முதல் நாள் வசூலிலும் இப்படம் சாதனை படைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அமெரிக்காவில் இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு 98 திரையரங்குகளில் வெளியான இப்படம் அங்கு முதல்நாள் மட்டும் 1,13,232 டாலர்கள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் 75 திரையரங்குகளில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் துபாய், மலேசியா ஆகிய நாடுகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அஜித்தின் எந்த படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்திருப்பதால் அஜித் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

பாலில் குளித்த சன்னி லியோன்


லீலா படத்தின் ஒரு சீனிற்காக, சன்னி லியோன், 100 லிட்டர் பால் நிரம்பிய கண்டெய்னரில், அழகுற பால் குளியல் போட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், இந்த சீன் படமாக்கப்பட்டுள்ளது.

சன்னி லியோனின் உடல்நிலை சரியாக இல்லாதிருந்தபோதிலும், இந்த சீனில் அவர் தன் பங்கிற்கு சிறப்புற நடித்து கொடுத்துள்ளதாக லீலா படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடுங்குளிரில் லிப் கிஸ் அடித்த யாமி கவுதம்


சிம்லாவை அடுத்த கல்பா கிராமத்தில், மைனஸ் 10 டிகிரியிலான கடுங்குளிரில், புல்கிட் சாம்ராட்டை, யாமி கவுதம் லிப் டு லிப் கிஸ் அடிக்கும் சீன் படமாக்கப்பட்டுள்ளது. பூஷன் குமார் தயாரிப்பில், திவ்யா கோஸ்லா குமார் இயக்கத்தில், புல்கிட், யாமி நடிப்பில் சனம் ரே படம் உருவாகி வருகிறது.

யாரியான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திவ்யா கோஸ்லா குமார் இயக்கும் இரண்டாவது படம் இது ஆகும். சனம் ரே படம் குறித்து திவ்யா கோஸ்லா குமார் கூறியதாவது, சிம்லாவிலிருந்து 8 மணிநேர நீண்ட பயணத்திற்கு பிறகு, இந்த கல்பா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தியேட்டர்களே இல்லை.

மைனஸ் 10 டிகிரி செல்சியஸ், எங்கள் படக்குழுவினரை உற்சாகமாக வரவேற்றது. புல்கிட் - யாமி முத்தக்காட்சியை, இங்கே தான் எடுப்பது என்று அப்போதே தீர்மானித்துவிட்டேன்.

ஓரளவு நடுக்கத்தில் இருந்த யாமியும், புல்கிட்டும், இதை சொன்னதுமே, கூடுதலாகவே நடுங்க ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களுக்கு அவ்வப்போது, சூடான பானங்களை கொடுத்துக்கொண்டே இருந்தோம். முத்தக்காட்சியும் சிறப்பாக வந்துள்ளதாக திவ்யா கூறினார்.

பிரியாணியில் புகுந்து விளையாடும் அஞ்சலி



நடிகர் நடிகைகள் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து விட்டால், அதன்பிறகு அவர்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும். முக்கியமாக படப்பிடிப்பு தளங்களில் ஸ்டார் ஹோட்டல் உணவுகள்தான் அவர்களுக்கு கொடுக்கப்படும். அதேபோல், நினைத்த ஜூஸ் வகைகளை சாப்பிடலாம்.

அவர்கள் சொடக் போட்டாலே தேவையை நிறைவேற்ற உதவியாளர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். ஆனபோதும், அவர்களால் விரும்பியதை சாப்பிடத்தான் முடியாது. உடம்பை கன்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும் என்று தங்களது விருப்ப உணவுகள் அனைத்தையுமே ஓரங்கட்டி விடுவார்கள்.

அந்த வகையில், அரை வயிறும் கால் வயிறுமாகத்தான் டயட்ஸ் கடைபிடிப்பார்கள். ஆனால் இந்த விசயத்தில் அஞ்சலி வித்தியாசமானவர். டைரக்டர்கள் எடையை குறைக்க சொன்னால் அந்த காலகட்டத்தில் மட்டுமே டயட்ஸ் மட்டுமின்றி கடின உடற்பயிற்சிகள் செய்து உடம்பை குறைப்பார். ஆனால், அவர்களது படத்தை முடித்ததும், தனது பேவரிட் அயிட்டங்களை புல் கட்டு கட்டத் தொடங்கி விடுவாராம்.

அதிலும் பிரியாணி என்றால் அவருக்கு கொள்ளை பிரியமாம். 3 மாதங்கள் அதை தவிர்த்தால் அடுத்து 3 மாதங்களுக்கு புகுந்து விளையாடி விடுவாராம்.

அந்த வகையில், ரீ-என்ட்ரியில் தமிழுககு வந்த அவர், ஸ்லிம்மாகத்தான் இருநதார். ஆனால் இப்போது மறுபடியும் அவரது உடம்பு ஒரு சுற்று பெருத்து விட்டது.

இதெல்லாம் பிரியாணி பார்த்த பார்வைதானாம். அதனால் சில டைரக்டர்கள் ஒரே படத்தில் முதலில் ஒரு மாதிரியாகவும் பிற்பாதியில் இன்னொரு மாதிரியாவும் அஞ்சலி இருப்பார் என்பதால், அவருக்கு இந்த மாதிரி உணவுகளை மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறர்கள.

முக்கியமாக பிரியாணியை அவர் கண்ணிலேயே காட்டக்கூடாது என்று அவரது உதவியாளர்களிடம் கண்டிசன் போடுகிறார்கள்.

ரசிகர்கள் மனதில் ஜெஸ்ஸியா இல்லை ஹேமானிகாவா


என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவும் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியான போது, ஏற்கெனவே மூன்று படங்களில் இணைந்து நடித்து விட்டார்களே, வேறு புது ஜோடியை அஜித்துடன் நடிக்க வைக்காமல், கௌதம் மேனன் மீண்டும் த்ரிஷாவையே ஏன் நடிக்க வைக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன.

ஆனால், அந்தக் கேள்வியெல்லாம் படம் பார்த்தபின் மறைந்து விட்டது. அடடா...இப்படி ஒரு அழகா, என ரசிகர்களை வியந்து பார்க்க வைத்துவிட்டார் கௌதம் மேனன்.

ஏற்கெனவே, 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் ஒரு யதார்த்தமான அழகான நாயகியாக த்ரிஷாவை, ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து படம் பார்த்த ரசிகர்களை உருக வைத்தார்.

மீண்டும், இந்தப் படத்தின் மூலம் ஹேமானிக் கதாபாத்திரத்தில் த்ரிஷாவை நடிக்க வைத்து ஜெஸ்ஸியை ரசிகர்கள் ரசித்தது போலவே இந்த ஹேமனிக்கா கதாபாத்திரத்தையும் ரசிக்க வைத்து விட்டார். இத்தனைக்கும் ஹேமானிக்கா கதாபாத்திரம் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக நடிக்கும் கதாபாத்திரம்.

ஆனாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தோற்றமும், உடை அலங்காரமும், ஹேர்ஸ்டைலும் ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்திருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் கூட 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஜெஸ்ஸியை, 'என்னை அறிந்தால்' மேஹமானிகா மிஞ்சி விட்டார் என ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

லட்சுமி மேனன் - சினிமாவுக்கு டாட்டா


சினிமா போரடித்துவிட்டது ஆகையால் அதைவிட்டு விலகுகிறேன், இனி படிப்பில் கவனம் செலுத்த போகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மஞ்சப்பை போன்ற படங்களில் நடித்துள்ளவர் இப்போது கொம்பன், சிப்பாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் கொம்பன் படம் முடிந்துவிட்டது, விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.

லட்சுமி மேனன் கூறியுள்ளதாவது, நிறைய படங்களில் நடித்தாலும் நான் நடித்த படங்கள் பெரும்பாலும் பக்கத்து வீட்டு பெண் போன்றும், கிராமத்து பெண் போன்றும் தான் நடித்துள்ளேன்.

