செல்பி எடுப்பதில் தனக்கு ஈடுபாடு கிடையாது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
மனிதனின் மூன்றாவது கையாக மொபைல்போன் மாறியுள்ள நிலையில், அதில் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
தங்களை தாங்களே செல்பி எடுத்தும் மற்றும் பிரபலங்களுடன் நின்றபடி செல்பி எடுத்துக்கொண்டும், அந்த போட்டோக்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
செல்பி எடுப்பது குறித்து, நடிகை குஷ்பு கூறியதாவது, 'செல்பி' எடுப்பதில தனக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது; என்னோட சேர்ந்து நீங்க 'செல்பி' எடுக்கிறது, சுத்தமா பிடிக்காது! அதனால, என் கூட சேர்ந்து புகைப்படம் எடுத்துக்க விரும்புனா, உங்க நண்பர்களை வைச்சு 'க்ளிக்' பண்ண சொல்லுங்க என்று குஷ்பு கூறியுள்ளார்.
கற்பு குறித்து சர்ச்சை கருத்து கூறியது மற்றும் பாரதமாதா தோற்றத்தில் குஷ்பு என அவ்வப்போது குஷ்பு, மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment