Sunday, 25 January 2015

சந்தானத்துக்கு ஜோடியாகும் பானு

நயன்தாரா சாயலில் மலையாளததில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர் பானு. நயன்தாராவை ஐயா படத்துக்காக தமிழுக்கு
கொண்டு வந்த அதே டைரக்டர் ஹரியே பானுவை தாமிரபரணி படத்துக்காக தமிழுக்கு கொண்டு வந்ததால், அடுத்து இவரும் நயன்தாரா போன்று முன்னணி நடிகையாகிவிடவார் என்ற எதிர்பார்ப்புகள் அப்போது இருந்தது.
அதற்கேற்ப படமும் வெற்றி பெற்றதால் சில படங்களும் பானுவுக்கு கிடைக்கும் சூழல் இருந்தது.ஆனால் அந்த நேரம் பானுவின் குடும்பத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகளால் அவர் சில மாதங்களாக கேரளாவுக்கு சென்றுவிட்டார். அதனால் தேடிவநத படங்களில்கூட அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், ஆர்கே நடித்த அழகர்மலை மற்றும் சட்டப்படி குற்றம், பொன்னர்சங்கர், மூன்று பேர் மூன்று காதல் , தேசிங்கு ராஜா ஆகிய படங்களில் நடித்த பானு, தற்போது வாய்மை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இதில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, பானு சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தான் ஹீரோ ஆவதற்கு முன்பு வெறும் காமெடியனாக மட்டுமே நடித்து வந்த சந்தானம் இந்த படத்தில் ஆர்யாவுக்கு இணையான இன்னொரு ஹீரோவாகவே நடிப்பதால், பானுவுக்கும் தமன்னாவுக்கு இணையான வேடம் கொடுக்கபபட்டுள்ளதாம். அதனால் ஆரம்பத்தில் சந்தானத்துக்கு ஜோடி என்றதும், தன்னை காமெடி காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டே கமிட்டான பானு, இப்போது இன்னொரு ஹீரோ ரோலில் நடிக்கும் சந்தானத்துக்குத்தான் தான் ஜோடி என்பது தெரிந்ததும் உற்சாகத்துடன் காணப்படுகிறார். அதோடு, தனது கோலிவுட் நண்பர்களிடம், தமன்னாவுக்கு இணையாக நானும் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறேன் என்றும் பில்டப் கொடுத்து வருகிறார்.

0 comments:

Post a Comment