Sunday, 25 January 2015

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட நீலிமாராணி

சின்னத்திரை, சினிமா, குடும்ப வாழ்க்கை என்று மாறி மாறி பணயம் செய்கிறவர் நீலிமா ராணி, தற்போது ரோமாபுரி பாண்டியன், வாணி ராணி,
தாமரை தொடர்களில் நடித்து வருகிறார். ஒரு சினிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது நீலிமா ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார். எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் முக்கிய கோவில்கள் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு அங்கு சென்று வழிபாடு செய்கிறார். சமீபத்தில் பத்ரிநாத், கேதர்நாத், ஹரித்துவார் பகுதிகளுக்கு 10 நாள் ஆன்மீக சுற்றுலா சென்று வந்திருக்கிறார். அடுத்து கைலாஷ் யாத்திரை செல்ல திட்டமிட்டிருக்கிறார். "வாழ்க்கையில் மன அமைதிக்கும், தெளிவான முடிவுகள் எடுப்பதற்கும், நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வதற்கும் ஆன்மீகம்தான் சிறந்த வழி" என்கிறார் நீலிமா.

0 comments:

Post a Comment