• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

Saturday, 31 January 2015

புலன் விசாரணை 2 சினிமா விமர்சனம்


நடிகர் : பிரஷாந்த்
நடிகை : கார்த்திகா
இயக்கம் : ஆர்.கே.செல்வமணி

அ.செ.இப்ராகிம் இராவுத்தர் தயாரிப்பில், ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த் நடித்து, பல வருடங்களுக்கு முன் வௌிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ''புலன் விசாரணை''. இன்றளவும் பேசப்படும் அந்த வெற்றிக்கு மகுடம் சூட்டும் விதமாக அதே தயாரிப்பாளர், அதே இயக்குநர், அதே வசனகர்த்தா உள்ளிட்டோர், கேப்டன் விஜயகாந்த்திற்கு பதில் 'அஜானுபாகுவான' பிரஷாந்த் நடிக்க உருவாக்கி வௌிக்கொண்டு வந்திருக்கும் திரைப்படம் தான் ''புலன் விசாரணை-2''.

கதைப்படி, இந்திய பெருங்கடலில் அரசாங்கத்தின் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப அதிகாரிகள் 15 பேர் குடும்பத்துடன் காஷ்மீர், குலுமணாலிக்கு சுற்றுலா போகின்றனர். போன இடத்தில் அவர்கள் சென்ற பேருந்து 1000 அடி பள்ளத்தாக்கில் உருண்டு தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகிறது. அதில் அனைவரும் இறந்து விடுகின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பேருந்தை தவறவிட்ட ஒரு பெண் இன்ஜினியரை, டில்லி ரயில்வே நிலையத்தில் அடையாளம் தெரியாத சிலரால் சுடப்படுகிறார்.

அந்த பெண் இன்ஜினியரை டில்லி காவல்துறையில் பணிபுரியும் ஐபிஎஸ்., அதிகாரி சபாரத்தினம், குற்றுயிரும் குலை உயிருமாக காப்பாற்றி, டில்லி மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சையில் தேறிவரும் அப்பெண்ணின் பெற்றோர் என சொல்லிக் கொண்டு வரும் ஒரு நடுத்தர வயது தம்பதியர், ஐபிஸ்., சபாரத்தினம் ஹாஸ்பிட்டலில் இல்லாத சமயம் பார்த்து அந்த பெண்ணை ஐ.சி.யு.வில் வைத்தே தீர்த்து கட்டிவிட்டு எஸ்கேப் ஆகின்றனர்.
இதனால் வெகுண்டெழும் அசிஸ்டண்ட் கமிஷனர் சபாரத்தினம் அந்த கேசை கையில் எடுத்து புலன் விசாரணையில் இறங்குகிறார். அதில் குலுமணாலியில், பெட்ரோலிய தொழில்நுட்ப அதிகாரிகள் சென்ற பேருந்து விபத்தில் தீக்கிரையாகவில்லை, திட்டமிட்ட சதியால் தீக்கிரையானது என்பதில் தொடங்கி இன்னும் பல உண்மைகளும் வௌிவருகிறது. இதன் பின்னணியில் பெட்ரோலிய துறையில் தொடர் ஊழல் புரிந்து கோடி கோடியாக சம்பாதிக்கும் திட்டத்துடன் பல அரசியல் புள்ளிகளும், பெரும்புள்ளிகளும் இருப்பது வௌிச்சத்திற்கு வருகிறது. அவர்கள் அனைவரது முகத்திரையையும் கிழித்து, அத்தனை பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி சபாரத்தினம் தண்டனை வாங்கித்தர போராடுகிறார். அவரது போராட்டத்தில் எதையெல்லாம் இழக்கிறார்? எதையெல்லாம் பெறுகிறார்.? என்பதுதான் ''புலன் விசாரணை-2'' படத்தின் பரபரப்பான மீதிக்கதை!

பிரஷாந்த், ஐ.பி.எஸ்., அதிகாரி சபாரத்தினமாக நீண்ட நாட்களுக்கு அப்புறம் பிச்சி பெடலெடுத்திருக்கிறார். ஆக்ஷ்ன் அதிரடிகளில் சில இடங்களில் புலன் விசாரணை விஜயகாந்த்தையே மிஞ்சி, விஞ்சி நிற்கிறார் பிரஷாந்த். அதற்காக குடும்பத்தை இழந்து, ஏழெட்டு குண்டுகளை உடம்பில் வாங்கிய பின்பும் பிரஷாந்த் உயிர் பிழைத்து எழுவது சினிமாட்டிக்காக இருக்கிறது. மற்றபடி கார்த்திகா, பாருல் யாதவ் உள்ளிட்டோருடன் அவர் ஆடிப்பாடும் டூயட் ரிலாக்ஸ் போனஸ்!

கார்த்திகா, பாருல் யாதவ் என இரண்டு நாயகியர். இருவரில் கார்த்திகா ஹோம்லி 'குல்கந்து' என்றால் பாருல் கிளாமர் 'பாசந்தி...' வாவ்! அஸ்வினி, குயிலி, நிருபராக ஆர்.கே.செல்வமணியின் ரோஜா உள்ளிட்டோரும் நடிகையர் நடிப்பில் கச்சிதம்!

பிரஷாந்த் மாதிரியே, நல்லவர்களாக வரும் மன்சூர் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோருடன், கெட்டவர்களாக வரும் ஆர்.கே., ராதாரவி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் புலன் விசாரணை-2-க்கு புதுமை சேர்த்திருக்கின்றனர். மன்சூரின் வாய்ஸூம், வசனமும் ஆங்காங்கே சென்சாரில் சிக்கி சின்னாபின்னமாவது சற்றே எரிச்சல்.

இராஜராஜனின் ஔிப்பதிவு, ஜோஸ்வா ஸ்ரீதர்-எஸ்.பி.வெங்கடேஷ் இருவரது இசை, லியாகத் அலிகானின் வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், அடிக்கடி எகிறும் பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமான ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழித்திருப்பதற்காகவே இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை பாராட்ட வேண்டும்.

மொத்தத்தில், ''புலன் விசாரணை-2'' - ''போரடிக்காது ரசனை!''


தரணி சினிமா விமர்சனம்








நடிகர் : ஆரி
நடிகை : சாண்ட்ரா
இயக்குனர் : குகன் சம்பந்தம்
இசை : பி.என்சோன்
ஓளிப்பதிவு : வினோத்காந்தி

குமரவேல், ஆரி, கர்ணா ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் சென்னையில் வேலை ஏதும் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இதில் குமரவேல், சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால் நடிப்பதற்கு சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.

பட்டதாரியான கர்ணா, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் சோகத்தில் இருந்து வருகிறார். மற்றொரு நண்பரான ஆரி, தன் அப்பா நடத்தி வரும் ஓட்டலை பார்த்து வருகிறார். இந்த ஓட்டல் அதிக கடனில் இருப்பதால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார் ஆரி.

இவர்களின் வாழ்க்கை சோகத்திலும், கஷ்டத்திலும் செல்வதால் மிகவும் வருத்தமடைகின்றனர். இவர்களின் கஷ்டம் இறுதி கட்டத்திற்கு செல்கிறது. இதனால், மூன்று பேரும் பிரிந்து விடலாம் என்று முடிவு செய்து பிரிகிறார்கள்.

இதில் குமரவேல் ஊருக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு நண்பர்களை விட்டு பிரிகிறார். ஆரியும், கர்ணாவும் அவரவர் வீட்டிற்கு செல்கிறார்கள். இப்படி தோல்வியை சந்தித்து வந்த மூன்று பேரும், வாழ்க்கையில் வெற்றி பெற்றார்களா? மூன்று பேரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இவர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

குமரவேல், ஆரி, கர்ணா ஆகியோர் சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ‘நெடுஞ்சாலை’ படத்தில் சிறப்பாக நடித்த ஆரிதானா! இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நாயகியான சாண்ட்ராவிற்கு படத்தில் வேலையே இல்லை. குறைவான காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்.

மூன்று கதாபாத்திரங்களை வைத்து அதற்கு மூன்று வித்தியாசமான திரைக்கதைகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் குகன் சம்பந்தம். மூன்று கதைகளுமே வெவ்வேறு கோணத்தில் செல்கிறது. ஏதாவது ஒன்றாவது சுவாரஸ்யத்தோடு சொல்லியிருக்கலாம். வலுவில்லாமலேயே திரைக்கதை நகர்கிறது. பழைய படங்களின் சாயல் ஆங்காங்கே தெரிகிறது.

வினோத் காந்தியின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு தெளிவில்லாமல் இருக்கிறது. பாக்யநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘தரணி’ ஆளவில்லை.

டூரிங் டாக்கீஸ் சினிமா விமர்சனம்


நடிகர் : எஸ் ஏ சந்திரசேகர்
நடிகை : சுனு லட்சுமி
இயக்குனர் : எஸ்.ஏ.சந்திரசேகர்
இசை : இளையராஜா
ஓளிப்பதிவு : அருண் பிரசாத்

நீண்ட இடைவெளிக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் படம். தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக முதல் பாதியில் ஒரு கதையையும், இரண்டாம் பாதியில் மற்றொரு கதையையும் சொல்லியிருக்கிறார்.

இப்போது, முதல் பாதியில் உள்ள கதையை பார்ப்போம்..

கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது 25-வது வயதில், மார்வாடி பெண்ணான பாப்ரி கோசை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரனின் அம்மா முழு சம்மதம் தெரிவிக்க அவளை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

அதன்படி, இவர்களது திருமணத்தை சர்ச்சில் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. காதலியின் வரவுக்காக அங்கு காத்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன், நீண்ட நேரமாகியும் அவள் வராததால் அவளைத் தேடி வீட்டுக்கு செல்கிறார். அங்கு நாயகியின் வீடு பூட்டப்பட்டு கிடக்கிறது.

இவர்களது காதல் விவரம் நாயகியின் பெற்றோருக்கு தெரியவந்ததால், அவளை கண்டித்து, ஊரை காலி செய்து போனதும் தெரிய வருகிறது. காதலி எங்கு போனாள் என்று தெரியாமல் பரிதவிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவளை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருகிறார்.

கிட்டத்தட்ட 50 வருடங்களாக தேடியும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. தனது வாழ்நாளின் கடைசி தருவாயில் இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு, அவருடைய நண்பன் மூலமாக தனது காதலி சிம்லாவில் இருப்பதாக தெரிய வருகிறது. 

உடல்நிலையை பற்றி கவலைப்படாமல், காதலியைத் தேடி சிம்லாவுக்கு புறப்படுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். தனது காதலிக்காக வாங்கிய மோதிரத்தை அவளிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் தனது உயிர் பிரிய வேண்டும் என்ற முடிவில் அவளை தேடி அலைகிறார்.

இறுதியில், தனது காதலியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே முதல் பாதி கதை.

தமிழ் சினிமாவில் இயக்குனராக பளிச்சிட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், முதல்முறையாக அரிதாரம் பூசி, கதாநாயகன் வேடமேற்றிருக்கிறார். 75 வயதுடையவராக, முகத்தில் தாடியுடன் வரும் இவருடைய தோற்றம் காதல் தோல்வியை மனதில் அழகாக பதிய வைக்கிறது.

இயக்குனராக இந்த கதையில் இவருடைய அக்கறை ரொம்பவுமே பளிச்சிடுகிறது. எல்லா கதாபாத்திரங்களையும் நன்றாக வேலை வாங்கி நடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, நாயகியாக நடித்துள்ள பாப்ரி கோஸ் புதுமுகம் என்றாலும், அது தெரியாத அளவுக்கு அற்புதமான நடிப்பை வரவழைத்திருப்பது இயக்குனரின் சிறப்பு.

இப்போது இரண்டாம் பாதி கதைக்கு செல்வோம்...

இரண்டாம் பாதியில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜெயபாலன் மற்றும் அவரது மகன் ரோபோ சங்கர் இருவரும் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தல் வேலைகளை செய்து வருகிறார்கள். இதை தட்டிக் கேட்கும் தாசில்தாரை மண்ணில் புதைத்து கொன்றுவிடுகிறார்கள். இதை விசாரிக்க தனியார் தொலைக்காட்சியில் இருந்து அஸ்வினும், காயத்ரியும் அந்த ஊரில் வந்து தங்குகிறார்கள்.

இந்நிலையில், அதே ஊரில் வசிக்கும் நாயகி சுனுலட்சுமி, தாய்-தந்தையை இழந்த நிலையில் தனது தங்கையை மிகவும் அக்கறையுடன் வளர்த்து வருகிறாள். ஒருநாள் தான் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ரகளை செய்யும் ரோபோ சங்கரை, சுனுலட்சுமியின் தங்கை தகாத வார்த்தைகளால் திட்டி விடுகிறாள்.

இதனால், அவளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விடுகிறார் ரோபோ சங்கர். மேலும், அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்று ஊரையே நம்ப வைக்கிறார். ஆனால், தனது தங்கை தற்கொலை செய்துகொள்ளவில்லை. ரோபோ சங்கர் தான் அவளை கொலை செய்திருக்கிறான் என்று சுனுலட்சுமிக்கு தெரிய வருகிறது. அவனை எப்படியாவது பழிவாங்க முயற்சி செய்கிறாள்.

இறுதியில், தனது தங்கை சாவுக்கு காரணமான ரோபோ சங்கரை, சுனுலட்சுமி பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே இரண்டாம் பாதி கதை.

இரண்டாம் பாதியில் நடித்துள்ள நட்சத்திரங்கள் எல்லோரும் படத்தின் கதைக்கு தகுந்தாற்போல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி கதையை தூக்கி நிறுத்துகிறார்கள். இரண்டாம் பாதியின் நாயகியான சுனுலட்சுமி, ஒரு கிராமத்து பெண் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவருடைய அழுத்தமான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

அதேபோல், இதுவரை காமெடியனாகவே நாம் பார்த்து ரசித்து வந்த ரோபோ சங்கர், இந்த படத்தில் முழு வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். முகத்தோற்றத்திலேயே நம்மை சிரிக்க வைக்கும் ரோபோ சங்கர், இந்த படத்தில் அப்படியே எதிர்விதமான தோற்றத்தில் நடித்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. ஆடுகளம் ஜெயபாலனும் தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.

இரண்டாம் பாதி கதையிலும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனே மேலோங்கியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இவர் கடினமாக வேலை வாங்கி அவர்களிடமிருந்து அழகான நடிப்பை வரவழைத்து கதைக்கு வலுசேர்த்திருக்கிறார்.

ஒரு தலைப்பில் இரண்டு கதைகளை வைத்து, ரசிகர்களுக்கு படம் பார்க்கும் புதிய வழியை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஆனால், இரண்டாவது கதையில் சிறுமியை கொலை செய்வதை, பாலியல் பலாத்காரம் செய்து கொல்வது போல் படமாக்கியிருப்பதை தவிர்த்திருக்கலாம். இது மாதிரியான காட்சிகள் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிடுமோ? என்ற பயம் ஏற்படுகிறது நமக்கு.

இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. பின்னணி இசையிலும் இளையராஜா பளிச்சிடுகிறார். அருண் பிரசாத் ஒளிப்பதிவில் சிம்லாவின் அழகு கண்ணை பறிக்கிறது.

மொத்தத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ புதிய பாதை.

இசை சினிமா விமர்சனம்

நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
நடிகை : சாவித்திரி பாணிகிரஹி
இயக்குனர் : எஸ்.ஜே.சூர்யா
இசை : எஸ்.ஜே.சூர்யா
ஓளிப்பதிவு : எஸ் செளந்தர்ராஜன்

திரையுலகில் தன் இசையால் கொடிகட்டி பறந்து வருகிறார் சத்யராஜ். இவருக்கு உதவியாளராக எஸ்.ஜே. சூர்யா பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் தன்னுடைய இசையால்தான் படம் நன்றாக ஓடுகிறது என்று ஆணவமாகப் பேசி இயக்குனர் ஒருவரை அவமானப் படுத்தி அனுப்புகிறார் சத்யராஜ். அவமானப்பட்ட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு வாய்ப்பு கொடுக்கிறார்.

இவரும் சத்யராஜை விட்டு தனியாக இசையமைக்க செல்கிறார். இசையில் பல உத்திகளை கையாண்டு அப்படத்திற்கு இசையமைக்கிறார். அப்படம் வெற்றிப்பெறவே பல படங்கள் வாய்ப்பு கிடைத்து சத்யராஜை பின்னுக்கு தள்ளி புகழின் உச்சிக்கு செல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதை ஏற்று கொள்ள முடியாத சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யாவை அழிக்க திட்டமிடுகிறார்.

இதற்கிடையில் எஸ்.ஜே.சூர்யா, ஒரு இசை ஆல்பம் எடுப்பதற்காக தத்ரூபமான இசையை பதிவு செய்ய காட்டிற்கு செல்கிறார். அங்கு நாயகி சாவித்ரியை பார்க்கிறார். பார்த்தவுடன் காதல் வயப்பட்டு சாவித்ரியின் பெற்றோர்களிடம் பேசி திருமணம் செய்துக் கொள்கிறார்.

திருமணம் செய்துக் கொண்டு வீடு திரும்பும் எஸ்.ஜே.சூர்யாவை வீட்டில் இருப்பவர்கள், உதவியாளர்கள், மேனேஜர் ஆகியோர் இவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஆக்குகிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவும் தான் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளோம் என்று நினைத்து டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்கிறார்.

இந்த இடைவேளியில் சத்யராஜ் மீண்டும் தன் பழைய இடத்தை பிடிக்க படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தன் நிலைமைக்கு யாரோ ஒருவர் தான் காரணம் என்று எஸ்.ஜே.சூர்யாவிற்கு தெரியவருகிறது.

தன் நிலைமைக்கு யார் காரணம் என்று எஸ்.ஜே.சூர்யா கண்டுபிடித்தாரா? சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா இவர்களில் யார் வென்றது? என்பதே மீதிக்கதை.

இசையின் நாயகனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை, திரைக்கதை, இசை, நடிப்பு, இயக்கம் என பல பரிமாணங்களில் தோன்றிருக்கிறார். தன்னுடைய வழக்கமான நடிப்பு இல்லாமல் சற்று மாறுபட்டு தோன்றிருக்கிறார். நடிகராக, மனநிலை பாதிக்கப்பட்டவர் கதாபாத்திரம் இவருக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. இயக்குனராக, படத்தை மூன்று மணி நேரத்திற்குமேல் எடுப்பதற்கு எஸ்.ஜே.சூர்யா மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். அதேபோல் இவ்வளவு நீளத்தை பார்க்க ரசிகர்களும் சிரமப்படுகிறார்கள். இசையமைப்பாளராக, பாடல் அனைத்திற்கும் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். பின்னணியிலும் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சாவித்ரி, நடிக்க அதிக வாய்ப்பு இல்லையென்றாலும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்திற்கு பெரிய பலம் சத்யராஜின் நடிப்பு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லத்தனத்தால் மிரட்டியிருக்கிறார். இவருடைய பெருந்தன்மை, பொறாமை ஆகியவை முகத்தில் இரண்டு விதமாக பிரதிபலித்து இசைக்கலைஞராக நடிப்பில் கலக்கியிருக்கிறார். தன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

எஸ்.செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘இசை’ இரைச்சல்.

கத்தி சண்டையில் மிரட்டும் ஹன்சிகா

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் சண்டைக் காட்சிகளில் நடிப்பது மிகவும் அரிதான ஒன்று. அந்த நாயகிகளை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவதுதான் நமது நாயகர்களுக்கு வேலையாக இருக்கும் போது, அதையும் நாயகிகளிடம் கொடுத்துவிட்டார் நாயகர்கள் என்ன செய்வார்கள்.