தொடர்ந்து இதுபோன்ற ரோல்களில் நடிக்கவே எனக்கு வாய்ப்புகள் வருகிறது. இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரேமாதிரி நடித்து போரடித்துவிட்டது. எனவே சினிமாவை விட்டு விலகலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

இனி படிப்பில் கவனம் செலுத்த போகிறேன். தற்போது நான் பிளஸ் 2 படித்து வருகிறேன், இதில் நான் நிறைய மார்க் எடுக்க வேண்டும், பின்னாளில் பேஷன் டிசைனர் ஆகும் எண்ணம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Saturday, 7 February 2015

சன்னி லியோன் - கொளுத்தும் வெயிலில் மிரட்டல் ஆட்டம்


சன்னி லியோன் தற்போது, ''ஏக் பெகலி லீலா'' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உளவுத்துறை பெண்ணாக சன்னி லியோன் நடிக்கும் இப்படத்தை பாபிகான் இயக்குகிறார்.

இப்படத்தில், 'டோலி தாரோ டோல் பாஜே...'' என்ற பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

இந்தப்பாடல் ஏற்கனவே சல்மான்-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வௌியான, ''ஹம் தில் தே சுகி சனம்'' என்ற படத்தில் இடம்பெற்றுள்ள 'டோல் பாஜே...' பாடல் தான். இதைத்தான் இப்போது ரீ-மேக் செய்கிறார்கள்.

சமீபத்தில் படமாக்கப்பட்ட இப்பாடலில் சன்னி லியோன் உடன் சுமார் 500 நடன கலைஞர்களும் சேர்ந்து ஆடியுள்ளனர்.

ராஜஸ்தான் நடன பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்பாடலில் சில காட்சிகள் கொளுத்தும் வௌியிலும் படமாக்கப்பட்டதாம்.

இந்தப்பாடல் நன்றாக வந்திருப்பதாகவும், ரசிகர்களுக்கு நிச்சயம் இப்பாடல் பிடிக்கும் என்கிறார் இயக்குநர்.

அக்காவுக்கு போட்டியாகும் தங்கை


நடிகர் கமல்ஹாசனின் வாரிசுகள் ஸ்ருதிஹாசனும், அக்ஷ்ராஹாசனும். இவர்களில் ஸ்ருதி ஏற்கனவே முன்னணி நடிகையாக
திகழ்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிரபலமாக இருக்கிறார்.

இப்போது அவரது தங்கை அக்ஷ்ராவும் சினிமாவில் களமிறங்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர், இப்போது ஷமிதாப் எனும் இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அவதரித்துள்ளார்.

முதல்படமே, அமிதாப், தனுஷ் என பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பால்கி இயக்கியிருக்கும் இப்படம் நேற்று(ஜன., 6ம் தேதி) ரிலீஸாகியுள்ளது.

ஷமிதாப் படத்தில், அக்ஷ்ரா உதவி இயக்குநராக நடித்துள்ளார். வாய்பேச முடியாத தனுஷ், பாலிவுட்டில் பெரிய ஹீரோவாக ஆவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை எல்லாம் செய்கிறார்.

படத்தில் அவர் காட்டும் ஒவ்வொரு எக்ஸ்பிரஷனும் அவ்வளவு அழகாக வந்துள்ளதாம். இதனால் ஷமிதாப் படத்தை பார்த்தவர்கள், இவர் ஸ்ருதியையே மிஞ்சிவிட்டார் என்று பேசுகின்றனர்.

ஆக, அக்ஷ்ராவுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. அதேசமயம் தனது அக்கா ஸ்ருதிக்கும் அவர் போட்டியாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

3Gb RAM & 20 மெகாபிக்சல்கேமரா ஸ்மார்ட்போன்அறிமுகம்


HTC நிறுவனம் HTC டிசயர் A55 என்ற ஸ்மார்ட்போனை இந்த மாதம் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

HTC டிசயர் A55 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வரும், அதாவது EMEA சந்தையில் ஒற்றை சிம் A55 # UL வகை மற்றும் ஆசியாவில் இரட்டை சிம் A55 # DTUL மாடல் வரும் மற்றும் பிப்ரவரி மாதத்தில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

HTC டிசயர் A55 ஸ்மார்ட்போனில் 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

இதில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 64 பிட் 2.0GHz அக்டா கோர் மீடியாடெக் MT6795 சிப்செட் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு, வருகிறது.

HTC டிசயர் A55 ஸ்மார்ட்போனில் 20 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் 13 மெகாபிக்சல் அல்லது 4 அல்ட்ராபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.

இதில் பூம்சவுண்ட் ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 4.1 மற்றும் 3000mAh விட குறைந்த திறன் கொண்ட பேட்டரி ஆகியவை கொண்டுள்ளது.

HTC டிசயர் A55 ஸ்மார்ட்போனில் HTC சென்ஸ் 7.0 உடன் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன்கள், ஒயிட் ரோஸ் கோல்ட், கிரே, மற்றும் பிரவுன் கோல்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது.

  • HTC டிசயர் A55 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:
  • 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே,
  • 3ஜிபி ரேம்,
  • 2.0GHz அக்டா கோர் மீடியாடெக் MT6795 சிப்செட் ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு,
  • 20 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • ப்ளூடூத் 4.1,
  • ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்.

வடிவேலுவின் ''எலி'' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

வடிவேலுவின் ''எலி'' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

'என்னை அறிந்தால்' இரண்டு நாட்களில் ரூ.21 கோடி வசூல்


அஜித் நடித்து வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் ரூ.20.83 கோடியை தமிழகத்தில் மட்டும் வசூலித்துள்ளது.

விடுமுறை நாளில் வெளியாகாவிட்டாலும் 'என்னை அறிந்தால்' வசூலை அள்ளியிருப்பது கவனிக்கத்தக்கது.

இது குறித்து பேசிய வர்த்தக நிபுணர் த்ரிநாத், "நட்சத்திரம் ஒருவரது திரைப்படம் வார நாளில் வெளியாகி, வசூலையும் குவிக்கும் என்பது அரிதே. ஆனால் அதை 'என்னை அறிந்தால்' சாதித்துள்ளது. வெளியான நாள் அன்று ரூ.11.5 கோடியையும் சேர்த்து இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.20.83 கோடியையும் இப்படம் வசூலித்துள்ளது.

படத்தின் நீளம் குறித்தும், கெளதம் மேனனின் முந்தைய படங்களின் சாயல் குறித்தும் விமர்சனங்கள் இருந்தாலும், படம் பாக்ஸ் ஆஃபிஸில் சோடை போகவில்லை" என்றார் அவர்.

கெளதம் மேனன் இயக்கி, ஏ.எம் ரத்னம் தயாரித்து, அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா உள்ளிடோர் நடிப்பில், 'என்னை அறிந்தால்' பிப்ரவரி 5-ஆம் தேதி வியாழக்கிழமை வெளியானது.

உடல் எடையை குறைக்கும் ஐஸ் ஜாக்கெட்: புதிய கண்டுபிடிப்பு


அமெரிக்காவை சேர்ந்த நாசா விஞ்ஞானி ஒருவர் உடல் எடையை குறைக்கும் ஐஸ் ஜாக்கெட்டை கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், நாசாவின் ஜெட் ப்ரபல்சன் ஆய்வகத்தில் வருகை விஞ்ஞானியாகவும் பணிபுரியும் வேன் ஹேஸ் என்பவர் புதிதாக ஐஸ் ஜாக்கெட் என்ற உடல் எடையை குறைக்கும் கருவியை உருவாக்கியுள்ளார்.

இந்த ஐஸ் ஜாக்கெட் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக இருக்கும்.

மிக எளிமையான கோட்பாட்டைக் கொண்டு இது இயங்குகிறது.

பார்ப்பதற்கு கோட்டிற்கு உள்ளே அணியும் சட்டை போல இருக்கும். இதற்குள் குளிர்ந்த நீர் இருக்கும்.

இதை சட்டையைப்போல உடலில் அணிந்து கொள்ளலாம்.

ஐஸ் ஜாக்கெட்டில் உள்ள குளிர்ந்த நீரால் உடல் வெப்ப நிலை குறைவதால் அதை சமநிலைப்படுத்த நம் உடல் தனக்குள் உள்ள கலோரிகளை எரித்து உடலின் வெப்ப நிலையை அதிகரிப்பதால் நம் உடல் எடை குறைகிறது.

