Sunday, 4 May 2014

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு


சென்னை, மே, 4–
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தின் அருகே தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 17.3 மி.மீ., கொடைக்கானலில் 15.6 மி.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில் 10.7, புதுச்சேரி 6.3, பாம்பன் 4.2, அதிராம்பட்டணம் 4.4, காரைக்கால் 1.5., மதுரை, பாளையங்கோட்டையில் தலா 1.2, தூத்துக்குடியில் .9 மி.மீ மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி - மாலை மலர்

0 comments:

Post a Comment