என்னை அறிந்தால் திரைப்படம் பிப்ரவரி 5 ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட நாள் தொட்டே அஜீத் ரசிகர்கள் இத்திரைப்பட வௌியிட்டு நாளை வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருப்பர்கள் போலும்... அதன் வௌிப்பாடாக பிப்ரவரி 5, அதிகாலை சென்னை உள்ளிட்ட தமிழகம் ழுழுவதும் படம் வௌியான திரையரங்குகள் ஒவ்வொன்றும் திருவிழா கோலம் பூண்டிருந்தன.
ஆட்டம், பாட்டம், சரவெடி பட்டாசு, அதிர்வேட்டு, தாரை தப்பட்டை... என ஒவ்வொரு திரையங்கு வாயிலும் அதிகாலை 3 மணிக்கே கோலாகலம் கொண்டிருந்தன. அதுமாதிரி திரையரங்குகளில் உள்ளும் நூற்று கணக்கான கூடுதல் சேர் போட்டு பார்த்தும், அது பத்தாமல் தரையிலும் அமர்ந்து தல ரசிகர்கள் 4 மணி சிறப்பு காட்சி பார்த்தததே கண்கொள்ளா காட்சி.
ரிசர்வேஷன் அறிவிக்கப்பட்ட கடந்த பிப்., 3ம் தேதி முதலே திரையரங்குகளில் திரண்ட அஜீத் அபிமானிகளும், தல ரசிகர்களும், இன்று 4 மணி ஷோவிலும், அதைத்தொடர்ந்து 7 மணி ஷோவிலும் சென்னை காசி திரையரங்கம், ஆல்பர்ட் திரையரங்கம், விருகம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வண்டி பார்க்கிங்கிற்கு இடம் இல்லாமல் அருகில் உள்ள தெருக்களில் டூவிலர்களையும், கார்களையும் நிறுத்தியிருந்தனர். இதற்கு காவல் துறையும் முழு ஒத்துழைப்பு தந்து ரசிகர்களை வழி நடத்தி திரையரங்குகளுக்கு செல்ல அனுமதித்தனர்.
திரையரங்கிற்குள் சென்ற ரசிகர்கள், திரையில் அஜீத் தோன்றிய போதெல்லாம் பூக்களையும், சுக்கு சுக்காக கிழித்து தயாராக வைத்திருந்த பேப்பர்களையும் அள்ளி வீசி ஆர்ப்பரித்தும், பாடல் காட்சிகளில் ஸ்கிரீனின் முன் கூட்டம் கூட்டமாக ஆடியதும், ரஜினி படங்களை காட்டிலும் ஒன்றிரண்டு மடங்கு கூடுதலாக தெரிந்தது நிஜம்!
இத்தனைக்கும் அஜீத், தனக்கு ரசிகர் மன்றம், நற்பணி மன்றம் எதுவும் வேண்டாம்... என எத்தனையோ முறை கேட்டு கொண்டும், ஒருமுறை அஜீத்தே முன்னின்று தனது ரசிகர் மன்றத்தை கலைத்தும், அஜீத் அபிமானிகள் அவரை விடுவதாக இல்லை என்பதற்கு, என்னை அறிந்தால் படம் ஓடும் திரையரங்குகளில் கூடும் கூட்டம் ஒரு சின்ன சாம்பிள் என்றே எடுத்து கொள்ளலாம்.
தலயை தலையில் தூக்கி வைத்து கொண்டு அவரது ரசிகர்களும், அபிமானிகளும் இவ்வாறு ஆட, கொண்டாட காரணம், அல்டிமேட் அஜீத்

0 comments:
Post a Comment