• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

Monday, 9 February 2015

தன்ஹா மூவீஸ் சார்பில் நிஜ தாதாக்கள் நடித்த அதிரடி படம் | படத்தை கதை எழுதி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி

தன்ஹா மூவீஸ் சார்பில் நிஜ தாதாக்கள் நடித்த அதிரடி படம் | படத்தை கதை எழுதி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி 

 இப்போதெல்லாம் படத்துக்குப் படம் தாதாக்களைப் பார்க்கிறோம். தாதாக்களாக புதுப்புது நடிகர்கள் நடிப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நிஜ
தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா? அப்படி ஒரு படமாக உருவாகியிருப்பதுதான் சபரன்.

இந்தப் படத்தை கதை எழுதி தயாரித்துள்ளது முதல் நடித்துள்ள நடிகர்கள் வரை பலரும் நிஜ தாதாக்கள்தான்.

தன்ஹா மூவீஸ் சார்பில் படத்தை கதை எழுதி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி என்பவர்.

இவர் கேரளாவில் பிரபல தாதா. பல நிழல் உலகம் இவருக்கு ஒளி உலகமாகத் தெரியும் அளவுக்கு பரிச்சயம்.

சபரன் படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.புவனேஷ். இவர் ஏற்கெனவே தமிழில் ஆறாவது வனம் ,மலையாளத்தில் பகவதிபுரம் படங்களை இயக்கியவர்.

தாதா ஒருவர் நாயகனாக நடித்தாலும் ஏற்று நடிக்கிற கதாபாத்திரம் போலீஸ் அதிகாரி.

இப்படத்தின் கதை என்ன?

கோவை அருகே ஒரு குண்டுவெடிப்பு நடக்கிறது. அது பற்றி புலனாய்வு செய்ய புறப்படுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி.

விசாரணை செய்யத் தொடங்கினால் தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பது போல பல நிழல் உலக தாதாக்கள், பலநாட்டு தீவிரவாதிகள், அரசியல் புள்ளிகளின் தொடர்புகள், அரசியல்வாதிகளின் தேச துரோகங்கள் எல்லாம் அம்பலமாகின்றன.

ஆணிவேர் எது என்று கண்டறியும் முயற்சியே சபரன் படக்கதை.சபரன் என்றால் வேட்டைக்காரன். ஒரு வேட்டைக்காரனாய் எழுந்து புறப்பட்டு நாசக்கார கும்பலை வேரறுப்பவன்தான் இந்த நாயகன் சபரன்.

இந்தப் படத்தின் கதை ,திரைக்கதை அமைத்து பல கதாநாயகர்களிடம் படமாக்க முயன்று பல லட்சங்கள் செலவு செய்து அலைந்திருக்கிறார் அம்ஜத்.

ஆனால் நம் நாயகர்கள் இந்த நிஜ தாதாவுக்கே தண்ணி காட்டிவிட்டார்கள். கடைசியில் தானே தயாரிப்பது என்று முடிவெடுத்து இறங்கி விட்டார்.

இயக்குநரைக் கூட தடாலடியாகவே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஒரு நண்பர் மூலம் இயக்குநருக்கு இந்த தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

கடத்தாத குறையாக கேரளாவில் ஒரு படகுவீட்டில் ஒரு நாள் அடைத்து வைத்து மிரட்டாத குறையாக ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இது ஜிகர்தண்டா அசால்ட் சேது கதைபோல இருக்கிறதே என்றால்" ஆமாம் என்கிறார் இயக்குநர் புவனேஷ்.

"சினிமா ஆசையில் ஒரு அப்பாவி டைரக்டரை மிரட்டி தன்னை கதாநாயகனாக்கும் ஒருவனின் கதைதான் ஜிகர்தண்டா . அதைப் போலத்தான் என்னையும் ஒரு வகையில்

டைரக்டர் ஆக்கினார்கள் எனலாம். கதை, திரைக்கதை, லொக்கேஷன் எல்லாம் தயார்செய்து வைத்திருந்தார்கள். நீ டைரக்ட்செய்தால் போதும் என்றார்கள். அப்படி என்னை சிக்க வைத்த படம்தான் சபரன் என்கிறார்.

அப்படி மிரட்டி எடுத்த படம் எப்படி வந்திருக்கும்?

"அவர்களது உருட்டு மிரட்டலை முரட்டு அன்பு என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் தெரியாமல் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று நினைத்தேன்.

