Sunday, 8 February 2015

கடுங்குளிரில் லிப் கிஸ் அடித்த யாமி கவுதம்


சிம்லாவை அடுத்த கல்பா கிராமத்தில், மைனஸ் 10 டிகிரியிலான கடுங்குளிரில், புல்கிட் சாம்ராட்டை, யாமி கவுதம் லிப் டு லிப் கிஸ் அடிக்கும் சீன் படமாக்கப்பட்டுள்ளது. பூஷன் குமார் தயாரிப்பில், திவ்யா கோஸ்லா குமார் இயக்கத்தில், புல்கிட், யாமி நடிப்பில் சனம் ரே படம் உருவாகி வருகிறது.

யாரியான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திவ்யா கோஸ்லா குமார் இயக்கும் இரண்டாவது படம் இது ஆகும். சனம் ரே படம் குறித்து திவ்யா கோஸ்லா குமார் கூறியதாவது, சிம்லாவிலிருந்து 8 மணிநேர நீண்ட பயணத்திற்கு பிறகு, இந்த கல்பா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தியேட்டர்களே இல்லை.

மைனஸ் 10 டிகிரி செல்சியஸ், எங்கள் படக்குழுவினரை உற்சாகமாக வரவேற்றது. புல்கிட் - யாமி முத்தக்காட்சியை, இங்கே தான் எடுப்பது என்று அப்போதே தீர்மானித்துவிட்டேன்.

ஓரளவு நடுக்கத்தில் இருந்த யாமியும், புல்கிட்டும், இதை சொன்னதுமே, கூடுதலாகவே நடுங்க ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களுக்கு அவ்வப்போது, சூடான பானங்களை கொடுத்துக்கொண்டே இருந்தோம். முத்தக்காட்சியும் சிறப்பாக வந்துள்ளதாக திவ்யா கூறினார்.

0 comments:

Post a Comment