இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'டார்லிங்' நல்ல ஓப்பனிங்கை தந்துள்ளதால், வரும் நாட்களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவை ஒரு கலக்கு கலக்கத்தான் போகிறார் அழகு டார்லிங் நிக்கி கல்ராணி.
இதற்கான அச்சாரத்தை கடந்த வருடம் வெளியான '1983' படமே வலுவாக போட்டுத்தந்து விட்டது. பெங்களூரு பொண்ணான நிக்கி கல்ராணி, கன்னடத்தில் அறிமுகமானாலும் கடந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்த '1983', ஓம் சாந்தி ஒசானா' மற்றும் 'வெள்ளிமூங்கா' ஆகிய மூன்று படங்களும் ஹிட்டடிக்க, இப்போது முன்னணி ஹீரோக்களின் பார்வை 'நிக்கி' பக்கம் தான். இது தவிர தெலுங்கு, கன்னட ஹீரோக்களும் நிக்கியை கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
காற்றுள்ள போதுதானே தூற்றிக்கொள்ள முடியும். தனது மவுசு கூடுவதை பார்த்த நிக்கி, தனது சம்பளத்தை 2௦ லட்சத்திலிருந்து 6௦ லட்சமாக உயர்த்திவிட்டாராம். தற்போது மலையாளத்தில் திலீப்புக்கு ஜோடியாக இவர் நடித்துவ ரும் 'இவன் மர்யாதராமன்' படம் வரும் சம்மர் ரிலீஸாக வெளியாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல வினீத் சீனிவாசன் ஜோடியாக 'ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா' மற்றும் சுரேஷ்கோபியுடன் 'ருத்ர சிம்ஹாசனம்', தமிழில் பாபி சிம்ஹா ஜோடியாக ஒரு படம் என ஹவுஸ்புல் புக்கிங்கில் போய்க்கொண்டு இருக்கிறார் நிக்கி. இதனால் தமிழில் இவர் ஆதியுடன் நடித்துள்ள 'யாகவராயினும் நா காக்க' படத்தின் மீதும் எதிர்பார்ப்பு விழுந்துள்ளது.

0 comments:
Post a Comment