Tuesday, 27 January 2015

இலவசமாக விண்டோஸ் 10 மென்பொருளை டவுன்லோடு செய்யலாம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 மென்பொருளை இலவசமாக விண்டோஸ் மற்றும் விண்டோஸ் போன் யூசர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள விண்டோஸ் யூசர்களுகள் இலவசமாக புதிய விண்டோஸ் 10 மென்பொருளை இணையதளத்தில் பதிவிறக்கி அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் போன்கள், டேப்லட்கள் மற்றும் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோல் ஆகியவற்றில் இயக்கும். 

விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் போன் 8.1 மென்பொருளை பயன்படுத்தும் யூசர்கள், இலவசமாக விண்டோஸ் 10 இணையதளத்தில் பதிவிறக்கி அப்டேட் செய்து ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம் என்று மையர்சன் கூறியுள்ளார். இது மைக்ரோசாப்ட்டின் கார்டனா டிஜிட்டல் அசிஸ்டன்ட் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்க்கு பதிலாக, ஸ்பார்டன் என்ற ஒரு புதிய ப்ரவுஸர் உடன் வருகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் கார்டானா பெர்சனல் அசிஸ்டன்ட் இருப்பதால், சிரி (Siri) கொண்டு யூசர்கள் கணினியுடன் 'ஹாய் கார்டானா' என்று பேச முடியும்.

விண்டோஸ் 10 மென்பொருள் மொபைல்களுக்கும் வழங்கப்படுகின்றது, அதனால் இதை கொண்டு செயளிகளை கணினியுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கார்டனா, ஒரு புதிய வழி தொடர்பை வழங்குகிறது, இதுதான் உலகின் மிக தனிப்பட்ட உதவியாளராக (பெர்சனல் அசிஸ்டன்ட்) உள்ளது. மேலும் நிறுவனம் இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை என்ற பழைய ப்ரவுசரை விலக்கியுள்ளது. 'நாங்கள் புதிய ப்ரவுசரை உருவாக்க இது தான் மிகச் சிறந்த நேரம் என்று நினைத்தோம்' என்று பெல்ப்யோரி கூறியுள்ளார். 

இந்த ப்ரவுசரானது, யூசர்கள் வலைபதிவின் பக்கங்களில் ஒரு பேனா பயன்படுத்தி குறிப்புகளை எடுத்து சக ஊழியர்களுக்கு அனுப்பலாம். மேலும் இதில் இணையதள வசதி இல்லாமல் படிப்பதற்காக பக்கங்களை சேமிக்கும் வசதியும் கொண்டுள்ளது. மேலும் ஸ்பார்டன் ப்ரவுசரானது கூகிள் குரோம் ப்ரவுசரை போல இருக்கும் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைவிட வேகமாக இருக்கும். விண்டோஸ் 10 மென்பொருள் 2015ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கும் என்று உறுதி செய்யப்பட்டது. 

விண்டோஸ் 10ல் உள்ள ஸ்டார்ட் மெனு, விண்டோஸ் 7ல் காண்பதுபோல தோன்றும், மற்றும் அதன் பக்கத்தில் திறக்கப்படும் டைல்ஸ் விண்டோஸ் 8ல் காண்பதுபோல தோன்றும். டெஸ்க்டாப்,  எக்ஸ்பாக்ஸ், ஸ்மார்ட்போன், டேப்ளெட் போன்ற அனைத்திலும் விண்டோஸ் 10 பயன்படுத்த முடியும். ஆப்ஸ்களை எளிதாக வைத்துக்கொள்வதோடு மல்டி டெஸ்க்டாப் வசதியும் இதில் அடங்கியுள்ளது.

0 comments:

Post a Comment