நடிகைகள் பொதுவாக எங்கு வெளியில் வந்தாலும் மேக்கப்புடன் தான் வெளியில் வருவார்கள். இது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால் அந்தக் கால நடிகைகள் மேக்கப்பிற்காக நிறையவே நேரம் செலவிடுவார்கள்.
மேக்கப் இல்லாமல் சிலரைப் பார்த்தால் நம்மால் அடையாளம் கூட கண்டு பிடிக்க முடியாது. இருந்தாலும் மேக்கப் இல்லாமலும சிலர் மிகவும் அழகாக இருப்பார்கள். நான் அப்படிப்பட்டவர்தான் என்கிறார் காஜல் அகர்வால்.
“என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் நான் மேக்கப்பில் இருப்பதை விட மேக்கப் இல்லாமல்தான் மிகவும் அழகாக இருக்கிறேன் என்று சொல்வார்கள். நான் எங்காவது ஷாப்பிங்கிற்கு வெளியில் செல்லும் போது என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள்.
மற்றவர்களுக்கு இது பிரச்சனையாக இருக்கலாம், ஆனால், நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
வெளியில் செல்லும் போது மிக லேசாக மட்டுமே மேக்கப் போடுவேன், அவ்வளவுதான்.
என் நடிப்பு படப்பிடிப்புத் தளத்துடன் முடிந்து விடுகிறது. அதன் பின் நான் நானாகத்தான் இருப்பேன்.
என்னைச் சந்திக்க வருபவர்களை நான் என்றுமே வெறுத்ததில்லை. என்னுடன் நடிப்பவர்களுடன் நான் எப்போதும் நட்பாகவே பழகுவேன்.
தற்போது தமிழிலும், தெலுங்கிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்,” என தன்னைப் பற்றி பாசிட்டிவ்வான எண்ணத்துடனேயே இருக்கிறார் காஜல். அதுதான் நம்மை மற்றவர்களிடமும் உயர்த்திக்காட்டும்.

0 comments:
Post a Comment