பிறகுதான் அவர்களின் இயல்பே அதுதான் என்று புரிந்து கொண்டேன். தயாரிப்பாளரின் சினிமா பற்றிய ஆர்வம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

போலீஸ் பற்றி எத்தனையோ படம் வந்திருக்கும். இது போலீஸின் பெருமையைக் கூறுகிற படமாக இருக்கும்.இது வழக்கமான படமாக இருக்காது. காதல், காமெடி எல்லாம் இருக்காது.

முழுநீள ஆக்ஷன் படம். எனக்கு எல்லா வசதியும் கொடுத்தார்கள்.படப்பிடிப்பில் சம்பளத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை. "என்கிறார்.

புதுமுகங்கள் பிரஷாந்தி, தீபிகா என்கிற மாடல்கள் இருவர் நடித்துள்ளனர். பிரதான வில்லனாக டார்வின் க்ரூஸ் நடித்துள்ளார். காதல் தண்டபாணி, அப்புக்குட்டி, வின்சென்ட் அசோகன், தலைவாசல்விஜய், போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர் . துபாயில் உள்ள நிஜமான தாதாக்களும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பிடங்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, பொள்ளாச்சி, கொடைக்கானல்,பாண்டிச்சேரி, வால்பாறை, கேரளாவில் கொச்சி, கொல்லம் மட்டுமல்ல ஹிமாச்சலப் பிரதேசத்தில் பனிமூடிய ரோடாக் பார்க் ,அந்தமான் என இந்தியாவில் பல பகுதிகளிலும் படமாகியுள்ளது. இது மட்டுமல்ல பஹ்ரைன், துபாய் போன்று வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு பெரிய செட் போட்டும் படப்பதிவு நடந்துள்ளது.

படத்தில் 5 பாடல்கள். ஒருபாடலுக்கு துபாய் க்ளப்பில்.. இதற்காக ரஷ்யா பெல்லி டான்சர்களை அழைத்து ஆடவைத்துள்ளனர்..

இசை பி.பி. பாலாஜி..பாலாஜி சூரன் துணை முதல்வர் படங்களுக்கு இசையமைத்துள்ளவர். . சிட்டிராஜ் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

பாடல்கள் புவனேஷ். ஸ்டண்ட் சுப்ரீம் சுந்தர், நாக் அவுட் நந்தா, நடனம் பாபி, நிர்மல், அருண். இப்படம் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார் -எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது


இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார் -எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

 ஒரு சிறிய இடைவௌிக்கு பின்னர், சினிமாவில் மீண்டும் அதே உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளார் நடிகர் கவுண்டமணி.

 தற்போது, ''வாய்மை'' என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளவர்,

அடுத்தப்படியாக ''49-ஓ'' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த இரண்டு படங்களும் விரைவில் வௌிவர உள்ள நிலையில், இப்போது புதிதாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இப்படத்திற்கு, ''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'' என தலைப்பு வைத்துள்ளனர்.

இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் கவுண்டமணி உபயோகப்படுத்தும் கேரவன் மிகுந்த பொருட்செலவில் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டி-ஷர்ட், ஜீன்ஸ், கூலிங்கிளாஸ் என... ஒரு டீன்-ஏஜ் பையன் போன்று தோற்றமளிக்கிறார் கவுண்டமணி.

முழுக்க முழுக்க காமெடி படமாகும் உருவாகும் இப்படத்தில், கவுண்டமணியின் பட்டைய கிளப்பும் காமெடிகள் எப்போதையும் விட இந்தப்படத்தில் அதிகமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் சூட்டிக்கொண்ட டாக்டர் சீனிவாசன், விஜய்யின் புலி படத்தில்


தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் சூட்டிக்கொண்ட டாக்டர் சீனிவாசன், விஜய்யின் புலி படத்திலும் நடிக்க போவதாக தகவல் வௌியாகியுள்ளது

 கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ''புலி''.

 பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார்.

 விஜய் ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

 நீண்ட இடைவௌிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார்.

 இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், விரைவில் பாடல் காட்சிகளுக்காக விஜய் உள்ளிட்டவர்கள் வௌிநாடு பறக்க இருக்கின்றனர்.

இந்நிலையில், லத்திகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமாகி, தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் சூட்டிக்கொண்ட டாக்டர் சீனிவாசன், விஜய்யின் புலி படத்திலும் நடிக்க போவதாக தகவல் வௌியாகியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் சீனிவாசனிடம் புலி தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

சமீபத்தில், ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வௌியான ஐ படத்திலும் தனது வழக்கமான ஸ்டைலில் வந்து காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்தார் சீனிவாசன்.