இது குறித்து வேன் கூறுகையில், இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 கலோரி வரை எரிக்க முடியும் என்றும் வாரத்திற்கு 1 பவுண்டு வரை எடையை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யை போலவே அஜித்துக்கும் சிலை வைத்த ரசிகர்கள்!


தமிழ் சினிமாவில் தல அஜித் மற்றும் இளையதளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் விஜய்யின் 'கத்தி' படம் ரிலீசான போது விஜய்க்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்திருந்தனர்.

தற்போது அதே போல் தல ரசிகர்கள் 'என்னை அறிந்தால்' படத்திற்காக அஜித்துக்கும் சிலை வைத்துள்ளார்கள்.

சேலம் மாவட்ட  தல ரசிகர்கள் என்னை அறிந்தால் படத்தில் உள்ள அஜித் தோற்றத்திலான சிலையை அமைத்து ஊர்வலமாக எடுத்து சென்று அதை பிரபல திரையரங்கின் முன் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Friday, 6 February 2015

எலியான வடிவேலு


தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இடையில் அரசியல் பிரச்னையில் சிக்கி சில பல காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர், கடந்தாண்டு தெனாலி ராமன் படத்தின் மூலம் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுத்தார்.

யுவராஜ் தயாளன் இயக்கிய இப்படம், எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. ஆனாலும் இவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண முடிவு செய்தனர். மேலும் இப்படத்திற்கு எலி என்றும் பெயர் சூட்டியிருந்தனர்.

இந்நிலையில், ''எலி'' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வௌியிடப்பட்டுள்ளது. அதில், கட்டம்போட்ட பேண்ட், சிவப்பு கலர் கோட், கருப்பு நிற கண்ணாடி எல்லாம் அணிந்து ஹாயாக ஒரு கார் மீது சாய்ந்து போஸ் கொடுக்கிறார் வடிவேலு.

மேலும் அவரது கர்லிங் ஹேரும் ஒரு வித்தியாசமான தோற்றத்தை பிரதிபலிக்கிறது. ஆக போஸ்டரை பார்க்கும்போதே இதுவும் முழுக்க முழுக்க காமெடி படமாகத்தான் உருவாகும் என தெரிகிறது.

மீண்டும் திருமணமா நோ சொல்லும் காவ்யா மாதவன்


தமிழில், காசி, என் மன வானில் உட்பட சில படங்களில் நடித்துள்ள, மலையாள முன்னணி நடிகையான காவ்யா மாதவன், தற்போது தனது கணவரைவிட்டு பிரிந்தபின் மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் கூட நன்றாகத்தான் ஆரம்பித்திருக்கிறது. அதற்கேற்றமாதிரி செலக்டிவான நடிப்புக்கு ஸ்கோப் இருக்கக்கூடிய படங்களாகத்தான் தேர்ந்தெடுத்து வருகிறார் காவ்யா மாதவன்.

ஆனால் இவர் அடுத்து திருமணம் செய்துகொள்ளப்போவது யாரை என்கிற கேள்வியை கேட்டு, காவ்யா மாதவனுக்கு பேஸ்புக்கில் 'அன்பு' டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.. இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய் யாருடைய போட்டவையாவது சேர்த்து வைத்து இவரைத்தான் காவ்யா மாதவன் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என தவறான தகவல்களை பரப்புகிறார்களாம்.

ஆனால் காவ்யா மாதவன் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், “இனி மீண்டும் திருமண பந்தத்திற்குள் நுழையும் எண்ணம் இல்லை.. அதைவிட இந்த வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

மேரேஜ் ஆன பிஸி நாயகி


முன்னணியில் இருக்கும் கதாநாயகி திருமணம் செய்து கொண்டால்போதும்...அந்த நிமிடமே அந்த நடிகையை கைகழுவிவிடுவார்கள்.

சிம்ரன், தேவயாணி, ஜோதிகா, மீனா என இதற்கு எத்தனையோ நடிகைகளை உதாரணமாக சொல்லலாம்.

சமீபத்திய உதாரணம் அமலாபால். முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால், இயக்குநர் விஜய்யை திருமணம் செய்ததும் சட்டென மார்க்கெட் இழந்தார். திரையுலகின் இந்த வழக்கத்துக்கு மாறாக திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் கதாநாயகியானவர், தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார். அவர்...சான்ட்ரா எமி.

சின்னத்திரை நிகழ்ச்சித்தாகுப்பாளர் பிரஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் இவர். சான்ட்ராவும் சின்னத்திரை நடிகைதான். இந்நிலையில் ஒரு சில படங்களில் தலைகாட்டிய சான்ட்ரா கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான சுற்றுலா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

சமீபத்தில் ரிலீசான தரணி மற்றும் சிவப்பு எனக்கு பிடிக்கும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் உறுமீன் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார் சான்ட்ரா எமி!

சக்திவேல் பெருமாள்சாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் ஜெனிஃபர் எனும் மாடர்ன் கேரக்டர் கிடைத்துள்ளதாம்! இப்படம், ஃபேன்டசி த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது!

இதுவரை இரண்டாம்நிலை ஹீரோக்கள் மற்றும் புதுமுக ஹீரோக்கள் உடன் மட்டுமே நடித்து வந்த சான்ட்ரா எமிக்கு உறுமீன் படத்தில் பாபிசிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கல்யாணமா குழந்தை குட்டியா விரக்தியில் ஷகிலா


ஒரு காலத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களை மிஞ்சிய வசூல் சாதனை படங்களை கொடுத்த கவர்ச்சி நடிகை ஷகிலா தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் காமெடி மற்றும் வில்லியாக நடித்து வருகிறார். ஷகிலாவுக்கு திருமணம் என்ற செய்தி பலமுறை வந்து தடைபட்டு போயிருக்கிறது.

கடைசியாக ரமேஷ் என்ற தே.மு.தி.க பிரமுகரை மணக்க இருப்பதாக சொன்னார். அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் ஷகிலா தான் இயக்கி வரும் கன்னடப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஒரு இளைஞனை திருமணம் செய்து கொண்டார் என்கிற செய்தி பரவியது.

இதுகுறித்து ஷகிலா கூறியதாவது:
என்னை பற்றி திருமண வதந்திகள் வருவது ஒன்றும் புதிதில்லை. பத்தோடு இதுவும் ஒன்று. அந்த பையன் என் படத்தில் ஹீரோவாக நடிக்கிறான். அவனுக்கு 28 வயதாகிறது. எனக்கு 38 வயதாகிறது அவன் என் தம்பி மாதிரி.

திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் எதுவும் எனக்கு இல்லை. சில தோழிகள் உனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் அதற்காகவாவது திருமணம் செய்து கொள் என்கிறார்கள். பூமிக்கு பாரமாக இன்னொரு உயிரை விட்டுச் செல்ல எனக்கு மனம் இல்லை.

பெற்றால்தான் பிள்ளையா என்று சில குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். அது போதும் என்று விரக்தியாக கூறுகிறார் ஷகிலா.

எமனை கண்டவனும் இல்லை தலைய வென்றவனும் இல்லை






என்னை அறிந்தால் திரைப்படம் பிப்ரவரி 5 ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட நாள் தொட்டே அஜீத் ரசிகர்கள் இத்திரைப்பட வௌியிட்டு நாளை வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருப்பர்கள் போலும்... அதன் வௌிப்பாடாக பிப்ரவரி 5, அதிகாலை சென்னை உள்ளிட்ட தமிழகம் ழுழுவதும் படம் வௌியான திரையரங்குகள் ஒவ்வொன்றும் திருவிழா கோலம் பூண்டிருந்தன.

ஆட்டம், பாட்டம், சரவெடி பட்டாசு, அதிர்வேட்டு, தாரை தப்பட்டை... என ஒவ்வொரு திரையங்கு வாயிலும் அதிகாலை 3 மணிக்கே கோலாகலம் கொண்டிருந்தன. அதுமாதிரி திரையரங்குகளில் உள்ளும் நூற்று கணக்கான கூடுதல் சேர் போட்டு பார்த்தும், அது பத்தாமல் தரையிலும் அமர்ந்து தல ரசிகர்கள் 4 மணி சிறப்பு காட்சி பார்த்தததே கண்கொள்ளா காட்சி.

