Monday, 26 January 2015

Xiaomi Mi நோட் ப்ரோ ஸ்மார்ட்போன்

Xiaomi நிறுவனம் Xiaomi Mi நோட் ப்ரோ என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் நிறுவனம் Mi நோட்டை விட Mi நோட் ப்ரோ
சிறந்தது என்றும் வலியுறுத்தியுள்ளது. Xiaomi Mi நோட் ப்ரோ CNY 3299 (சுமார் ரூ. 32,900) விலையில் கிடைக்கும் மற்றும் பரந்த அளவில் உற்பத்தி செய்து மார்ச் மாத இறுதிக்குள் நுழையும். 

Mi நோட் ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக இது LPDDR4 ரேம் 4GB மற்றும் Adreno 430 ஜிபீயூ உடன் இணைந்து ஒரு 64 பிட் அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 ப்ராசசர் (குவாட் கோர் ARM கார்டெக்ஸ் A57 மற்றும் குவாட் கோர் கார்டெக்ஸ் A53) மூலம் இயக்கப்படுகிறது. ஒற்றை சிம் கொண்ட Xiaomi Mi நோட் ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட் இயங்குகிறது. 

Xiaomi Mi நோட் போன்றே Xiaomi Mi நோட் ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 515ppi பிக்சல் அடர்த்தி உடன் 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.7 இன்ச் QHD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது, விரிவாக்கக்கூடிய சேமிப்பு பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. இது, LTE கேட்.9 நெட்வொர்க்குகள் ஆதரிப்பதுடன் 450Mbps வேகம் வரை பதிவிறக்கக்கூடியது. 

மற்ற குறிப்புகள் Xiaomi Mi நோட் போன்றே Xiaomi Mi நோட் ப்ரோ ஸ்மார்ட்போனிலும் இருக்கும். இதில் ஒரு சிக்ஸ்-எலிமென்ட்ஸ் லென்ஸ், OIS, ஒரு சோனி CMOS சென்சார், மற்றும் பிலிப்ஸ் இருந்து டூ-டோன் ஃபிளாஷ் உடன் இணைந்து 13 மெகாபிக்சல் பின்புற கேமரா வருகிறது. மற்றும் பெரிய 2 மைக்ரான் பிக்சல்கள் கொண்ட 4 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குயிக் சார்ஜ் 2.0 டெக்னாலஜி உடன் 3000mAh பேட்டரி கொண்டுள்ளது. 

ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi 802.11 n/ ac, ஜிபிஎஸ், ப்ளூடூத், NFC, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிஎஸ்எம் மற்றும் 3ஜி ஆகியவை அடங்கும். மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், ஆம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கய்ரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

Xiaomi Mi நோட் ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்:


  • ஒற்றை சிம்,
  • 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.7 இன்ச் QHD டிஸ்ப்ளே,
  • LPDDR4 ரேம் 4GB,
  • அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 ப்ராசசர்,
  • 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 4 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • Wi-Fi 802.11 n/ ac,
  • ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத்,
  • NFC,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ஜிஎஸ்எம்,
  • 3ஜி,
  • ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட்,
  • 3000mAh பேட்டரி.

0 comments:

Post a Comment