Wednesday, 4 February 2015

கோலிவுட் புது வரவு மஞ்சு வாரியர்



சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தின் மூலம், தமிழில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிமுகமாக உள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் மஞ்சு வாரியர். நடிகர் திலீப் உடனான மணவாழ்க்கையால், நடிப்புக்கு முழுக்கு போட்டார். பதினாறு வருடங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்கள் இல்லற வாழ்க்கையில் சமீபத்தில் புயல் வீசியது.

இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இரு தினங்களுக்கு முன்பு கோர்ட், அவர்களுக்கு விவகாரத்து வழங்கியது.

இதையடுத்து, மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார். மலையாளத்தில், அவர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படம், பெரும்வெற்றி பெற்றது. இப்படம், தமிழில் ரீமேக் ஆக உள்ளது.

மஞ்சு வாரியர் கேரக்டரில், ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்தை, நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

இதனிடையே, மஞ்சுவாரியர், சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்திலான படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

0 comments:

Post a Comment