தொன்று தொட்டு இப்படிப்பட்ட காட்சிகள் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. வித்தியாசத்திற்காக ரஜினிகாந்த் நடித்த 'நாட்டுக்கு ஒரு நல்லவன்' படத்தில் நாயகியான குஷ்பு சண்டை போட, ரஜினிகாந்த் ஓரமாக நின்று கைதட்டுவது போல காட்சி ஒன்று இடம் பெற்றது. எங்கள் சூப்பர் ஸ்டார் வேடிக்கை பார்த்து கைதட்டுவதா என்று அந்தப் படத்தையே படுதோல்விப் படமாக்கிவிட்டார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள்.

இப்போது காலம் மாறிவிட்டது, நாயகிகளும் சண்டைக் காட்சிகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ், தெலுங்கில் விரைவில் வெளிவர உள்ள, 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்களில் அனுஷ்கா, அந்தக் காலத்தில் இருந்து சண்டைகள் அனைத்தையும் செய்கிறாராம். அதனால், மற்ற நாயகிகளுக்கும் திரைப்படங்களில் சண்டை போடும் ஆசை வந்துவிட்டது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் ஹன்சிகா.

விஜய் ஜோடியாக நடிக்கும் 'புலி' படத்திற்காக ஹன்சிகா தற்போது வாள் சண்டை பயிற்சி பெற்று வருகிறாராம். அவருக்காக வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்கள் வந்து அதைக் கற்றுத் தருகிறார்களாம். கடந்த சில வாரங்களாக ஹன்சிகா அந்தப் பயிற்சியைப் பெற்று வருகிறார். பயிற்சியின் போதே சில காயங்கள் ஏற்பட்டதாம். இருந்தாலும் திரையில் ஆவேசமாக சண்டை போட வேண்டும் என அந்த காயங்களைக் கூட ஹன்சிகா பெரிதாக நினைக்கவில்லையாம். பயிற்சி முடிந்தபின் இன்னும் சில வாரங்களில் ஹன்சிகா வாள் சண்டை போடும் காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன் படமாக்க உள்ளாராம்.

ஆக்ஷன் ஹீரோயின்களாக மாறுவதில், நேற்று அனுஷ்கா, இன்று ஹன்சிகா...நாளை யாரோ....!

கோலிவுட் ரேசில் மதுரிமா


பொங்கலுக்கு வெளியான விஷாலின் ஆம்பள படத்தில் நடித்தவர் மதுரிமா. இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக மதூரிமா நடித்திருந்தார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள மதுரிமா தற்போது ஜுனியர் என்.டி.ஆருடன் டெம்ப்பர் என்ற தெலுங்குப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

மதுரிமா நடித்திருக்கும் டெம்ப்பர் தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இவர் நடித்த முதல் தமிழ் படம் சேர்ந்து போலாமா. வினய்க்கு ஜோடியாக கதாநாயகியாக இப்படத்தில் நடித்திருந்தார் மதுரிமா.

ஏனோ இப்படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால், அதற்கு முன்பாகவே விஷாலின் ஆம்பள படம் வெளியாகிவிட்டது. ஆம்பள படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் மதுரிமாவின் வேடம் கவனத்தை ஈர்க்கவில்லை. தவிர அவருக்கு சின்ன வேடம்தான்! என்றாலும் ஆம்பள படத்தில் நடித்ததால் மேலும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் மதுரிமா.

தமிழ் மலையாளத்தில் ஹாசிம் மரைக்காயர் இயக்கும் க்ரைம் த்ரில்லரான நச் படத்தில் 12 முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. ஹீரோ, ஹீரோயின் என யாரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத இப்படத்தில் அந்த 12 கதாபாத்திரங்கள்தான் முக்கிய பங்கு வகிக்குமாம். அவற்றில் மதுரிமாவும் ஒருவர். மதுரிமா தவிர இப்படத்திற்காக மும்பையிலிருந்தும் சில கதாநாயகிகளை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.

மம்முட்டியின் உறவினரான மக்பூல் சல்மான் எனும் மலையாள நடிகர் இப்படத்தில் நடிக்கிறார்.

கோலிவுட் புது வரவு காவ்யா ஷா



‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை’. இப்படத்தில் சசிகுமார் நாயகனாக வரலட்சுமி நாயகியாக நடிக்கிறார்கள்.

பாலா தனது ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இவர் இப்படத்திற்கு இசையமைப்பது 1000வது படமாகும். செழியன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படம் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை சம்பந்தப்பட்ட கதையாக உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், வரலட்சுமி ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் காவ்யா ஷா என்னும் கன்னட நடிகை நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.  இவர் இப்படத்தில் கரகாட்ட நடன கலைஞராக நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் இப்படப்பிடிப்பை விரைவில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சன்னி லியோன் ஹிட் ரகசியம்



கவர்ச்சி நடிப்பின் மூலம், பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்த சன்னி லியோன், தற்போது ரியாலிட்டி ஷோக்களுக்கு, வழிகாட்டியாக இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சன்னி லியோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற விருப்பப்படும் பாடகர்கள், நடனமாடவிருப்பமுள்ளவர்கள் மற்றும் நடிக்க விருப்பமுள்ளவர்கள், எவ்வாறு, தங்களது பங்களிப்பை ஷூட் செய்ய வேண்டும். என்ன என்ன அம்சங்களை, ரியாலிட்டி ஷோ நடுவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பது போன்ற அறிவுரைகளை பங்கேற்க விரும்புபவர்களிடம் கூறி, அவர்களை, ரியாலிட்டி ஷோக்களில் வெற்றிவாகை சூடுவதற்கான வழிமுறைகளை, சன்னி லியோன் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டில், இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட இந்திய திரைநட்சத்திரம் என்ற பெருமையை, சன்னி லியோன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Friday, 30 January 2015

பஜாஜ் பல்சர் 150 என்.எஸ் அறிமுகம்



பஜாஜ் நிறுவனம் பல்சர் என்ற பெயரிலேயே பல இருசக்கர வாகனங்களை தயாரித்துள்ளது. தற்போது 150 பல்சருக்கு பதிலாக புதிதாக பல்சர் 150 என்.எஸ் என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். புதிதாக அறிமுகப்படுத்தும் பல்சர் 150 என்.எஸ், பல்சர் 200 என்.எஸ் போலவே இருக்கும்.

இதில் கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் உள்ளது. ஒரு சிலிண்டர் கொண்ட வாகனம், காற்றினால் குளிறுட்டப்படும் இயந்திரம் உடன் 3 ஸ்பார்க் ஃப்ளக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளது .15பி.எச்.பி. திறன் கொண்டது. பல்சர் 200சிசி-க்கு பதிலாக 200என்.எஸ். அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

காற்றில் பயணிக்கும் லேசர் பீம்

முதல் முறையாக லேசர் வேகமாக கடந்து செல்லும் பாதையின் காட்சிகளை விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர். வெளிச்சத்தின் ஒற்றை துகள்கள் கண்டறியும் திறன் வாய்ந்த அல்ட்ரா ஹய் ஸ்பீடு கேமராவை பயன்படுத்தி இந்த வியக்கத்தக்க வீடியோவை எடுத்துள்ளனர். படப்பிடிப்பின் போது, ஃபோட்டான்கள் என்று அழைக்கப்படும் தனிப்பட்ட துகள்கள் காற்றுடன் மோதிய சுமார் 10 நிமிடங்களில் இரண்டு மில்லியன் லேசர் பல்சஸ் வகைகளை ஸ்காட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள், பதிவு செய்துள்ளனர்.

நாம் ஒளி கடந்து செல்வதை பார்ப்பது இதுவே முதல் முறை ஆகும் என்று ஹீராய்ட் வாட் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான Genevieve Gariepy தெரிவித்துள்ளார். ஃபோடான்கள் ஃபோகஸ்ட் பீம்மில் கடந்து செல்வதை பார்ப்பது எவ்வளவு கடினமோ, அதேபோல் லேசர் லைட்களை பார்ப்பதும் கடினம். சிறிய அளவிலான டிஜிட்டல் கேமராவில் 1024 பிக்சல்கள் தீர்மானத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 by 32 கிரட் டிடெக்டர்ஸ் கொண்டு ஃபோடான்கள் கடந்து செல்லும் வேகத்தை ஒரு நொடியில் 20 பில்லியன் பிரேம்கள் என்ற விகிதத்தில் பதிவு செய்துள்ளனர்.


லிப்ஸ்டிக் போடலாமா



லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்களால், நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்பது பெண்களுக்குத் தெரியும். இருந்தாலும், உதட்டழகை மெருகேற்றுவதில் ‘லிப்ஸ்டிக்’ தவிர்க்க முடியாத ஒன்று. தரமான ‘லிப்ஸ்டிக்’குகளை அடையாளம் காண்பது எப்படி?

லிப்ஸ்டிக்கில், குரோமியம், காட்மியம், மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளன. இதை பயன்படுத்தும்போது, கடுமையான நோய்க்கு உடல் ஆளாவதோடு, உடல் உறுப்புகளும் பாதிப்படையும் என்கின்றனர். அதிகப்படியான காட்மியமானது, சிறுநீரகத்தில் படிந்தால், அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி விடும்.

ஒரு நாளைக்கு, பலமுறை லிப்ஸ்டிக் போட்டு வந்தால், வயிற்றில் கட்டிகள் வளரும்! பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் இருக்கும் ‘ஈயம்’, நரம்புகளின் செயல்திறனை பாதிக்கும்; தொடர்ந்து, மூளையில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு; மேலும், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளும், மலட்டுத்தன்மையும் கூட ஏற்படலாம்!

