Friday, 6 February 2015

எலியான வடிவேலு


தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இடையில் அரசியல் பிரச்னையில் சிக்கி சில பல காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர், கடந்தாண்டு தெனாலி ராமன் படத்தின் மூலம் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுத்தார்.

யுவராஜ் தயாளன் இயக்கிய இப்படம், எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. ஆனாலும் இவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண முடிவு செய்தனர். மேலும் இப்படத்திற்கு எலி என்றும் பெயர் சூட்டியிருந்தனர்.

இந்நிலையில், ''எலி'' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வௌியிடப்பட்டுள்ளது. அதில், கட்டம்போட்ட பேண்ட், சிவப்பு கலர் கோட், கருப்பு நிற கண்ணாடி எல்லாம் அணிந்து ஹாயாக ஒரு கார் மீது சாய்ந்து போஸ் கொடுக்கிறார் வடிவேலு.

மேலும் அவரது கர்லிங் ஹேரும் ஒரு வித்தியாசமான தோற்றத்தை பிரதிபலிக்கிறது. ஆக போஸ்டரை பார்க்கும்போதே இதுவும் முழுக்க முழுக்க காமெடி படமாகத்தான் உருவாகும் என தெரிகிறது.

0 comments:

Post a Comment