செவிலியர் தினம்: வைகோ வாழ்த்து
சென்னை, மே. 12 -ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 12.05.1820_ஆம் ஆண்டு பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் சேவையைத் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாகஅப்பணியில்முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தினார்.
அவர் பிறந்த மே 12 ம் நாளே உலக செவிலியர் தினமாகும்.பிளாரன்ஸ் நைட்டிங் கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களைத் தேர்வு செய்து, மத்திய, மாநில அரசுகள் மே_12 ஆம் நாளில் அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி கண்ணியப்படுத்தி கவுரவிப்பதே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும்.புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றிக் கொண்டு வரும் அனைத்து செவிலியர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி : தினபூமி

0 comments:
Post a Comment