இவை தவிர, ‘லிப்ஸ்டிக்’ தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பெட்ரோ கெமிக்கல்கள், பாராபின்ஸ் மற்றும் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு உள்ளிட்டவை, நாளமில்லா சுரப்பிகளில் சீர்குலைவை ஏற்படுத்தி, இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியை தடுக்கும்! மொத்தத்தில், எவ்வளவு தரமான லிப்ஸ்டிக்காக இருந்தாலும், குறைவான உபயோகமே உடல்நலத்திற்கு நல்லது!

பெண்களின் சிறப்புக் குணங்கள்



அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண்.

இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம். உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண்ணுக்கும் பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது.

திருமணத்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையில், புதிய மனிதர்களோடு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டுதான் தற்காலத்துப் பெண்ணும் செல்கிறாள். புதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்துகளோடு ஒத்துப்போகும் பண்பையும் வளர்த்துக் கொள்கிறாள்.

தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண்ணம் அகன்று, தன் கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவன் நோக்கமே தனது நோக்கம், அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள்கிறாள். தனது கணவன் ஆறுதலாக, சுகமாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சூழலை பெண் உருவாக்கி தனது நிலைப்பாட்டை உறுதிசெய்து கொள்கிறாள்.

இதன்மூலம் கணவன் தன்னை மீண்டும் மீண்டும் நாடி வரும் நிலையை உண்டாக்குகிறாள். தனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவனாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள்.

ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில் அரவணைப்புக்கு அடுத்து அவள் விரும்புவது காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் தான். உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, செயல்படுவது ஆகிய ஒவ்வொன்றையும் தனது தாயின் உணர்வின்மூலம் ஒவ்வொரு பெண்ணும் இயல்பாகப் பெறுகிறாள்.

ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை செல்வதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக் கொள்கிறது. வாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது.

ஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெருக்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இருந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவரும் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய்விடுகிறாள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் இது.

பேஸ்புக்கால் சீரியல் நடிகையான தர்ஷினி


பழம்பெரும் சண்டை இயக்குனர் சோமுவின் பேத்தி தர்ஷினி. இந்திரா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்.

அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அடுத்தது என்ற படத்தில் நடித்தார். சினிமா சரியாக வராததால் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது நெஞ்சத்தை கிள்ளாதே, நாதஸ்வரம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்ற தடுமாற்றத்தில் இருந்தார் தர்ஷினி, அந்த நேரத்தில் அவரது பேஸ்புக் தொடர்பில் இருந்த குஷ்புவிடம் நடிக்க சான்ஸ் கேட்டார்.

நேரில் அழைத்து பார்த்த குஷ்பு, தன்னுடைய பார்த்த ஞாபகம் இல்லையோ தொடரில் நடிக்க வைத்தார். குஷ்புதான் தர்ஷினிக்கு ரோல் மாடலாம்.

டாப்சி கலக்கல் பேட்டி


அன்பின் வெளிப்பாடு முத்தம்; அதை காட்சிப்படுத்துவதில்என்ன தப்பு?

'ஆடுகளம்' படத்தில் அதகளம் பண்ணியவர்; முதல் படத்திலேயே, ரசிகர்களின் இதயங்களில் 'பச்சக்' என, பதிந்தவர்; வெள்ளாவி வைத்து வெளுத்து, வெயிலுக்கு காட்டாமல் வளர்ந்த டாப்சி, கொஞ்சி, கொஞ்சி பேசும் அரை குறையான தமிழ் கூட அவ்வளவு அழகு. அவருடன் பேசியதிலிருந்து...

தமிழ் சினிமாவிலிருந்து திடீரென காணாமல் போய் விட்டீர்களே...

எங்கும் போகவில்லை; இந்தியாவில் தான் இருக்கேன். கிடைக்கும் எல்லா படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. என் மனதுக்கு பிடித்த படங்களில் மட்டும் நடிப்பேன். ரசிகர்களிடம் எனக்கென ஒரு நல்ல பெயர் உள்ளது; அதை கெடுக்க விரும்பவில்லை. ஹீரோவுடன் டூயட் பாடிவிட்டு, சில காட்சிகளில் மட்டும் தலையை காட்டி விட்டு போவதில் விருப்பமில்லை. ஒரு காட்சியில் நடித்தாலும், அது, ரசிகர்களின் மனதை வருடும் காட்சியாக இருக்க வேண்டும்.

இரண்டு ஹீரோயின் படங்களில் அதிகமாக நடிக்கிறீர்களே?

'ஆரம்பம்' படத்தில் நயன்தாரா கூட நடித்தேன். 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தில், லட்சுமி மஞ்சுவுடன் சேர்ந்து நடித்தேன். 'வை ராஜா வை' படத்தில், ப்ரியா ஆனந்த் கூட நடிச்சிருக்கேன். கதை கேட்கும் போதே, என் ரோல் என்ன என்பது, எனக்கு நன்றாகவே தெரியும். சின்ன ரோலாக இருந்தாலும், டாப்சி பேர் அங்க நிக்கணும். வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை. இரண்டு ஹீரோயின் படங்களில் நடிப்பது பற்றி எனக்கு கவலையில்லை.

'ஆடுகளம்' அனுபவம் பற்றி...

அந்த படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. மொழி தெரியாமல், மதுரை பகுதி மக்களின் வாழ்க்கை முறை தெரியாமல், அந்த படத்தில் நடித்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்த ஆதரவு தான் இதற்கு காரணம்.

உங்களுக்கு ஏற்ற நடிகர் என யாரை நினைக்கிறீர்கள்?

இதுவரை என்னுடன் இணைந்து நடித்த எந்த நடிகருடனும், எனக்கு நெருக்கமும் இல்லை; பகையும் இல்லை. இப்போது கூட, அனைவரிடமும் பேசுவேன். ஆர்யா, கலகலப்பான ஆள்; சீரியசாக இருந்தாலும், ஏதாவது காமெடி செய்து, சிரிக்க வைத்து விடுவார்.

சீக்கிரமே சரளமாக தமிழில் பேசுவீர்கள் போலிருக்கிறதே...

படித்தது, வளர்ந்தது எல்லாம் டில்லி தான். தமிழில் அவ்வளவாக பேச வராது. ஆனால், திக்கி, திணறி பேசுவேன்; அதுவும், இலக்கண பிழை அதிகமாக இருக்கும். டிரைவரிடமும், சென்னையில் 'ஷாப்பிங்' போகும்போதும் தமிழில் பேசுகிறேன். சீக்கிரமாகவே சரளமாக பேசலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை?

சினிமாவை விட்டு போவதற்குள், மணிரத்னம் சார் இயக்கும் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில்லை; வெறியே உள்ளது. அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

இப்போது தமிழ் சினிமாவில் முத்த காட்சிகள் அதிகமாக வருதே...

காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்றால், முத்த காட்சி வைப்பதில் தப்பே இல்லை. கண்களால் பார்ப்பது மட்டுமே காதல் இல்லை; உதடுகளுடன் உதடுகள் பேசுவதும் காதல் தான். அன்பின் வெளிப்பாடு முத்தம்; அதை காட்சிப்படுத்துவதில் என்ன தப்பு? அதே நேரத்தில், வெறும் விளம்பரத்துக்காகவோ, ஆபாசமாகவோ முத்த காட்சி படமாக்கப்பட்டால், கண்டிப்பாக அது தவறு.

காதலைப் பற்றி இவ்வளவு அனுபவித்து பேசும் நீங்களும், யாரோ ஒரு விளையாட்டு வீரரை காதலிப்பதாக...

இதுவரை இந்த கேள்வி கேட்கவில்லையே என்று பார்த்தேன். முன்பெல்லாம், இதுபோன்ற செய்தி வந்தால், வருத்தப்படுவேன்; இப்போது அந்த கவலையில்லை. என்ன வேண்டுமானாலும் எழுதட்டும் என்ற மனப்பான்மைக்கு வந்து விட்டேன். என் கல்யாணம், காதல் கல்யாணமா என்பதை இப்போது சொல்ல முடியாது. அதற்கு, இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

உங்களுக்கு ரொம்ப பிடித்த உடை?

சொன்னா நம்ப மாட்டீங்க; எனக்கு பாவாடை, தாவணி தான் ரொம்ப பிடிக்கும். 'மறந்தேன் மன்னித்தேன்' எனக்கு பாவாடை, தாவணி அவ்வளவு அழகாக பொருந்தியது.

மலையாள ரேசில் பிரயஹா


கேரளாவின் பிரபலமான இளம் நடனக் கலைஞர் பிரயஹா. அவரை பிசாசு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மிஷ்கின்.

படத்தில் அவர்தான் ஹீரோயின் என்றாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய காட்சிகளிலேயே அவர் அழகான நிஜ தோற்றத்துடன் வருவார்.

பெரும்பாலான காட்சிகளில் பிசாசாக நடித்திருப்பார். இயக்குனர் பாலா தயாரிப்பு, மிஷ்கின் இயக்கம் என பெரிய டீமாக இருந்ததால் நம்பி நடித்தார்.

இந்தப் படத்தில் குறைவான காட்சிகள்தான். அடுத்த படத்தில் நிச்சயம் முக்கியமான கேரக்டர் தருகிறேன் என்று மிஷ்கின் வாக்குறுதி கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

இப்போது மிஷ்கின் அடுத்த படத்தை ஆரம்பிப்பது தாமதமாவதால் மல்லுவுட்டில் வாய்ப்பு தேடினார் அதற்கு பலன் கிடைத்திருக்கிறது.

கார்டூன் என்ற மலையாளப் படத்தில் பகத் பாசில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழில் திகில் படத்தில் நடித்ததைப்போல இதுவும் திகில் படம்தான்.

