என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவும் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியான போது, ஏற்கெனவே மூன்று படங்களில் இணைந்து நடித்து விட்டார்களே, வேறு புது ஜோடியை அஜித்துடன் நடிக்க வைக்காமல், கௌதம் மேனன் மீண்டும் த்ரிஷாவையே ஏன் நடிக்க வைக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன.
ஆனால், அந்தக் கேள்வியெல்லாம் படம் பார்த்தபின் மறைந்து விட்டது. அடடா...இப்படி ஒரு அழகா, என ரசிகர்களை வியந்து பார்க்க வைத்துவிட்டார் கௌதம் மேனன்.
ஏற்கெனவே, 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் ஒரு யதார்த்தமான அழகான நாயகியாக த்ரிஷாவை, ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து படம் பார்த்த ரசிகர்களை உருக வைத்தார்.
மீண்டும், இந்தப் படத்தின் மூலம் ஹேமானிக் கதாபாத்திரத்தில் த்ரிஷாவை நடிக்க வைத்து ஜெஸ்ஸியை ரசிகர்கள் ரசித்தது போலவே இந்த ஹேமனிக்கா கதாபாத்திரத்தையும் ரசிக்க வைத்து விட்டார். இத்தனைக்கும் ஹேமானிக்கா கதாபாத்திரம் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக நடிக்கும் கதாபாத்திரம்.
ஆனாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தோற்றமும், உடை அலங்காரமும், ஹேர்ஸ்டைலும் ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்திருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் கூட 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஜெஸ்ஸியை, 'என்னை அறிந்தால்' மேஹமானிகா மிஞ்சி விட்டார் என ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

0 comments:
Post a Comment