ஹீரோக்களுக்கு காமெடியன்கள் காதல் தூது சென்று கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. இப்போது காமெடியன்களும் தங்களுக்கும் ஜோடி
வேண்டும் என்று கூறுகிறார்கள். அதனால் சந்தானத்துக்கு படத்துக்கு படம் ஒரு ஜோடி நடிகை கொடுத்து வருகிறார்கள். அதிலும் அவரும் கதாநாயகன் ஆனபிறகு பிரபல நடிகைகளே அவருக்கு ஜோடி சேர்த்து வருகின்றனர். இந்தநிலையில், சூரியும் தனது ரேஞ்சை உயர்த்திக்கொள்ளும் முயற்சியாக, தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து தான் நடித்து வரும் ரஜினி முருகன் படத்தில் தனக்கும் ஒரு ஜோடி வேண்டும் என்ற கேட்டு வாங்கியுள்ளாராம். அதனால் ஏற்கனவே இவர்களை இணைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் தற்போது இந்த படத்தில் சூரிக்காக ஆண்ட்ரியா என்றொரு ஹாலிவுட் நடிகையை இறக்குமதி செய்திருக்கிறர்ர். இந்த ஆண்ட்ரியா, ஹாலிவுட் நடிகை என்றபோதும் சரளமாக தமிழ் பேசுகிறாராம். இங்கிருந்து அங்கு போய் செட்டிலான நடிகையாம். அதனால் தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாதவரான சூரிக்கு அவருடன் நடிப்பதற்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லையாம். அதேசமயம், அவருடன் அவ்வப்போது ஆங்கில வார்த்தைகளில் அர்த்தங்களை கேட்டறிந்து கொண்டாராம். மேலும், காமெடியனுடன் நெருக்கமாக நடிக்க இங்குள்ள நடிகைகள் தயங்கி வரும் நிலையில், ஆண்ட்ரியாவோ, எந்தவித தயக்கமும் இன்றி சூரியுடன் கட்டிக்கலந்தாடி விட்டாராம். அவரது பர்பாமென்ஸையும் தாராள மனதையும் பார்த்து இப்போது மேலும் இரண்டு படங்களுக்கு கமிட்டி பண்ணியிருக்கிறார்களாம். தமிழில் ஏற்கனவே ஒரு ஆண்ட்ரியா இருந்தபோதும், தனது சொந்த பெயரான ஆண்ட்ரியாவை சினிமாவுக்காக மாற்றப்போவதில்லை எனறும் சொல்கிறார் இந்த ஹாலிவுட் ஆண்ட்ரியா.

0 comments:
Post a Comment