ஆனால் பேய் படமல்ல. இப்போது சந்தோஷத்தில் இருக்கிறார் பிரயஹா. ஆனாலும் அவரது முழு கவனமும் தமிழ் சினிமா மீதுதான் இருக்கிறது. தமிழிலும் தொடர்ந்து கதை கேட்டு வருகிறார்.

லட்சுமிமேனனின் கெட்டப் ரகசியம்


அட்டக்கத்தி படத்தில் நடித்த நந்திதா அநத படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்ததால் அதன்பிறகு அவரை அந்த மாதிரி வேடங்களிலேயே அதிகமாக நடிகக வைத்தனர்.

அந்த கெட்டப் அவருக்கு கச்சிதமாக பொருந்தியதால் அவர் கிராமத்து பெண்தானோ என்று நினைக்கும் வகையில் அவரது நடிப்பும் இருந்தது.

ஆனால் அவரோ நிஜத்தில் ரொம்ப மாடர்னான பெண்ணாம். தான் பெங்களூரில் இருந்தபோது எப்போதுமே மாடர்ன் கெட்டப்பில்தான் இருப்பாராம்.

நிஜ வாழ்க்கையில் அவர் படங்களில நடிப்பது போன்ற காஸ்டியூம்களை அணிந்து கொண்டதே இல்லை. அந்த வகையில் சினிமா மூலம்தான் வில்லேஜ் பெண்ணாக நான் வாழ்ந்திருக்கிறேன் என்கிறார் நந்திதா.

அதேபோல் இப்போது லட்சுமிமேனனும் அவரை போன்றே கூறியுள்ளார். அதாவது கும்கி படத்தில் இருந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என பக்கா கிராமத்து பெண்ணாக நடித்திருந்தபோதிலும், நிஜத்தில் அவர் மாடர்னான பெண்ணாம். வீட்டிலும் சரி, வெளியில் செல்லும்போதும் சரி ஜீன்ஸ், டீசர்ட் போன்ற உடைகளைத்தான் அதிகமாக விரும்பி அணிவாராம்.அந்த வகையில், சினிமாவில் சிப்பாய் படத்தில் மட்டும்தான் அவரது நிஜ கெட்டப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.

ஆனால் அந்த படம் இன்னமும் கிடப்பில் கிடக்கிறது. ஆக, எனக்கு சினிமாவில் ரியல் கெட்டப் ஒர்க்அவுட் ஆகவில்லை என்கிறார் லட்சுமிமேனன்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா



கடந்தாண்டு, கோலிவுட்டின், 'நம்பர் - 1' ரேசில், ஹன்சிகாவுடன் சளைக்காமல் ஓடி முத்திரை பதித்தார் நயன்தாரா. இந்தாண்டும், நயன்தாரா
கைகளில் கணிசமான படங்கள் உள்ளன. நயனின் இரண்டாவது 'இன்னிங்ஸ்' முடிவே இல்லாமல் தொடருவதால் சக நடிகைகள் ஆச்சரியமும், கலக்கமும் அடைந்துள்ளனர். இப்போது அவருக்கு, மூன்று படங்கள் கைவசம் உள்ளன. 

இந்நிலையில், சிம்புதேவன் படத்தை அடுத்து, அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்தில் தகவல் உலா வருகிறது. இதில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை படக் குழுவினர் அணுகியதாகவும், தற்போது 'பிசி'யாக இருப்பதால், இப்போதைக்கு நடிக்க முடியாது என, நயன் கைவிரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், மற்றொரு முன்னணி நடிகைக்கு துாது விட்டுள்ள படக்குழு, 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?' என, லட்சுமி ராமகிருஷ்ணன் பாணியில், 'கமென்ட்' அடித்து, மனதை தேற்றி வருகின்றனர்.

10 ஆயிரம் பணியிடங்களை நிரப்பப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2015-16 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப்பபடும் என்று அதன் பொறுப்புத் தலைவர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில், இதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

மாவட்ட கல்வித்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்கள் குரூப் 1,2,4 பிரிவுகளில், தேர்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்படும். இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றார்.


நன்றி - தினமணி

உத்தரப்பிரதேச காவல்நிலையத்தில் குவியல் குவியலாக மண்டை ஓடுகள்


உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்துக்குள் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன்னாவோ காவல்நிலைய ஊழியர்களின் குடியிருப்புக்கு அருகே உள்ள பூட்டிய அறை ஒன்றில் பிளாஸ்டிக் கவர்களில் ஏராளமான மண்டை ஓடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 முதல் 25 பைகளில் 100க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் உள்ளன.

இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, பல்வேறு விதமான பதில்கள் வருகின்றன. விசாரணை தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த அறை பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது.


நன்றி - தினமணி

பிப்ரவரி 27ல் வெளியாகும் காக்கி சட்டை


சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கி சட்டை படம் பிப்ரவரி 27ம் தேதி வெளியாகிறது.

சிவகார்த்திகேயன்,ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவர உள்ள படம் காக்கிச்சட்டை. தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இந்த படத்தை எதிர் நீச்சல் துரை.செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவர இருந்தது.

ஆனால்,விக்ரமின் ஐ விஷாலின் ஆம்பள போன்ற படங்கள் வெளிவந்ததால் இப்படம் தள்ளிப் போனது. இந்நிலையில், காக்கி சட்டை படம் வருகிற பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகிறது.இதனை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

நன்றி - தினமணி

சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!


சிவகார்த்திகேயன் கன்னட படத்தில் கௌரவ வேடத்தில் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்து வரும் படம் வஜ்ரகயா. ஹர்ஷா என்கிற அறிமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இந்நிலையில் வஜ்ரகயா படத்தில் சிவராஜ்குமார் வரும் அறிமுக பாடலில் அவருடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடனமாட இருக்கிறாராம்.
சிவகார்த்திகேயன் மட்டுமின்றி இந்தப் பாடலில் மலையாள நடிகர் திலீப் குமார், தெலுங்கு நடிகர் ரவி தேஜா பங்கேற்று நடனமாடப் போகிறார்களாம். ஏற்கெனவே தனுஷ், வஜ்ரகயா படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினமணி

விஜய்யுடன் ஜோடி சேர மறுத்த நயன்தாரா?


சிம்புதேவன் இயக்கும் புலி படம் முடிந்ததும் விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தயாரிக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு. இவர் விஜய்யின் துப்பாக்கி படத்தை தயாரித்தவர். அட்லியின் ராஜா ராணி படத்தில் இருந்த அதே டெக்னிக்கல் குழு இந்த படத்திலும் பணியாற்றுகிறது. அந்த வகையில் ராஜா ராணியில் நடித்த நயன்தாரா தான் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது.
ஆனால் அவர் கால்ஷீட் பிரச்னை காரணமாக படத்தில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் உண்மை அது இல்லையாம், ஐ பட கதாநாயகி எமி ஜாக்சன் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் தான் நயன்தாரா விலகியதாக கிசுகிசுக்கபடுகிறது. இதே பிரச்னை தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் படத்திலும் ஏற்பட்டது.
அதில் நயன்தாரா கொடுத்த டார்ச்சரால் தான் எமி ஜாக்சனை படத்திலிருந்து விலக்கியதாகவும் கூறப்படுகிறது. இப்போது நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். இன்றைக்கு சினிமாவில் ஹீரோக்கள் இணைந்து நடிக்க விரும்பினாலும் அதை நாயகிகள் விரும்புவதில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

நன்றி - தினமணி

சேரனின் "சி2எச்': சென்னையில் பிப்ரவரி 15-இல் தொடக்கம்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சேரனின் "சி2எச்' சினிமா நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
திரைப்படத் தயாரிப்பாளர்களின் அனுமதியுடன் டி.வி.டி.க்களாக மாற்றி வீட்டுக்கே கொண்டு செல்லும் விதத்தில் "சி2எச்' எனும் நிறுவனத்தை இயக்குநர் சேரன் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் தனது இயக்கத்தில் உருவாகியுள்ள "ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை முதலில் வெளியிட உள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஏராளமான புதிய திரைப்படங்களை வெளியிடும் பணிகளில் இறங்கியுள்ளார். கடந்த பொங்கல் பண்டிகையன்று "ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் வெளியாக இருந்தது. ஆனால், அந்தத் தேதியில் மாற்றம் வந்தது. தற்போது இத் திட்டத்தின் அறிமுக விழா பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை இயக்குநர் சேரன் கூறியது:
"சி2எச்' எனும் இந்த முறைக்கு பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக படங்களை வெளியிட முடியாத தயாரிப்பாளர்கள் எங்களுடன் பேசி தங்களது திரைப்படங்களையும் இந்த நிறுவனத்தின் மூலம் வெளியிட ஆயத்தமாகி வருகிறார்கள்.
அதில், தரமான படங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தன.
கடந்த பொங்கல் பண்டிகையன்று இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடாக "ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திரையரங்குகளின் மூலமாகவும் இப்படத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனால் வெளியீட்டு தேதியை ஜனவரி 30-க்கு தள்ளி வைத்தோம். இதற்கான பணிகளில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் தேர்வாகியுள்ள புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இந்தத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக உறுதி அளித்ததுடன், திரையுலக பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து இதன் தொடக்க விழாவை பெரிய அளவில் நடத்துவது என முடிவெடுத்துள்ளார்கள்.
அதன்படி, இந்நிறுவனத்தின் தொடக்க விழா பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்றார் இயக்குநர் சேரன்.

நன்றி - தினமணி

Thursday, 29 January 2015

Chrome Browser- ல் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம்.





உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.

இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர்.

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (UPDATE) வேண்டும்.





2. அடுத்து, கணினியில், க்ரோம் ப்ரவுசரில் https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR CODE) காண்பிக்கப்படும்.




3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும்.

4. மெனுவில் WHATSAPP WEB என்ற தேர்வுக்குச் செல்லவும்.