ரிசர்வேஷன் அறிவிக்கப்பட்ட கடந்த பிப்., 3ம் தேதி முதலே திரையரங்குகளில் திரண்ட அஜீத் அபிமானிகளும், தல ரசிகர்களும், இன்று 4 மணி ஷோவிலும், அதைத்தொடர்ந்து 7 மணி ஷோவிலும் சென்னை காசி திரையரங்கம், ஆல்பர்ட் திரையரங்கம், விருகம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வண்டி பார்க்கிங்கிற்கு இடம் இல்லாமல் அருகில் உள்ள தெருக்களில் டூவிலர்களையும், கார்களையும் நிறுத்தியிருந்தனர். இதற்கு காவல் துறையும் முழு ஒத்துழைப்பு தந்து ரசிகர்களை வழி நடத்தி திரையரங்குகளுக்கு செல்ல அனுமதித்தனர்.

திரையரங்கிற்குள் சென்ற ரசிகர்கள், திரையில் அஜீத் தோன்றிய போதெல்லாம் பூக்களையும், சுக்கு சுக்காக கிழித்து தயாராக வைத்திருந்த பேப்பர்களையும் அள்ளி வீசி ஆர்ப்பரித்தும், பாடல் காட்சிகளில் ஸ்கிரீனின் முன் கூட்டம் கூட்டமாக ஆடியதும், ரஜினி படங்களை காட்டிலும் ஒன்றிரண்டு மடங்கு கூடுதலாக தெரிந்தது நிஜம்!

இத்தனைக்கும் அஜீத், தனக்கு ரசிகர் மன்றம், நற்பணி மன்றம் எதுவும் வேண்டாம்... என எத்தனையோ முறை கேட்டு கொண்டும், ஒருமுறை அஜீத்தே முன்னின்று தனது ரசிகர் மன்றத்தை கலைத்தும், அஜீத் அபிமானிகள் அவரை விடுவதாக இல்லை என்பதற்கு, என்னை அறிந்தால் படம் ஓடும் திரையரங்குகளில் கூடும் கூட்டம் ஒரு சின்ன சாம்பிள் என்றே எடுத்து கொள்ளலாம்.

தலயை தலையில் தூக்கி வைத்து கொண்டு அவரது ரசிகர்களும், அபிமானிகளும் இவ்வாறு ஆட, கொண்டாட காரணம், அல்டிமேட் அஜீத்

Thursday, 5 February 2015

வீடு தேடி வருகிறது ரயில் டிக்கெட்


ஆன்லைனில் நாம் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளை வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு, ‘நெட் பேங்கிங்’ வசதியையோ, ‘கிரெடிட் கார்டு’ வசதியையோ அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்த வேண்டும்.

ஆனால், சிலருக்கு நெட் பேங்கிங் வசதி இருக்காது. சிலரோ தங்களது கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு தகவல்களை வெளியிட தயங்குவார்கள்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிய முறை ஒன்றை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி நாம், வழக்கம்போல ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு, நாம் பதிவு செய்த டிக்கெட்டை ‘பிரிண்ட்’ எடுத்துக் கொண்டு, ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர் நம் வீட்டிற்கு நேரில் வருவார்.

அவரிடம் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்திவிட்டு, டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த வசதியைப் பெற, பயண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.

டிக்கெட்டை நேரில் வந்து தருவதற்காக, தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.40ம், ஏ.சி. வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.60ம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

முதல்கட்டமாக இந்த வசதி, 200க்கும் மேற்பட்ட நகரங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Yennai Arindhaal - Movie Review



Such a wonderful love story by Director Gautham Vasudev Menon as expected.

A very unique love story and I promise it will be entirely different from all the other Ajith's film.

1st half of the story is the Romantic Love story between Anushka and Ajith followed by a long flashback with Trisha and Ajith.

2nd half will be totally all action packed scenes with so much of tactics and masterplans.

There comes the spice of the story which is the great bonding of love between a father and a daughter! Atleast any of the scenes in the movie will make you into tears,trust me!

Those beautiful and meaningful love verses by GVM sir. Every love or punch dialogues in this movie will stay in your mind forever.

What a poetic love story! Ajith sir after a long time into this kind of beautiful love based film with action scenes immersed throughout the movie.

What should I say about Arun Vijay. No one could have replaced him in that movie and no one could have done it better than him.

His style,his dialogues and his masterplans was truly magnificent! Trisha's traditional look was just mesmerising, her beautiful dialogues in that movie - and the most famous one " My one half is with you".

Anushka has been beautiful as always but this time she looked more stunning with her long hair.

She was just too gorgeous and played her role very well in that movie.

Vivek sir has done justice to the film with short comedy scenes attached throughout the movie.

Songs could have been better. But few songs and the background music in this movie was just flawless! Screenplay was neatly done and the love story was just outstanding!

Overall an Action Packed Sentimental Love Film - to be precise a love thriller movie!

Wednesday, 4 February 2015

அக்சரா ஹாசனின் கோலிவுட் கனவு


பாலிவுட் படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று நடிகை அக்ஷரா ஹாசன்
கூறியுள்ளார்.

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், திரையுலகில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, கமலின் இளையமகளான அக்ஷரா ஹாசனும், ஷமிதாப் படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். ஷமிதாப் படத்தில், பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், மற்றும் தனுஷ் உடன் அக்ஷரா நடித்துள்ளார். அமிதாப் மற்றும் தனுஷ் உடன் நடித்த அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்..

ஷமிதாப் உங்களது முதல் படம்? எப்படி உணர்கிறீர்கள்?

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படம் இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. நான் நடித்த படம் முதல்படம் என்பதால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன். முதல் படத்திலேயே, நான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இந்த படத்தில் நடித்திருக்கவில்லையென்றால், என்னுடைய லெவல் என்பது என்னவென்று எனக்கு தெரியாமலேயே இருந்திருக்கும். இந்த படம் வெளியானபின்னர், பாலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

முதல் படமாக ஷமிதாப்பை எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் திரையுலகில் வர வேண்டும் என்று நினைத்தபோதே, எனக்கு பல்வேறு வாய்ப்புகள் தேடிவந்தன. ஆனால், அவற்றை எல்லாம் நான் நிராகரித்துவிட்டேன். ஏனென்றால், அப்போது தான் மனதளவில் தயாராகவில்லை என்பதே உண்மை. பின், திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற வெறி வந்து, உடலளவிலும், மனதளவிலும் தயாரான நேரத்தில் தான், ஷமிதாப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. படத்தின் கதையும் பிடித்து இருந்தது, பால்கி சாரின் இயக்கத்தில் நடிக்க பலர் விரும்பும்நிலையி்ல், முதல் படத்திலேயே அவர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உடனே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

படத்தில் உங்களது கேரக்டர் குறித்து...

ஷமிதாப் படத்தில், பத்திரிகையாளர் கேரக்டரில் நான் நடித்துள்ளேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இதுவரை, நான் பத்திரிகையாளரை பார்த்தது கூட இல்லை. எனவே, பத்திரிகையாளர் கேரக்டர் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. படத்தில், பத்திரிகையாளர் கேரக்டர் செய்ய வேண்டும் என்று டைரக்டர் பால்கி சொன்னவுடன், பத்திரிகையாளரின் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தேன். அவர்களது மேனரிசத்தை தொடர்ந்து கண்காணித்து, என்னை, பத்திரிகையாளர் கேரக்டருக்கு தயார்படுத்திக்கொண்டேன். இந்த படத்தில், அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் இருவரும் சந்திக்க வைக்கும் பாலமாக என் கேரக்டர் உள்ளது.

முதல் படத்தில் முழுமை பெற்றுவிட்டதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. யாராலும், முதல் படத்திலேயே, நான் முழுமையடைந்துவிட்டேன் என்று கூறிவிட முடியாது. ஆனால், இந்த படத்தில் நான் நடிக்கும்போது, ஒருவித உற்சாகத்தில் இருந்ததை உணர்ந்தேன். இந்த படத்தில், ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்கும் வகையில், நான் நடிக்க முயற்சித்துள்ளேன். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதை இந்த படத்தில் நிறைவேற்றியுள்ளேன் என்று நினைக்கிறேன்.

