தமிழில் சித்தார்த் நடித்த நூறறெண்பது படத்தில் நடித்த நித்யாமேனன், பின்னர், வெப்பம் படத்தில் நடித்தார். அதையடுத்து மாலினி 22
பாளையங்கோட்டை , ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு, அப்பாவின் மீசை, ஓகே கண்மணி, முனி-3 கங்கா என மூன்று படங்களில் தற்போது நடித்துள்ளார்.
இந்த படங்களில் தனது வேடம் பற்றி நித்யாமேனன் கூறுகையில், என்னை எந்த படத்துக்கு புக் பண்ண வந்தாலும், எனது உருவத்தைப்பார்த்து விட்டு, இது என்ன நித்யாமேனனா? இல்லை அவரது தங்கையா? என்றுதான் டைரக்டர்கள் கேட்பார்கள், காரணம், அந்த அளவுக்கு நான் உயரம் குறைவாக இருக்கிறேன். ஆனபோதும், எனது நடிபபு மீது நம்பிக்கை வைத்து டைரக்டர்கள் என்னை புக் பண்ணி வருகிறார்கள.
அதனால், நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே நடிப்பில் என உயரத்தை காண்பித்து வருகிறேன். அதனால்தான், கதாபாத்திரங்களை தேடி நான் ஓடாமல், என்னை நம்பி டைரக்டர்கள் தரும் படங்களில் மட்டுமே கமிட்டாகி வருகிறேன். அந்த வகையில், தற்போது தமிழில் நான் நடித்திருக்கும் மூன்று படங்களிலுமே இதுவரையில்லாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறேன்.
அதனால், இந்த படங்கள் என்னை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறும் நித்யாமேனன், நடிப்பில் என்னும் பெரிய பெரிய உயரங்களை தொடக்கூடிய கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

0 comments:
Post a Comment