 5. கணினி திரையில் இருக்கும் கியூ ஆர் கோடினை (QR CODE) மொபைலால் ஸ்கேன் செய்யவும் (உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பு செயல்படவேண்டும்)  




 6. ஸ்கேன் செய்து முடித்தவுடன் தானாக கணினி திரையில் உங்கள் வாட்ஸ் ஆப் பக்கம் தோன்றும்.




'கத்தி'யின் 100வது நாள். முருகதாஸ் நன்றி


விஜய்,சமந்தா நடிப்பில் கடந்த வருட தீபாவளி தினத்தில் வெளியான 'கத்தி' திரைப்படம் இன்று 100வது நூறாவது வெற்றி நாளை கொண்டாடி வருகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கத்தி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிடும்போது, ''கத்தி படத்தை வெற்றிப்படமாக்க உதவிய ரசிகர்களுக்கும், மற்றும் விஜய், தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் என்னுடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

'கத்தி' படத்திற்கு பின்னர் லிங்கா, ஐ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீஸான போதிலும் இன்னும் ஒருசில தியேட்டர்களில் 'கத்தி' வெற்றிகரமாக ஓடி 100வது நாளை எட்டியிருப்பது குறித்து கத்தி படக்குழுவினர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Wednesday, 28 January 2015

விண்டோஸ்: எளிதாகவும் விரைவாகவும் இயக்க டிப்ஸ்

கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தக் கூடியவையே. சில குறிப்புகள் பெர்சனல் கம்ப்யூட்டருக்கானவையாக இருக்கலாம். சில விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8க்கானவையாக தரப்படுகின்றன.

போல்டர்கள் & பைல்களை அமைத்தல்

நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும் My Documents போல்டரிலேயே சேமித்து வைத்தால், நிச்சயம் பைல் ஒன்றைத் தேடிப் பெறுவது சிரமமாக இருக்கும். எனவே, அலுவலக பைல்கள், சொந்த தனிவாழ்க்கைக்கான பைல்கள், குடும்ப உறுப்பினர்களுக்கான பைல்கள் என பல போல்டர்களை அமைத்து, சேமித்து வைப்பது நல்லது. இவற்றில் துணை போல்டர்களையும் அமைத்து, பைல்களைப் பிரித்து அடுக்க வேண்டும்.

டெஸ்க்டாப் சுத்தம்

டெஸ்க்டாப்பில் ஐகான்களைப் பதிந்து வைப்பது, நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை, விரைவாக இயக்கிப் பயன்படுத்த முடியும் என்பதனால்தான். ஆனால், இதற்காக, அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் அவற்றிற்கான ஐகான்களை டெஸ்க்டாப்பில் வைத்தால், அந்த நோக்கமே கெட்டுவிடும். எனவே, அடிக்கடி தேவைப்படாதவற்றிற்கான ஐகான்களை நீக்கிவிடுவதே நல்லது. மேலும், தொடர்புள்ள ஐகான்களை ஒரு குழுவாகவும் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, Word, Excel and PowerPoint ஆகியவற்றிற்கான ஐகான்களை, டெஸ்க்டாப்பில் அருகருகே அமைத்தால், நாம் தேடி அலைய வேண்டியதில்லை.

போல்டர்களைப் பின் செய்திடுக

போல்டர்களை எளிதாக அடைவதற்கு அவற்றை டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கலாம். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து, போல்டர்களை அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் பின் செய்திடலாம். டாஸ்க் பாரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகானை ரைட் கிளிக் செய்தால், பின் செய்யப்பட்ட போல்டர் முதலில் காட்டப்படும். அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் போல்டர்களை மட்டும் இது போல பின் செய்திடவும். இல்லை எனில், இங்கும் கூட்டம் அதிகமாகி, நீங்கள் தேடிப் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.

ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்

மேலே, டெஸ்க்டாப்பில் அதிகமாகும் ஐகான்களை நீக்குவது குறித்து டிப்ஸ் தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினையும் நீங்கள் உருவாக்கிப் பயன்படுத்தலாம். ஒரு டெஸ்க்டாப் விளையாட்டுகள், இன்னொன்று அப்ளிகேஷன்களில் உருவாக்கும் பைல்களுக்கு, இன்னொன்று பாடல், விடியோ காட்சிகளுக்கான அப்ளிகேஷன்கள் எனப் பிரித்து அமைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட டெக்ஸ்டாப் அமைக்க விண்டோஸ் 10 வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. தற்போதைக்கு Dexpot என்ற அப்ளிகேஷன் மூலம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8லும் இதனை அமைக்கலாம். இந்த அப்ளிகேஷனை http://download.cnet...4-10580780.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

முக்கிய போல்டர் ஹைலைட்

நமக்குத் தேவையான போல்டர்களை ஹைலைட் செய்து வைத்துக் கொள்வது நல்லது. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள போல்டர்களில், நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை, ஹைலைட் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை எப்படி மேற்கொள்ளலாம்? அவற்றிற்கு வேறு சில ஐகான்களை, வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக அமைக்கலாம். இதற்கு குறிப்பிட்ட போல்டரில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடுக. இதில் Customize என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு 'Change Icon' என்பதனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பும் படத்தினை ஐகானாக அமைத்திடவும். உங்களுடைய படம் உள்ள ஐகான் தயார் செய்தும் அமைக்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்புளோரர் செட் அப்

போல்டர் ஒன்றில் உள்ள கோப்புகளை, பல்வேறு கோணங்களில், வகைகளில், காட்டும்படி அமைக்கும் வசதி, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ளது. போட்டோ அல்லது விடியோ பைல் இருந்தால், சிறிய அல்லது பெரிய ஐகான்களுடன் காட்டும் வகையில் அமைத்துவிட்டால், கோப்புகளைத் தேடுகையில், இந்த படங்களைப் பார்த்து, எளிதில் விரைவாகத் தேர்ந்தெடுக்கலாம். வேர்ட் டாகுமெண்ட் பைல்கள் என்றால், List/ Details தேர்ந்தெடுத்தால், கூடுதல் வசதிகளைப் பெறலாம்.

டெக்ஸ்ட் மற்றும் ஐகான் அளவை மாற்றுக

பல அப்ளிகேஷன்கள், அவற்றில் உள்ள டெக்ஸ்ட் மற்றும் ஐகான்கள், படங்கள் ஆகியவற்றின் அளவைப் பெரிதாக்கிப் பார்க்க, பின்னர் சிறியதாக மாற்ற வசதிகள் கொண்டுள்ளன. விண்டோஸ் சிஸ்டத்திலும் இதே போல் அமைக்கலாம். டெக்ஸ்ட் மற்றும் ஐகான் அளவினை 125% அல்லது 150% அதிகப்படுத்தினால், பார்ப்பதற்கும் படிப்பதற்கும் எளிதாக இருக்கும். இதற்கு Control Panel > Appearance and Personalization > Display > Make text and other items larger or smaller என்று சென்று அமைக்கவும்.

வால்பேப்பர் மாற்றுக

திரையின் மேலாக, உங்களுக்குப் பிடித்த அல்லது உங்கள் படத்தினை வால் பேப்பராக அமைத்திருப்பீர்கள். இந்தப் படங்களினால், டெஸ்க்டாப்பின் மீது உள்ள ஐகான்களைச் சட்டென்று அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க முடியாது. இந்த சிக்கலைத் தீர்க்க, படங்களின் ரெசல்யூசன் அல்லது வண்ணத்தை மாற்ற வேண்டும். அல்லது போட்டோவினை எடுத்துவிட்டு, எதுவும் இல்லாத, விண்டோஸ் பின்னணியில் வால் பேப்பர் அமைக்கப்பட வேண்டும்.

டெஸ்க்டாப்பில் இயக்க சாதனங்கள்


டெஸ்க்டாப்பில் சில இயங்கும் சாதனங்களுக்கான அடையாளங்களை அமைக்கலாம். இவற்றை gadget என அழைக்கிறோம். இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவை. இவை நமக்குப் பயன் தருபவை. எடுத்துக் காட்டாக காலண்டர், கடிகாரம் போன்றவற்றைக் கூறலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இவை தரப்படாவிட்டாலும், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இவை கிடைக்கின்றன. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இவை எளிதாகக் கிடைக்கும் டூலாக இல்லை. இவற்றை அமைக்க, டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் gadgets என்பதில் கிளிக் செய்திடவும். உடன் பல கேட்ஜட்டுகள் கிடைக்கும். இதில் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இணையத்தில் தேடினால் சில கிடைக்கலாம். அவற்றையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

யூசர் அக்கவுண்ட்ஸ்

உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரை ஒன்றுக்கு மேற்பட்டவர் பயன்படுத்தினால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே யூசர் அக்கவுண்ட் அமைத்து வழங்கலாம். இதனால், ஒருவரின் பணியில் மற்றொருவர் குறுக்கீடு இல்லாமல் அமைக்கப்படும். இதற்கு Control Panel > User Accounts and Family Safety > Add or remove user accounts என்று சென்று அமைக்கவும்.

லைப்ரரீஸ் (Libraries) பயன்படுத்துக

டாகுமெண்ட்ஸ், மியூசிக், போட்டோ மற்றும் வீடியோ போன்ற பைல்களை, விரைவாக வேறுபடுத்திப் பார்த்து பயன்படுத்த லைப்ரரீஸ் நமக்கு உதவும். லைப்ரரீஸ் பிரிவில் போல்டர்களை வெறுமனே போட்டு வைப்பதனைக் காட்டிலும், விண்டோஸ் சிஸ்டத்திடம், ஒவ்வொரு லைப்ரரியிலும், எந்த பைல்களைப் போட்டு வைக்க வேண்டும் என்பதனை வரையறை செய்து அமைத்திடலாம். இந்த பைல்கள் லைப்ரரியில் காப்பி செய்து வைக்கப்படும். இந்த டூலை சிறப்பாகப் பயன்படுத்திட http://www.pcadvisor...dows-libraries/. என்ற முகவரியில் உள்ள கட்டுரையைப் பார்க்கவும்.

