ஒரு காலத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களை மிஞ்சிய வசூல் சாதனை படங்களை கொடுத்த கவர்ச்சி நடிகை ஷகிலா தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் காமெடி மற்றும் வில்லியாக நடித்து வருகிறார். ஷகிலாவுக்கு திருமணம் என்ற செய்தி பலமுறை வந்து தடைபட்டு போயிருக்கிறது.
கடைசியாக ரமேஷ் என்ற தே.மு.தி.க பிரமுகரை மணக்க இருப்பதாக சொன்னார். அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் ஷகிலா தான் இயக்கி வரும் கன்னடப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஒரு இளைஞனை திருமணம் செய்து கொண்டார் என்கிற செய்தி பரவியது.
இதுகுறித்து ஷகிலா கூறியதாவது:
என்னை பற்றி திருமண வதந்திகள் வருவது ஒன்றும் புதிதில்லை. பத்தோடு இதுவும் ஒன்று. அந்த பையன் என் படத்தில் ஹீரோவாக நடிக்கிறான். அவனுக்கு 28 வயதாகிறது. எனக்கு 38 வயதாகிறது அவன் என் தம்பி மாதிரி.
திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் எதுவும் எனக்கு இல்லை. சில தோழிகள் உனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் அதற்காகவாவது திருமணம் செய்து கொள் என்கிறார்கள். பூமிக்கு பாரமாக இன்னொரு உயிரை விட்டுச் செல்ல எனக்கு மனம் இல்லை.
பெற்றால்தான் பிள்ளையா என்று சில குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். அது போதும் என்று விரக்தியாக கூறுகிறார் ஷகிலா.

0 comments:
Post a Comment