ஆந்திராவில் பிறந்தவரான அஞ்சலி, பின்னர் சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்து விட்டார். அதையடுத்து இரவு பகலாக நடித்துக்கொண்டிருந்த அவரை, யாராவது கோயிலுக்கு அழைத்தால்கூட, செல்ல மறுத்து விடுவாராம்.
வீட்டில் உள்ள மற்றவர்கள் கோயிலுக்கு சென்று வரும் இடைவெளியில் அவர் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்து விடுவாராம்.
ஆனால், அப்படி கோயில்களுக்கு செல்வதை ஒரு காலத்தில் விரும்பாமல் இருந்து வந்த அஞ்சலி, இப்போது பெரிய பக்தி பழமாகி விட்டார். தான் எந்த அவுட்டோர்களுக்கு சென்றாலும், அந்த பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்கிறாராம். அங்குள்ள முதியவர்களிடம் அந்த கோயில்கள் பற்றிய வரலாற்றை ஆர்வத்தோடு கேட்டறிகிறாராம்.
மேலும், முன்பெல்லாம் படப்பிடிப்புகளில் ஓய்வாக இருக்கும்போது ஊர் கதைகளையெல்லாம் அருகில் இருப்பவர்களிடம் வண்டி வண்டியாய் கடலை போட்டு வந்த அஞ்சலி, இப்போது தான் கேள்விப்பட்ட ஆன்மீக கதைகளை அருகில் இருப்பவர்களிடம் சொல்லி, அவர்களையும் பக்தி பழமாக மாற்றுகிறாராம். அதோடு, நான் சினிமாவில் இருந்து வீழ்ந்து விடுவேன் என்று நினைத்த நேரததில் நான் வணங்கிய தெய்வங்கள்தான் என்னை காப்பாற்றின என்றும் மீண்டும் தான் சினிமாவில் பிரவேசித்ததற்கு தெய்வங்களே காரணம் என்பது போல் பேசுகிறாராம் அஞ்சலி.

0 comments:
Post a Comment