பெரிய பைல்களைக் காண்க

பெரிய அளவிலான சில பைல்கள், உங்கள் ஹார்ட் ட்ரைவில் அதிக இடம் பிடிக்கும். பெரும்பாலான பெரிய பைல்கள் நமக்குத் தொடர்ந்து தேவைப்படாததாகவே இருக்கும். நீக்கப்பட வேண்டிய நிலையிலேயே அமைந்திருக்கும். இந்த பெரிய பைல்களைக் கண்டறிய, தனியே எந்த அப்ளிகேஷனையும் நாம் பயன்படுத்த வேண்டாம். விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இதற்கான வசதி உள்ளது. சர்ச் பாக்ஸில் 'size:gigantic' என்று டைப் செய்து எண்டர் தட்டவும். விண்டோஸ் 128 எம்.பி. அளவிற்கு மேல் உள்ள பைல்களை அடையாளம் காட்டும். இவற்றில் உங்களுக்கு தேவைப்படாத பைலை நீங்கள் அழித்துவிடலாம்.

ஷார்ட் கட் தெரிந்து கொள்ளுங்கள்

நாம் நம் கீ போர்ட் மற்றும் மவுஸ் மூலம் மெனுக்களைப் பயன்படுத்தி, நம் பணிகளை முடித்துக் கொண்டாலும், விண்டோஸ் சிஸ்டத்தில், அதிக எண்ணிக்கையில், இந்த வேலைகளுக்கு ஷார்ட் கட் கீகள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் கற்றுக் கொண்டு செயல்படுத்த முடியாது என்றாலும், சில அடிப்படை ஷார்ட்கட் கீகளை (எ.கா. Ctrl-X for Cut, Ctrl-C for Copy, and Ctrl-V for Paste) தெரிந்து வைத்துப் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் 8 குரூப் டைல்ஸ்

விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், திரையில் நிறைய டைல்ஸ்களைக் காண்பார்கள். இவை பல திரைகளில் காணப்படும். விரலால் தொட்டு அல்லது மவுஸால் இழுத்து இவற்றைக் காண வேண்டும். இதற்குப் பதிலாக, அப்ளிகேஷன்களை, குழுவாக ஒரு டைலில் அமைக்கலாம். இதற்கு குழுவாக அமைக்க வேண்டியவற்றுள் முதல் கட்டத்தினை ஸ்டார்ட் ஸ்கிரீனில் காலியாக உள்ள இடத்திற்கு இழுக்கவும். இந்தக் கட்டத்தின் பின்னால், grey bar ஒன்று காட்டப்படும் வேளையில், அந்த டைலை விட்டுவிடவும். இந்த கிரே பார், இது ஒரு புது டைல் என்று காட்டுகிறது. இப்போது, எந்த அப்ளிகேஷன் டைல்களை இதில் குழுவாக அமைக்க வேண்டுமோ, அதில் இழுத்துவிடவும். இதனால், நமக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனைத் தேடிப் பெறுவது எளிதாகிறது. பல திரைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை.

ஸ்டிக்கி நோட்ஸ் பயன்படுத்துக

நீங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளுக்கான நினைவூட்டல் உங்களுக்குத் திரையில் தேவை என்றால், இப்படிப்பட்ட தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டு விண்டோஸ் இயக்கத்தில் தரும் ஸ்டிக்கி நோட்ஸ் (Sticky Notes) என்ற டூலைப் பயன்படுத்தவும். ஸ்டார்ட் மெனு திரைத் தேடல் கட்டத்தில் தேடி இதனை எளிதாகப் பெறலாம். இதனை இயக்கினால், திரையில் காலியாக உள்ள சிறிய கட்டம் அளவில் ”தாள்” ஒன்று கிடைக்கும். இதில் நாம் விரும்பும் நினைவூட்டல் தகவலைப் பதிந்து வைக்கலாம். இதன் வண்ணத்தை நமக்குப் பிடித்தபடி, திட்டமிடும் வகையில் மாற்றலாம். இதில் ரைட் கிளிக் செய்தால், இது போன்ற பல வேலைகளுக்கான ஆப்ஷன்கள் அடங்கிய மெனு கிடைக்கும். உங்களுக்கு மேலும் பல ஸ்டிக்கி நோட்ஸ் தாள் வேண்டும் என்றால், இதன் மேலாக இருக்கும் + அடையாளத்தில் கிளிக் செய்து பெறவும்.

விண்டோஸ் 8 திரையில் தேடல்:

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனு மேலாகக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில், நமக்குத் தேவையான அப்ளிகேஷன்கள், போல்டர்களைத் தேடிப் பெறுகிறோம். ஆனால், இது விண்டோஸ் 8ல் இது சாத்தியமில்லை. ஏனென்றால், அதில் ஸ்டார்ட் பட்டன் இல்லை. ஸ்டார்ட் மெனு கிடைப்பதில்லை. இருப்பினும் ஸ்டார்ட் ஸ்கிரீனில் நீங்கள் இருந்தால், விண்டோஸ் கீயை அழுத்திவிட்டு, டைப் செய்திட முயன்றால், உடன் தேடல் கட்டம் கிடைக்கும். பாதி டைப் செய்திடுகையிலேயே நீங்கள் தேடும் அப்ளிகேஷன் கிடைக்கலாம். மேலும், அப்ளிகேஷனுக்கென தனி கட்டமும் காட்டப்படும்.

துல்லியமாக டெக்ஸ்ட் அமைக்க

விண்டோஸ் உங்கள் டெக்ஸ்ட்டின் தோற்றத்தை சரி செய்திடும் டூல் கொடுக்கிறது. இதன் மூலம் டெக்ஸ்ட் காட்டப்படும் தன்மையை துல்லியமாக மாற்றலாம். இந்த டூலின் பெயர் ClearType Text Tuner. இதனைப் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை மிகத் தெளிவாக அமைக்கலாம். இதனைப் பயன்படுத்திப் பார்த்த பின்னரே, இங்கு சொல்லப்படும் துல்லியம் என்பதனை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த டூலைப் பெற Control Panel > Appearance and Personalization > Fonts > Adjust ClearType text எனச் செல்லவும்.

டிஸ்க் டிபிராக் செய்திடுக

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை மந்தப்படுத்தும் காரணங்கள் பல இருந்தாலும், அதிலிருந்து ஓரளவிற்காவது விடுபட, ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்வது நல்லது. இதனை மேற்கொள்ள, நமக்கு எந்த வேறு நிறுவனங்களின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் எதுவும் தேவையில்லை. விண்டோஸ் சிஸ்டமே நமக்குத் தேவையானதை வழங்குகிறது. இதனை இயக்குகையில் நாம் வேறு எந்த பணியையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. எனவே, கம்ப்யூட்டரில் பணி இல்லாதபோது, இதனை இயக்கி, ஹார்ட் டிஸ்க்கினை நேர் செய்திடலாம். இது பைல்களைச் சீராக அடுக்கி வைக்கும். துண்டு துண்டாகப் பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட பைலை ஒரே இடத்தில் வைக்கும். எனவே, கம்ப்யூட்டரின் செயல்வேகம் அதிகமாகும். Disk Defragmenter என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயர்வால் பயன்படுத்துக

பெர்சனல் கம்ப்யூட்டரில் பயர்வால் செயல்பட்டுக் கொண்டிருந்தால், இணைய இணைப்பில் இருக்கையில், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டருக்குள் நுழையாமல் பாதுகாப்பு கிடைக்கும். எனவே, இதனை இயக்காமல் இருந்தால், உடனே இயக்கி, கம்ப்யூட்டருக்குக் கூடுதல் பாதுகாப்பினைத் தரவும். இதனைப் பெற்று இயக்க Control Panel > System and Security > Windows Firewall என்று செல்லவும்.

டாஸ்க்பார் மறைத்தல்

சில நேரங்களில், உங்கள் மானிட்டர் திரையின் முழு இடமும் உங்களுக்குத் தேவைப்படலாம். ஆனால், கீழாக இருக்கின்ற டாஸ்க் பார் சிறிது இடத்தைப் பிடித்துக் கொண்டு முழு இடமும் தரவிடாமல் செய்திடலாம். இதற்கு டாஸ்க் பாரினை மறைத்துவைத்து, நாம் கம்ப்யூட்டரின் இயக்குவதனை அமைத்திடலாம். டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும்.

இப்போது டாஸ்க் பார் அண்ட் ஸ்டார்ட் மெனு டயலாக் பாக்ஸ் காட்டப்படும். டாஸ்க் பார் டேப்பில் Auto-hide the taskbar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அந்த டயலாக் பாக்ஸிலிருந்து வெளியேறவும். இப்போது டாஸ்க் பார் மறைக்கப்பட்டிருக்கும். உங்கள் கர்சரை டாஸ்க் பார் காட்டப்பட்ட இடத்தின் அருகே கொண்டு சென்றால், டாஸ்க் பார் மீண்டும் எழுந்து வரும்.

பெயிண்ட் பயன்படுத்துக

விண்டோஸ் சிஸ்டம் தன்னிடத்தே கொண்டுள்ள பெயிண்ட் புரோகிராம், மற்ற இது போன்ற தர்ட் பார்ட்டி புரோகிராம்களைப் போல அதிக வசதிகளைக் கொண்டதாக இல்லாவிட்டாலும், முன்பு தரப்பட்டதைப் போல இல்லாமல், சற்று கூடுதல் வசதிகளுடன் தரப்பட்டுள்ளது. போட்டோக்களை இதில் நன்றாக எடிட் செய்திடலாம். படங்களை எடிட் செய்து, இணைத்து, புதிய விளைவுகளைச் சேர்த்து, படங்களை முற்றிலுமாக மாற்றி அமைக்கலாம். உங்கள் விண்டோஸ் சிஸ்டத்திற்கான வால் பேப்பரைக் கூட இதில் தயாரிக்கலாம்.

