தமிழில்
ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இவர்
அதற்கு முன்பே தமிழில் நடித்த யாகவராயினும் நா காக்க படம்
இன்னும் திரைக்கு வரவில்லை. படத்தை வெளியிட சரியான நேரம் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார் அப்பட நாயகனும், தயாரிப்பாளருமான ஈரம் ஆதி. இந்த நிலையில், டார்லிங் படம் ஹிட்டடித்தபோதும், தற்போது தமிழில் புதிய படங்களுக்கான கதை கேட்காமல் கேரளாவில் முகாமிட்டிருக்கிறார் அவர். காரணம், மலையாளத்தில் அவர் நடித்த நான்கு படங்களுமே அவருக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததாம். அதோடு அப்படங்களில்அவருக்கு அமைந்த வேடங்கள் மனதளவில் திருப்தி கொடுத்ததாம். அதனால்தான் இப்போதும், ருத்ர சிம்ஹாசனம், ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா ஆகிய மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி. இந்த படங்களில் ஹீரோக்கள் இருந்தபோதும், இவரது கதாபாத்திரத்தை சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளதாம், அதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் நடித்தபோதும், மலையாளத்திற்கே முதலிடம் கொடுக்கிறாராம் நிக்கி.

0 comments:
Post a Comment