Tuesday, 3 February 2015

சீரியலுக்கு நோ சொன்ன சாண்ட்ரா


சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் வலம் வந்தவர் சாண்ட்ரா. தொகுப்பாளர் பிரஜினை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது வந்த சினிமா வாய்ப்புகளிலும் நடித்தார்.

கஸ்தூரிமான், போராளி, படங்களில் நடித்தார் சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சுற்றுலா, தரணி படங்களில் ஹீரோயின்.

சினிமா வாய்ப்புகள் நிறைய வருவதால் சின்னத்திரைக்கு முழுக்கு போட்டுவிட்டார் சாண்ட்ரா. இதுகுறித்து அவர் கூறும்போது "தற்போது சினிமா வாய்ப்புகள் நிறைய வருகிறது. நான்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். தரணி படத்துக்கு கிடைக்கும் பாராட்டுகள் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

தற்போது 3வது நபரை காணோம் என்ற படத்தில் நடித்து வருகிறேன். சின்னத்திரை, சினிமா இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால் இனி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன்" என்றார்.

0 comments:

Post a Comment