தெரிந்து கொள்ளுங்கள்

Pinned: 

பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் விரும்பும்போது இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் விஸ்டா ஸ்டார்ட் மெனு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலாக உள்ள பாதிப் பிரிவு, இது போன்ற பின் செய்யப்படும் புரோகிராம்களுக்கானது. எந்த புரோகிராம்களை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ, அவற்றை இதில் பதிந்து வைக்கலாம்.

Carbon Copy:


 மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக “CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப,இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதே இதைக் குறிக்கிறது. அஞ்சல் யாருக்கு எழுதப்படுகிறதோ, அவரின் முகவரி “To:” என்ற பிரிவில் அமைக்கப்படுகிறது.

Blind Carbon Copy :

மின் அஞ்சல் அனுப்புகையில், “BCC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரிவிலும், குறிப்பிட்ட அஞ்சலை நகலாக அனுப்பலாம். ஆனால், இந்தப் பிரிவில் உள்ள முகவரியில் உள்ளவர்கள் பெறுவதனை, அஞ்சலைப் பெறுபவர் மற்றும் கார்பன் காப்பி பிரிவில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமல், சிலருக்கு அனுப்ப இந்த ப்ளைண்ட் கார்பன் காப்பி உதவிடுகிறது. பொதுவாக, இது போன்ற பழக்கத்தை நாகரிகம் கருதி யாரும் பயன்படுத்துவதில்லை ஏனென்றால், இது நம்மிடமிருந்து அஞ்சலைப்  பெறுபவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதாகும். பெறுபவர்களின் பட்டியலை, மற்றவர்களிடமிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், இதனைப்பயன்படுத்துவார்கள்.

Client:

கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.

Doc:

இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.

Domain Name:

இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.

Download:
கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.

Hard Disk :

 (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.

Bandwidth:

 இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.

Network:

நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.

காதுகளை பாதுகாப்பது எப்படி ?




காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்:

காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?’ இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது.

பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக் குழாயின் சுவரின் தோலில் படிந்திருக்கும். இதனால் கிருமிகள், சிறுகாயங்கள், நீர் போன்றவவை காதைத் தாக்காது பாதுகாக்கிறது. அத்துடன் காதை ஈரலிப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. அதிலுள்ள கிருமியெதிர்ப்பு (antibacterial properties) பண்பானது வெளிக் கிருமிகள் தொற்றி, காதின் உட்புறத்தில் நோயை ஏற்படுத்துவதையும் தடுக்கிறது.

காதுக்குடுமி



(Cerumen) என்பது இயல்பாக எண்ணெய்த் தன்மை உள்ள ஒரு திரவமாகும். சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால்
(Sebaceous and Ceruminous glands) சுரக்கப்படுகிறது. ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் ஏற்ப இது நீர்த்தன்மையாகவோ, பாணிபோலவோ, திடமான கட்டியாகவோ இருக்கக் கூடும்.

காதின் சுவரிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், முடித் துண்டுகள், ஆகியவற்றுடன் கலந்து திடப் பொருளாக மாற்றமுறும். தலை முடியின் உதிர்ந்த கலங்கள் அதிகமாக இருப்பதும், எவ்வளவு நீண்ட காலம் வெளியேறாது காதினுள்ளே இருந்தது என்பதும் எந்தளவு இறுக்கமாகிறது என்பதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம். காதுக்குடுமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதால் வழமையாக எவரும் அதனை அகற்ற வேண்டியதில்லை. தினமும் புதிது புதிதாக உற்பத்தியாகி வர பழையது எம்மையறியாது தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும்.

மென்மையான குடுமியானது முகம் கழுவும் அல்லது குளிக்கும் நீருடன் கலந்து வெளியேறிவிடும். அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். சிலருக்கு, பல்வேறு காரணங்களால் வெளியேறாது உள்ளேயே தங்கி இறுகி விடுவதுண்டு. காதுக்குழாய் ஒடுங்கலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்பதும் காரணமாகலாம். சிலருக்கு அது இறுகி, கட்டியாகி வெளியேற மறுப்பதுண்டு. அது அதிகமாகி செவிக்குழாயின் விட்டத்தின் 80 சதவிகிதத்ததை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமாகும். ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். வேறு சிலருக்கு கிருமித் தொற்றும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.

காதுக் குடுமிப் பிரச்சனை என மருத்துவர்களிடம் வருபவர்கள் அனேகர். வருடாந்தம் கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க மக்கள் இப்பிரச்சனைக்காக மருத்துவ உதவியை நாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 2/3 ருக்கு அதாவது 8 மில்லியன் பேருக்கு மருத்துவ ரீதியாக அதனை அகற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இதை அகற்றவது எப்படி?

  1. பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ் நல்லதா, சட்டைப் பின் நல்லதா, நெருப்புக் குச்சி நல்லதா?
  2. இவற்றைக் காதுக்குள் விடுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவும் கிடையாது. அவை காதிலுள்ள மென்மையான சருமத்தை உராசி புண்படுத்தக் கூடும். அல்லது அவை உராசிய இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும். அல்லது அவை காதுக் குடுமியை மேலும் உற்புறமாகத் தள்ளி செவிப்பறையைக காயப்படுத்தலாம். இதனால் நிரந்தரமாக காது கேட்காமல் செய்துவிடவும் கூடும். எனவே இவற்றை உபயோகிப்பது அறவே கூடாது.
  3. காதுக் குடுமியை கரைத்து இளகவைத்தால் தானாகவே வெளியேறிவிடும். மிகவும் சுலபமானது குடுமி இளக்கி நீர்தான். உப்புத் தண்ணீர், சோடியம் பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஓயில் போன்றவையும் உதவக் கூடும். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேட (Waxol, Cerumol)காதுத்துளி மருந்துகளும் உள்ளன. ஐந்து நாட்கள் காலை, மாலை அவ்வாறு விட்டபின் சுத்தமான வெள்ளைத் துணியை திரி போல உருட்டி அதனால் காதைச் சுத்தப்படுத்துங்கள். பட்ஸ், குச்சி போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம். அல்லது சுத்தமான நீரை காதினுள் விட்டும் சுத்தப்படுத்தலாம்.

இவ்வாறு வெளியேறாது விட்டால் மருத்துவர் சிறிய ஆயுதம் மூலம் அகற்றக் கூடும். அல்லதுஅதனை கழுவி வெளியேற்றுவார். இதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஊசி போன்ற குழாய்கள் மூலம் நீரைப் பாச்சி கழுவுவார்கள். இதன்போது எந்தவித வலியும் இருக்காது. சில விசேட சிறு ஆயுதங்கள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும் (Suction device) உபகரணம் மூலம் சுலபமாக அகற்றவும் முடியும்.தற்போதுள்ள குடுமி அகற்றப்பட்ட போதும் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் சேரக் கூடிய சாத்தியம் உண்டு.

மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியுமா?

அதற்கென மருந்துகள் எதுவும் கிடையாது. வாரம் ஒரு முறை குளிக்கும் போது கையால் ஒரு சிரங்கை நீரை காதுக்குள் விட்டுக் கழுவுவது அதனை இறுகாமல் தடுக்கக் கூடும். ஆயினும் காதில் கிருமித் தொற்றுள்ளவர்களும், செவிப்பறை துவாரமடைந்தவர்களும் அவ்வாறு சுத்தம் செய்வது கூடாது.

அடிக்கடி குடுமித் தொல்லை ஏற்படுபவர்கள் 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவோ குடுமியை அகற்றவோ நேரலாம். ஆயினும் காதுக் குடுமியை நாமாக அகற்றுவதை விட, தன்னைத்தானே சுத்தம் செய்யும் படி காதின் பாதுகாப்பை அதனிடமே விட்டு விடுவதுதான் உசிதமானது.

கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!!!


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதற்கேற்ப நாம் ஒவ்வொருவரும் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். இன்று பல அழகு நிலையங்கள் வந்த போதிலும், அவற்றில் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால், நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சிக்கனமாகவும், நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம்.

அதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம். கரும்புள்ளிகள் பெரும்பாலும் முகத்தில் தான் தென்படும். பெரும்பாலும் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில் தான் தென்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களாக மாறும். ஆகவே ‘வரும் முன் காப்போம்’ என்னும் பழமொழிக்கேற்ப, அவை பருக்களாக மாறும் முன், சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால், நிச்சயம் அந்த கரும்புள்ளிகளை போக்குவதோடு, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம். இப்போது இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினா,ல் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

சர்க்கரை

ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும் கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால், அவை குறையக்கூடும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

தயிர்

2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும்

ஆலிவ் ஆயில்

சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது சில நிமிடங்கள் தடவி காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

ஆயில் மசாஜ்

ஆலிவ் எண்ணெயை கொண்டு முகத்தை அடிக்கடி மசாஜ் செய்து வரவும். இது கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும். அதனால், முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி கரும்புள்ளிகள் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி, சூடான நீரில் நனைத்த துணியை முகத்தில் மூடி 15 நிமிடங்கள் காய வைக்கவும். இதனால் இந்த வெதுவெதுப்பான துணி சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, கரும்புள்ளிகளை தளர்வடையச் செய்யும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை தினமும் சுத்தம் செய்யவும். இது கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் வராமல் தடுக்கும்.

உப்பு நீர்

கருவளையங்கள் வராமல் இருக்க, முகத்தை தினமும் உப்பு நீரால் சுத்தம் செய்யவும்.

தக்காளி சாறு

தக்காளிச் சாற்றினை முகத்தில் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்தால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

கற்றாழை

கற்றாழைச் சாற்றினை முகம், கன்னங்கள் மற்றும் மூக்கு பகுதிகளில் தடவி ஊற வைத்து கழுவினால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.