2 மெகா ஸ்டார்களுடன் நடித்த அனுபவம் குறித்து..

முதல் படத்திலேயே, அமிதாப் பச்சன், தனுஷ் என இரண்டு மெகாஸ்டார்களுடன் நடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 2 மெகா ஸ்டார்களுடன் நடித்தது இனிய அனுபவமாக இருந்தது. அவர்களுடன் நடித்த இந்த அனுபவத்தை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அமிதாப் பச்சன், பால்கி, தனுஷ் உள்ளிட்டோர் என்னை, அவர்களின் குழந்தைகளாகவே பாவித்தனர்.

நடிப்பில் உங்கள் பெற்றோரை முந்திவிட்டீர்களா?

நிச்சயமாக இல்லை. நடிப்பில் அப்பா கமலஹாசன், பல அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். நடிப்பில், என்னை அவரோடு ஒப்பிட்டு பேசுவதே, தவறான ஒன்று ஆகும். அம்மா சரிகாவின் பல்வேறு குணாதிசயங்களை நான் தன்னகத்தே வைத்துள்ளேன். என்னை முதன்முதலாக பார்க்கும் பலர், அப்படியே, சரிகாவை பார்த்தது போலவே உள்ளதாக கூறியுள்ளனர். எனது அம்மா, அமைதியானவர், அனுபவம் மிக்கவர், நன்றாக எழுதும் திறம் படைத்தவர். அத்தகைய அவரது குணாதிசயங்கள் எனக்கும் உண்டு. நான் எழுதியதை பாராட்டி, அம்மா எனக்கு ஒரு பேனாவை பரிசளித்தார். அதுதான் எனது முதல் சம்பளம். அதை பெறும்போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

ஹிந்தி படங்களில் மட்டும் தான் நடிப்பீர்களா?

ஹிந்தி படத்தில் நான் அறிமுகமானதால், ஹிந்தி படங்களில் மட்டும் நடிப்பேன் என்று கருதிவிட முடியாது. தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஷமிதாப் படத்தின் ரிலீசிற்கு பிறகு, தமிழ் அல்லது ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளேன். தமிழ் படங்களில் நடிக்கவே, தான் விரும்புகிறேன்.

பாலிவுட்டில் உங்கள் பேவரைட் யார்?

நான் ஷாரூக் கானின் தீவிர ரசிகை. பாலிவுட் திரையுலகின் நிகரற்ற ஹீரோ என்றால், அது ஷாரூக் கான் தான். ஒரு விளம்பர சூட்டிங்கின்போது, அவரை முதல்முறையாக சந்தித்தேன். அவரிடம் நான் பேச தயங்கியபோது, அவரே முன்வந்து என்னிடம் பேசினார். என்னை கட்டிப்பிடித்த அவர், நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறினார். அப்போதே, நான் உங்கள் தீவிர ரசிகை என்பதை கூறிவிட்டேன் என்று அக்ஷரா ஹாசன் கூறினார்.

காத்ரீனா லிப் டு லிப் முத்தம்


பிட்டூர் படத்தில் இடம்பெறும் ஆதித்யா ராய் சோப்ரா - காத்ரீனா கைப் லிப் டு லிப் காட்சி, காஷ்மீரின் பனிபடர்ந்த பகுதியில் படமாக்கப்பட்டது.  

காஷ்மீர் மாநிலத்தில், பனிப்பொழிவு தீவிரமாக இருந்ததால், சூட்டிங் சிறி்துநேரம் பாதிக்கப்பட்டது.

காத்ரீனா கைப்பின் வருகையையொட்டி, அங்கு மக்கள் தொடர்ந்து குவிந்து வருவதால், சி.ஆர்.பி.எப் மற்றும் மாநில போலீசார், காத்ரீனாவிற்கு 3 அடுக்கு பாதுகாப்பு மேற்கொண்டுள்ளனர்.

கோலிவுட் புது வரவு மஞ்சு வாரியர்



சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தின் மூலம், தமிழில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிமுகமாக உள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் மஞ்சு வாரியர். நடிகர் திலீப் உடனான மணவாழ்க்கையால், நடிப்புக்கு முழுக்கு போட்டார். பதினாறு வருடங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்கள் இல்லற வாழ்க்கையில் சமீபத்தில் புயல் வீசியது.

இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இரு தினங்களுக்கு முன்பு கோர்ட், அவர்களுக்கு விவகாரத்து வழங்கியது.

இதையடுத்து, மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார். மலையாளத்தில், அவர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படம், பெரும்வெற்றி பெற்றது. இப்படம், தமிழில் ரீமேக் ஆக உள்ளது.

மஞ்சு வாரியர் கேரக்டரில், ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்தை, நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

இதனிடையே, மஞ்சுவாரியர், சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்திலான படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

எந்திரன் வசூல் சாதனையை தகர்த்த ஐ வசூல்


'ஐ' படம் வெளிவந்த 20 நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்களின் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இதுவரை
வெளிவந்த தமிழ்ப் படங்களில் அதிக வசூலைக் குவிக்கும் படமாக அமைந்து வருகிறது.

படத்தைப் பற்றி ஆரம்பத்தில் நெகட்டிவ்வான சில விமர்சனங்கள் வெளிவந்தாலும் விக்ரமின் அபாரமான நடிப்பாலும், ஏ.ஆர்.ரகுமானின் இனிமையான இசையாலும், பி.சி.ஸ்ரீராமின் அற்புதமான ஒளிப்பதிவாலும், ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தாலும் அந்த விமர்சனங்களையும் மீறி இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று சாதனை புரிந்து வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 205 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியுள்ளதாகவும், பங்குத் தொகையாக மட்டும் 105 கோடி ரூபாய் வரை கிடைத்திருக்கும் என்றும் டோலிவுட் வியாபார வட்டடாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஏரியாவாகக் கருதப்படுவது மதுரை ஏரியாதான். அந்த ஏரியாவை வைத்துத்தான் ஒரு படத்தின் வெற்றியையும் கணிப்பது வழக்கம்.

அந்த விதத்தில் 'எந்திரன்' படத்திற்காகக் கிடைத்த பங்குத் தொகையை 'ஐ' படம், இப்போதே தாண்டி விட்டதாம். இது போன்று மற்ற ஏரியாக்களிலும் 'ஐ' படத்தின் வசூல் 'எந்திரன்' படத்தின் வசூலை மிஞ்சி வருவதாகத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலும், பங்குத் தொகையாக 55 கோடி ரூபாய் வரையிலும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் பல திரையரங்குகளில் 'ஐ' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்னும் வரும் நாட்களிலும் இந்த வசூல் தொடரும் என்பதால் தமிழ்த் திரையுலகில் அதிக வசூலைக் குவிக்கும் படமாக 'ஐ' படம் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைக்கும் என்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2015 - டாப் 10 வீரர்கள்


வரவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தங்களது ஆட்டத்தினால் கவரக்கூடிய 10 வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் லாசன் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் அவர் வெளியிட்டுள்ள 10 வீரர்கள் விவரம் வருமாறு:

1. மிட்சில் ஸ்டார்க்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பந்துவீச்சு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டுகளில் அவர் ஒரு அச்சுறுத்தலான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது யார்க்கர்களும் பவுன்சர்களும் சிலபல விக்கெட்டுகளை அவருக்குப் பெற்றுத்தரும். முடிவு ஓவர்களில் அவரது இன்ஸ்விங்கிங் யார்க்கர்களை விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. அன்று இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் சிட்னியில் இதனை அவர் நிரூபித்தார். உலகக் கோப்பையிலும் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

2. டேவிட் வார்னர்:

ஸ்டார்க் எப்படி பந்துவீச்சில் எதிரணியினரை முறியடிப்பாரோ அப்படித்தான் பேட்டிங்கில் டேவிட் வார்னர். ஒருநாள் போட்டிகளில் இவரது ஆட்டம் அதிகம் சோபிக்கவில்லை என்றாலும் தன் சொந்த நாட்டில் உலகக் கோப்பை போட்டிகளில் இவர் அபாயகரமான வீரராகத் திகழ்வார். இவரை முடக்க தொடக்க ஓவரிலேயே ஸ்பின்னைக் கொண்டுவர அணிகள் முயற்சி செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3. மொயீன் அலி (இங்கிலாந்து):

தொடக்கத்தில் களமிறங்குவதோடு ஆஃப் ஸ்பின் பவுலிங்கில் 10 ஓவர்களை வீச முடியக்கூடியவர். புதிய பந்தில் பயப்படாமல் அடித்து ஆடுகிறார். பந்தை தூக்கி அடிக்கவும் அஞ்சுவதில்லை. அவர் ஸ்பின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொள்கிறார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறார். அவரை சிலபல ஷாட் பிட்ச் பந்துகளை வீசி அவுட் செய்ய அணிகள் தங்கள் ஹோம்வொர்க்கை தொடங்கி விட்டன. ஆஸ்திரேலிய பிட்ச்களின் பவுன்ஸிற்கு மொயீன் அலி புதிது. ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஆல்ரவுண்டர் மொயீன் அலி.

