Wednesday, 28 January 2015

ஸ்லிம் பியூட்டி ஆகணுமா?

யாராவது ஒருத்தர் சொல்லட்டுமே எனக்கு ஸ்லிம்மாக ஆசையில்லைனு...  உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமில்லாமல் போதுமான சத்துகள் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ளாததும் உடல் பருமனுக்கு ஒரு காரணமாக அமைகிறது.  இதுமட்டுமல்ல அதிகநேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் முக்கிய காரணிகளில் ஒன்று. எளிய முறையில் எப்படிதான் பருமனைக்குறைப்பது என்கிறீர்களா இதோ சில டிப்ஸ் உங்களுக்காக

சாதாரணத் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக சோம்புவைக் கலந்து தண்ணீரைப் பருகுவதால் உடம்பிள் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாகச்சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

பப்பாளியை சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர்த்து மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் இரண்டையும் பாலில் சேர்த்து காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தால் சுரைக்காயை வாரத்திற்கு இரண்டு தரம் சாப்பிட்டு வந்தால் வயிற்று சதை குறையும். வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் சாறு,  இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதை தவிர்க்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பு கரையும் உடல் எடையும் குறையும் புத்துணர்வாகவும் இருக்கும்.

என்ன செய்யவேண்டும் பருமனைக் குறைக்க:

எளிய முறையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். பட்டினி கிடத்தல் கூடாது. அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது. கிழங்கு வகைகளான உருளைக்கிழங்கு, சேனைக்கிழுங்கு, போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும். இனிப்பு, சர்க்கரை போன்றவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். முக்கியமாக எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவைதவிர்த்து வெள்ளைப்பகுதியை உட்கொள்ளலாம்.

கூல்டிரிங்ஸ்சை நிறுத்திவிடவேண்டும். தினமும் பழங்கள் 2 முதல் 4 வரை உட்கொள்ளலாம். இரவு உணவுகளுக்கு அவரை பீன்ஸ், கேரட், கோஸ், காலிஃபிளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கிகாய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒரு காய்களை தினமும் 200கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். பயறுவகைகளான தட்டைப்பயறு, பச்சைப்பயறு, போன்றவற்றையும், கீரைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

பாலில் கூட குறைந்த கொழுப்பு சத்துள்ள டோன்டு மில்க் வகைகளையே பயன்படுத்துங்கள். உணவுப்பழக்கத்தை சரிவிகிதமாக்கி உண்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரண்டு விஷயத்தில் கவனம் கொள்ளவும் ஒன்று உணவு, மற்றொன்று உடற்பயிற்சி. இரவு உணவாக சப்பாத்தி, ரொட்டி, என்று சிம்பிளாக சாப்பிடுங்கள்.  தேநீர், காபி என்று சூடான பானம் முதல் ஆரஞ்சு, கோலா, போன்ற குளிர் பானம் வரை வேண்டாம் வேண்டாம் வேண்டமே வேண்டாம்

0 comments:

Post a Comment