இப்போது அடுத்தப்படியாக விஜய் படத்திலும் தனது காமெடி சேட்டைகளை செய்ய இருக்கிறார்.

தமிழில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் ஹிந்தியில் அஜய் தேவ்கன்


தமிழில், சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில், ஹிந்தியில், அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார்

 ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கத்தில், தமிழில் பெரும் வெற்றி பெற்ற படமான காஞ்சனா படம், ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

 ஹிந்தியிலும், லாரன்சே, படத்தை இயக்க உள்ளார்.

 தமிழில், சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில், ஹிந்தியில், அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார்.

 மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி் ரீமேக்கிலும், அஜய் தேவ்கன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிகை வித்யா பாலன்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளளர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, வித்யா பாலன் கூறியதாவது, இந்த ஆண்டில், பல படங்களில் நடிக்க உள்ளேன்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்கள் தான் என்னை அதிகமாக தேடி வருகின்றன.

ஆனால், இதுவரை எந்த பயோபிக் படத்தில் நடிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று வித்யாபாலன் கூறியுள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான தி டர்ட்டி பிக்சர் படத்தில், சில்க் ஸ்மிதா கேரக்டரில், வித்யா பாலன் நடித்தார்.

இந்த படத்திற்காக, வித்யா பாலன், சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sunday, 8 February 2015

குத்து நடனத்தில் பட்டைய கிளப்பிய மாதுரிமா



பெங்கால் நடிகையான மாதுரிமா பானர்ஜி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியான நடிகையாகிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தமிழில் வெளியான ஆம்பள படத்திலும் இவர் நடித்திருந்தார், தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நாக சைதன்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குநர் சுதீர் வர்மா இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருக்கிறாராம் மாதுரிமா.

சும்மா கவர்ச்சிக்காக மட்டும் இந்த பாடலை படமாக்கவில்லை படத்தின் முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் கதையோடு ஒன்றியே வருகிறது என்று கூறுகிறார் இயக்குநர் சுதீர் வர்மா.

பாடல் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜூனியர் என்டிஆரின் டெம்பர் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், மேலும் ஆக்ஷன் காட்சிகளிலும் இவர் பட்டைய கிளப்புகிறாராம்.

ஹாட்ரிக் ஹிட்டடித்த நிக்கி கல்ராணி


இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'டார்லிங்' நல்ல ஓப்பனிங்கை தந்துள்ளதால், வரும் நாட்களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவை ஒரு கலக்கு கலக்கத்தான் போகிறார் அழகு டார்லிங் நிக்கி கல்ராணி.

இதற்கான அச்சாரத்தை கடந்த வருடம் வெளியான '1983' படமே வலுவாக போட்டுத்தந்து விட்டது. பெங்களூரு பொண்ணான நிக்கி கல்ராணி, கன்னடத்தில் அறிமுகமானாலும் கடந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்த '1983', ஓம் சாந்தி ஒசானா' மற்றும் 'வெள்ளிமூங்கா' ஆகிய மூன்று படங்களும் ஹிட்டடிக்க, இப்போது முன்னணி ஹீரோக்களின் பார்வை 'நிக்கி' பக்கம் தான். இது தவிர தெலுங்கு, கன்னட ஹீரோக்களும் நிக்கியை கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

காற்றுள்ள போதுதானே தூற்றிக்கொள்ள முடியும். தனது மவுசு கூடுவதை பார்த்த நிக்கி, தனது சம்பளத்தை 2௦ லட்சத்திலிருந்து 6௦ லட்சமாக உயர்த்திவிட்டாராம். தற்போது மலையாளத்தில் திலீப்புக்கு ஜோடியாக இவர் நடித்துவ ரும் 'இவன் மர்யாதராமன்' படம் வரும் சம்மர் ரிலீஸாக வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல வினீத் சீனிவாசன் ஜோடியாக 'ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா' மற்றும் சுரேஷ்கோபியுடன் 'ருத்ர சிம்ஹாசனம்', தமிழில் பாபி சிம்ஹா ஜோடியாக ஒரு படம் என ஹவுஸ்புல் புக்கிங்கில் போய்க்கொண்டு இருக்கிறார் நிக்கி. இதனால் தமிழில் இவர் ஆதியுடன் நடித்துள்ள 'யாகவராயினும் நா காக்க' படத்தின் மீதும் எதிர்பார்ப்பு விழுந்துள்ளது.