4. ஏ.பி.டீவிலியர்ஸ்:

எந்த ஒரு ஆட்டக்களமாக இருந்தாலும் அதில் எந்தவிதமான பந்து வீச்சாக இருந்தாலும் ஏ.பி.டீவிலியர்ஸ் ரன்களைக் குவிப்பார். ஏ.பி.டீவிலியர்ஸ் கிரீஸில் இருக்கும் வரையில் தென் ஆப்பிரிக்கா தோற்க வாய்ப்பில்லை.

5. பிரெண்டன் மெக்கல்லம்

சிறந்த வேகப்பந்து வீச்சைக்கொண்டுள்ள நியூசிலாந்து அணியில் பிரெண்டன் மெக்கல்லமின் பேட்டிங் மிக முக்கியப் பங்களிப்பை செய்து வருகிறது. 2014-ஆம் ஆண்டில் அவரது டெஸ்ட் அதிரடி ஆட்டங்கள் 2015 ஒருநாள் போட்டிகளுக்கு மாறியுள்ளது. உலகில் எந்த ஒரு பந்து வீச்சும் அவரது தாக்குதல் ஆட்டத்தை முடக்க திராணியற்றதாக இருக்கிறது. மேலும் உள்நாட்டிலேயே விளையாடுவதால் மெக்கல்லம் தனது ஆட்டத்தின் மூலம் தன் அணியை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

6. ஷாகித் அப்ரீடி (பாகிஸ்தான்)

என்றும் புத்துணர்வுடன் இருக்கும் பூம்... பூம் அஃப்ரீடி ஆடிக்கொண்டேயிருக்கிறார். நான் அவரது வயதைக் குறிப்பிட விரும்பவில்லை. காரணம் அவர் பிறந்த தேதி பற்றி 4 வேறுவேறு குறிப்புகள் உள்ளன. ஆனால் ஊடுருவும் அவரது பந்து வீச்சிற்கும், அதிரடி ஆட்டத்திற்கும் வயது தடையல்ல. அவர் தனது லெக் பிரேக் மற்றும் ஸ்லைடர்கள் மூலம் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார். இது அவரது கடைசி உலகக் கோப்பை, ஒருநாள் தொடர் எல்லாம்.. அவருக்கு இது ஒரு பெரிய உலகக்கோப்பை.

7. குமார் சங்கக்காரா

சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கு எதிராக எழுச்சியுற்ற ஒரு மூத்த வீரர் சங்கக்காரா. அவரது சக வீரர் மகேலா ஜெயவர்தனே போல் இவருக்கும் ஆட்டங்களை எப்படி வெல்வது என்பது தெரியும். விக்கெட் கீப்பராகவும் அவருக்கு நிறைய அனுகூலங்கள் இருக்கின்றன. போட்டிகளை வெல்லவும் ரன்களைக் குவிக்கவும் அவருக்கு தீராத தாகம் உள்ளது. இவர் தோல்வியடைவது அரிது. துணைக் கண்டத்தின் பேட்டிங் சொர்க்கத்தை விடுத்து மற்ற நாடுகளிலும் அவர் சிறப்பாக ஆடியிருப்பதை அவரது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு இது நல்ல உலகக் கோப்பையாக அமைந்தால் அவரது அணிக்கும் சிறப்பாகவே அமையும்.

8.கிறிஸ் கெய்ல்

சொல்லவேத் தேவையில்லை மேற்கிந்திய தீவுகள் அணி என்ற சக்கரத்தில் உராய்தலைத் தடுத்து சக்கரம் தங்குதடையின்றி ஓடவைப்பவர் கிறிஸ் கெய்ல். டி20 கிரிக்கெட் அதிரடி ஆட்டத்தை ஒருநாள் கிரிக்கெட்டிற்கு அவர் மாற்றிவிட்டால் மே.இ.தீவுகள் ரன்களைக் குவிக்கும், பிறகு வெற்றி சுலபமாகும். மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு வர முடியாவிட்டாலும் கெய்லின் ஆட்டம் இந்த உலகக் கோப்பையில் ஒரு பெரிய பொழுதுபோக்கு அமசம்தான்.

9. ரவீந்திர ஜடேஜா

முழுதும் ரன்களாக இருக்கும் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவின் பின்கள ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ரவி அஸ்வினுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவின் தற்போதைய உண்மையான ஆல்ரவுண்டர் இவர்தான். பீல்டிங்கில் சிறந்தவர். பவர் பிளேயில் வீசக்கூடியவர். அவரது பீல்டிங்கே இந்திய அணிக்கு சில விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்து அதன் மூலம் ஆட்டம் திரும்பியுள்ளது.

10. ஜாவேத் அஹ்மதி (ஆப்கானிஸ்தான்):

துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஜாவேத் நிறைய ரன்களைக் குவித்தார். நான் முதன் முதலில் 2011 அண்டர்-19 உலகக் கோப்பையின் போது இவரைப் பார்த்தேன். துணைக்கண்ட வீரர்கள் பலரிடம் இல்லாத ஒன்று இவரிடம் உள்ளது. அதாவது வேகமான, ஷாட் பிட்ச் பந்துகளை இவர் அனாயசமாக ஆட முடிவதை நான் பார்த்திருக்கிறேன். ஆப்கான் அணியை சாதாரணமாக எடைபோடவேண்டாம். அந்த அணி சிலபல அதிர்ச்சிகளை கொடுத்தால் அதில் ஜாவ்”ஏத் அஹ்மதி ஒரு முக்கியப் பங்கு வகிப்பார் என்றே நான் கருதுகிறேன்.

என்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்





நடிகர் : அஜித் குமார், அருண் விஜய், விவேக்

நடிகை : அனுஷ்கா ஷெட்டி, திரிஷா கிருஷ்ணன், பார்வதி நாயர்

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்குனர் : கவுதம் மேனன்

தயாரிப்பு : ஏ, எம் ரத்னம், எஸ் ஐஸ்வர்யா


அஜித் ஒரு கேங்ஸ்டராக ஒரு கூட்டத்தில் நுழைந்து, அவர்களாலே செய்ய முடியாத பல வேலைகளை அவர் செய்து முடித்து, அனைவரின் நற்பெயரையும் சம்பாதிக்கிறார்.

இதை தொடர்ந்து அவர் எடுக்கும் அதிரடி முடிவு, அந்த கும்பலை அதிர்ச்சியாக்க, பின்பு தான் தெரிகிறது அஜித் ஒரு போலிஸ் அதிகாரி என்று. இந்த உண்மை தெரிந்த அருண் விஜய், த்ரிஷாவை கொலை செய்கிறார்.

மேலும், குழந்தையையும் கொலை செய்ய அவர் முயற்சிக்க, அஜித் ஏதும் வேண்டாம் என்று ஊரை விட்டு கிளம்ப, அவரை சுற்றி பல மர்ம சம்பவங்கள் நடக்கிறது, இதில் அஜித் தப்பித்தாரா? என்பதை யாரும் எதிர்பாராத கிளைமேக்ஸில் கூறியிருக்கிறார் கௌதம் மேனன்.

படத்தின் மிகப்பெரிய பலம் இசை மற்றும் ஒளிப்பதிவு தானாம், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வந்துள்ளதாம். அஜித் இந்த படத்தில் மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளாராம். இதற்கெல்லாம் மேலாக அருண் விஜய் மிரட்டியெடுத்துள்ளாராம்.

