‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை’. இப்படத்தில் சசிகுமார் நாயகனாக வரலட்சுமி நாயகியாக நடிக்கிறார்கள்.
பாலா தனது ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இவர் இப்படத்திற்கு இசையமைப்பது 1000வது படமாகும். செழியன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
இப்படம் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை சம்பந்தப்பட்ட கதையாக உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், வரலட்சுமி ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் காவ்யா ஷா என்னும் கன்னட நடிகை நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர் இப்படத்தில் கரகாட்ட நடன கலைஞராக நடித்து வருகிறார்.
விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் இப்படப்பிடிப்பை விரைவில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment