தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் சூட்டிக்கொண்ட டாக்டர் சீனிவாசன், விஜய்யின் புலி படத்திலும் நடிக்க போவதாக தகவல் வௌியாகியுள்ளது
கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ''புலி''.
பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார்.
விஜய் ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
நீண்ட இடைவௌிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், விரைவில் பாடல் காட்சிகளுக்காக விஜய் உள்ளிட்டவர்கள் வௌிநாடு பறக்க இருக்கின்றனர்.
இந்நிலையில், லத்திகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமாகி, தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் சூட்டிக்கொண்ட டாக்டர் சீனிவாசன், விஜய்யின் புலி படத்திலும் நடிக்க போவதாக தகவல் வௌியாகியுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சீனிவாசனிடம் புலி தயாரிப்பாளர் பேசியுள்ளார்.
சமீபத்தில், ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வௌியான ஐ படத்திலும் தனது வழக்கமான ஸ்டைலில் வந்து காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்தார் சீனிவாசன்.
இப்போது அடுத்தப்படியாக விஜய் படத்திலும் தனது காமெடி சேட்டைகளை செய்ய இருக்கிறார்.

0 comments:
Post a Comment