1 1/2 வருடம் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் செம்ம விருந்து தானாம். அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு காதல், எமோஷன், ஆக்‌ஷன் என அனைத்து வித கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.

மொத்தத்தில் என்னை அறிந்தால் 1000 வால சரவெடி தான்.

என்ன தல ரசிகர்கள் ரெடியா?

ஐடியா வாடிக்கையாளருக்கு புதிய ஈஸி ஷேர் திட்டம்


ஐடியா செல்லுலார் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அன்று ஈஸி ஷேர் திட்டங்களை ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக தொடங்கியுள்ளது. மேலும்,
கடந்த ஆண்டில் சில சந்தைகளில் போஸ்ட்பெய்டு திட்டங்களையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தனிப்பட்ட தயாரிப்பு, இந்தியாவில் உள்ள ப்ரீபெய்ட் யூசர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் போது, இரண்டு தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் மல்டிபுள் சாதனங்களை கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது, ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மல்டிபுள் கனெக்ஷனை பயன்படுத்தி பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐடியாவின் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக புதிய ஈஸி ஷேர் ப்ரீபெய்ட் திட்டங்கள், ரூ.158 முதல் ரூ.958 வரை இருக்கும். இண்டர்நெட், உள்ளூர் மற்றும் வெளியூர் குரல் நிமிடங்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அனைத்து திட்டங்களும் இதில் அடங்கும்.

இந்த திட்டம் தற்போது ப்ரீபெய்ட் ஐடியா சந்தாதாரர்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. யூசர்கள் ஐடியாவின் ஈஸி ஷேர் திட்டங்களை கொண்டு நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைத்து ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் இன்டர்நெட் டேடா, குரல் நிமிடங்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றை யுஎஸ்எஸ்டி அல்லது ஐடியா இணையதளத்தில் உள்நுழைவது போன்ற எளிய செயல்முறையை பயன்படுத்தி பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

என்றும் பதினாறு நீங்கள் இதில் ஏது


எண்ணெய்ப்பசை சருமம் கொண்டுள்ளவர்களுக்கு நிறைய பயன்கள் உள்ளன. பொதுவாக எண்ணெய் பசையுள்ள சருமமத்தில் முகப்பருப்பிளவு அதிகம் ஏற்படாது. எண்ணெய் பசை சருமம் கொண்டுள்ளவர்களுக்கு சருமத்தில் வறட்சி ஏற்படாது.

மற்றும் பொதுவாகவே எந்த காலநிலைகளிலும் முகம் பொலிவுற திகழும். இயற்கையாகவே அவர்கள் முகப்பொலிவு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

• எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் எப்போதும் இளமையாகவே தோற்றமளிப்பார்கள். அதனால் நீங்கள் உங்களது வயதைப் பற்றி கவலையடையவே வேண்டாம்.

• மேக்-கப் செய்யும் போது அதற்கு முன் அது அதிக நேரம் நிலைத்து இருக்க ஆயில் படிமம் இட வேண்டும். ஆனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு அது தேவையே இல்லை மேக்கப் வல்லுனர்களும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மேக்-கப் செய்யவே அதிகம் விரும்புவர்.

• எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடையும் இன்னொரு பயன், உங்களது முக சுருக்கங்களை இது மறைத்துவிடும். உங்களது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை நிரம்பியிருந்தால், தினமும் அதிக அளவு தண்ணீர் பருகுங்கள். இது எண்ணெய் பசை மிகுதியை கட்டுப்படுத்தும்.

அரிப்பு பிரச்சனையா என்ன செய்யலாம்


மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும் ஈரமாக இருக்கும். இந்த ஈரத்தன்மையினால் தொடைப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள தோல் உரிந்து அரிப்பு, சொறி ஆகியவை ஏற்படலாம்.

சிவப்பு நிற புண்களும் வர வாய்ப்புகள் உள்ளன. இவை மிகுந்த வலியை தரும். சொறி மற்றும் புண்களால் மிகுந்த அரிப்பு ஏற்படுகின்றது. இதனால் அந்த இடங்களில் இறுக்கமான ஆடைகளை அணியமுடிவதில்லை.

நாம் பயன்படுத்தும் சானிட்டரி பேட் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் இத்தகைய பிரச்சனைகள் வருவது இயல்பு. ஒரு வேளை நாம் துணியை பயன்படுத்தினால் கூட இந்த பிரச்சனை வரக்கூடும்.

மாதவிடாய் காலத்தில் வரும் சொறி மற்றும் காயங்களை நாம் குணப்படுத்த முயற்சி எடுக்காவிட்டால் அந்த மாதம் முழுவதும் இவை நமக்கு அரிப்பை ஏற்படுத்தும்.

இத்தகைய சொறியை குணப்படுத்தவும் மற்றும் அவை மீண்டும் வராமல் தடுக்கவும் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பார்க்கலாம்..

• சுத்தமாக நமது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நாம் பராமரித்தால் எந்த ஒரு சொறியும் அரிப்பும் அண்ட முடியாது. அவ்வப்போது அந்த இடங்களை கழுவி சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். அந்த இடத்தை கழுவி மற்றும் சுத்தமாக துடைத்த பின், சானிட்டரி பேடை பயன்படுத்தினால் நீன்ட நேரம் உலர்வாக இருப்பதையும் சுகமாக இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள்.

• சொறி மற்றும் அரிப்புகளை ஆற்றிட நமது அங்காடிகளில் கிடைக்கும் நல்ல ஆன்டி-செப்டிக் அல்லது கிருமிகளை கொல்லும் மருந்துகள் திரவ வடிவிலும், பாதியளவு திரவமாகவும் கிடைக்கின்றது. அதை பயன்படுத்தலாம். ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்பது சிறந்தது. ஒரு வேளை இதை பயன்படுத்தி எரிச்சல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக கழுவிட வேண்டும். மீண்டும் பயன்படுத்த வேண்டாம். பாராஃபின் எண்ணெயும் சிறந்த குணமளிக்கும் திரவமாக உள்ளது. இதை பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தும் போது மிகுந்த ஆறுதல் கிடைக்கும்.

•  அந்த இடத்தில் கழுவி சுத்தமாக துடைத்து விட்டு, பவுடரை போட்ட பின் சானிட்டரி பேடை பயன்படுத்துவது உகந்தது. இது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை உலர்வாகவும், சுகமாகவும் வைக்க உதவும். இத்தகைய வழிகளை பயன்படுத்தினாலே போதும் சொறி, வெடிப்பு, புண்கள் ஆகியவற்றை தவிர்க்கமுடியும். ஆன்டி-செப்டிக் பவுடர்களை பயன்படுத்துவது மிகுந்த பலனை அளிக்கும். ஆன்டி-செப்டிக் கிரீமின் மேல் இந்த பவுடரையும் பயன்படுத்தலாம்.

மம்மி வேடத்தில் நடித்த ஸ்ரேயா


'மழை' படத்தில் நடித்து மயக்கி, சிவாஜியில் அடடா... என ஆச்சரியப்பட வைத்தவர் ஸ்ரேயா. அடுத்த சிம்ரன் இவர்தான் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. தொடர்ந்து விஜய், விஷால் உட்பட பலரின் படங்களில் நடித்திருந்தாலும் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவருடைய தமிழ் மார்க்கெட்டைப் பதம் பார்த்துவிட்டது.

அதன் பின் அவரால் இங்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் முடியவில்லை, முன்னணிக்கும் வர முடியவில்லை. தெலுங்கிலும் பல புதுமுக நடிகைகளின் வரவால் அங்கும் அவருடைய மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் கண்டது. இருந்தாலும் சமீபத்தில் அவர் நடித்து வெளியான 'கோபாலா கோபாலா' படத்திலும் அதற்கு முன்னர் வெளிவந்த 'மனம்' படத்திலும் நடித்து தற்போது தெலுங்கில் பழைய இடத்தைப் பிடிக்க முயற்சித்து வருகிறார்.

ஆனாலும், அந்த இரண்டு படங்களிலும் சிறு வயது குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அப்படி நடித்தால் என்ன தப்பு எனச் சீறுகிறார் ஸ்ரேயா. “நான் புதுப் புது கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சிக்கிறேன். அதில் அம்மா கதாபாத்திரமும் ஒன்று, அதில் நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. நான் ஒரு நடிகை, எனக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

அப்படிப்பட்டக் கதாபாத்திரம் என்னை ஈர்க்கும் போது நான் கண்டிப்பாக நடிப்பேன். எனக்குப் பிடித்திருக்கிறது, நான் நடிக்கிறேன்,” என பதிலளித்திருக்கிறார். ம்..அழகுப் பெண்களை சீண்டிப் பார்ப்பதே சிலருக்கு வேலையாக இருக்கிறது.

ஆன்மீக பழமாகும் அஞ்சலி


ஆந்திராவில் பிறந்தவரான அஞ்சலி, பின்னர் சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்து விட்டார். அதையடுத்து இரவு பகலாக நடித்துக்கொண்டிருந்த அவரை, யாராவது கோயிலுக்கு அழைத்தால்கூட, செல்ல மறுத்து விடுவாராம்.

வீட்டில் உள்ள மற்றவர்கள் கோயிலுக்கு சென்று வரும் இடைவெளியில் அவர் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்து விடுவாராம்.

ஆனால், அப்படி கோயில்களுக்கு செல்வதை ஒரு காலத்தில் விரும்பாமல் இருந்து வந்த அஞ்சலி, இப்போது பெரிய பக்தி பழமாகி விட்டார். தான் எந்த அவுட்டோர்களுக்கு சென்றாலும், அந்த பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்கிறாராம். அங்குள்ள முதியவர்களிடம் அந்த கோயில்கள் பற்றிய வரலாற்றை ஆர்வத்தோடு கேட்டறிகிறாராம்.

மேலும், முன்பெல்லாம் படப்பிடிப்புகளில் ஓய்வாக இருக்கும்போது ஊர் கதைகளையெல்லாம் அருகில் இருப்பவர்களிடம் வண்டி வண்டியாய் கடலை போட்டு வந்த அஞ்சலி, இப்போது தான் கேள்விப்பட்ட ஆன்மீக கதைகளை அருகில் இருப்பவர்களிடம் சொல்லி, அவர்களையும் பக்தி பழமாக மாற்றுகிறாராம். அதோடு, நான் சினிமாவில் இருந்து வீழ்ந்து விடுவேன் என்று நினைத்த நேரததில் நான் வணங்கிய தெய்வங்கள்தான் என்னை காப்பாற்றின என்றும் மீண்டும் தான் சினிமாவில் பிரவேசித்ததற்கு தெய்வங்களே காரணம் என்பது போல் பேசுகிறாராம் அஞ்சலி.

என்னை அறிந்தால் ரசிகர்களுக்கு கூடுதல் சீன்கள்


என்னை அறிந்தால் படத்தின் நீளத்தைப் பற்றித்தான் இப்போது பேச்சுக்கள் எழுந்துள்ளன. படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள், முன்னதாக 3 நிமிட ஆரம்ப டைட்டில்கள், பின்னதாக 3 நிமிட முடிவு டைட்டில்கள் 2 மணி நேரம் 52 நிமிடங்களாக இருக்கும்.

ஆனால், சென்சாருக்கு 3 மணி நேரம் 8 நிமிடம் ஓடும் படத்தைத்தான் கொடுத்திருக்கிறார்கள். அவர்களும் அதற்கு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

படம் வெளியாகிய பின் ரசிகர்கள் 2 மணி நேரம் 52 நிமிடத்தையும் ஆரவாரத்துடன் ரசித்தால் பின்னர் தேர்வு செய்யப்பட்ட சில திரையரங்குகளில் மட்டும் 3 மணி நேரம் 8 நிமிடம் ஓடும் படத்தைத் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்.

அதற்கும் அதிக வரவேற்பு இருந்தால், அனைத்துத் திரையரங்குகளிலும் கூடுதலாக அந்த 16 நிமிடக் காட்சிகளை இணைக்கவும் வாய்ப்புள்ளதாம்.

அஜித் படத்தைப் பொறுத்தவரையில் அவரது ரசிகர்கள் படம் முழுவதிலும் அஜித்தே வந்தால் கூட ரசித்துத் தள்ளி விடுவார்கள்.

மற்ற நடிகர்களுக்கும், படத்திற்கும் படத்தின் நீளம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அஜித் ரசிகர்கள் அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். பொதுவான ரசிகர்களும் படத்தை ரசிப்பதற்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் முதலில் 2 மணி நேரம் 52 நிமிடப் படமாம். அனைத்து ரசிகர்களும் கொடுக்கும் ஆதரவுதான் அடுத்து, படத்தின் நீளம் எவ்வளவு இருக்கும் என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.

சார்மியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சார்மி. சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் முடிவில் வீரர்கள் அனைவருக்கும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகை சார்மியும் கலந்து கொண்டார்.

அப்போது 18 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் சார்மியிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சார்மியும் சம்மதம் சொல்லியுள்ளார், இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த இளைஞர் சார்மியிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து சார்மி உடனடியாக அந்த இளைஞரை பிடித்து தள்ளியுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் விஷயம் அறிந்து அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சார்மி கூறுகையில், அந்த இளைஞருக்கு 18 வயது இருக்கும், புகைப்படம் எடுப்பதாக சொல்லி பின்னால் தொடுவது, இடுப்பை கிள்ளுவது என சில்மிஷம் செய்தார். நான் அவரை கீழே தள்ளிவிட்டேன்.

சுற்றி இருந்தவர்கள் அவருக்கு அடி கொடுத்தனர். அந்தநபர் சிரித்தபடி இருந்தார். அநேகமாக அவர் சைக்கோவாக இருக்கலாம். இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, இனி என் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

கர்ப்பிணியாக நடிக்கும் காவ்யா மாதவன்


ஒரு பரபரப்பிற்காக காவ்யா மாதவன் கர்ப்பம் என்றோ அல்லது கர்ப்பிணியானார் காவ்யா மாதவன் என்றோ இந்த செய்திக்கு தலைப்பு வைப்பது நியாயமாகாது என்றுதான் நியாயமான தலைப்பை வைத்துள்ளோம்.

மலையாள சினிமாவில் கர்ப்பிணிகளை மையப்படுத்தி கதைபின்னுவது கூட ஒரு ட்ரெண்ட்டாகத்தான் இருக்கிறது. அதேபோல பிரபல கதாநாயகிகளும் கர்ப்பிணிகளாக நடிப்பதற்கு கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவதில்லை என்பதுதான் இதில் ஹைலைட்...

களிமண்னு படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக ஸ்வேதா மேனன் நடித்திருந்தார். அதில் மேனனின் நிஜ பிரசவக்காட்சியை படமாக்கி, படத்தில் இணைத்து ரசிகர்களை அதிரவைத்தார்கள்.. இது கேரளாவில் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தும் அளவுக்கெல்லாம் போனது.

அடுத்து ஐந்து கர்ப்பிணிகளையும் அவர்களுக்கு ட்ரீட்மெண்ட் அளிக்கும் ஒரு மகப்பேறு மருத்துவரையும் சுற்றி பின்னப்பட்ட 'சச்சாரியாயுடே கர்ப்பிணிகள்'படத்தில் கர்ப்பிணிகளாக ரீமா கல்லிங்கல், ஆஷா சரத், சனுஷா, கீதா, சாண்ட்ரா ஆகிய ஐந்து பேர்களும் நடித்திருந்தார்கள்.

அதேமாதிரி 'கொந்தாயும் பூணூலும்' என்ற படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்தார் பாமா. 'தேங்க்யூ' படத்தில் கூட நடிகை ஹனிரோஸ் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருந்தார். இந்தமுறை கர்ப்பிணியாவது காவ்யா மாதவன் டர்ன். ஆம். இப்போது 'ஆகாசவாணி' படத்திற்காக எட்டுமாத கர்ப்பிணியாகி இருக்கிறார்.

அவரது கணவராக நடிகர் விஜய்பாபு நடிக்கிறார். கணவன் மனைவிக்கு இடையே வேலைபார்ப்பது சம்பந்தமாக ஏற்படும் ஈகோ தான் கதைக்களம்.. திருவனந்தபுரத்தில் இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.