புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் மேல்நாட்டு மருமகன் படத்தில் பிரெஞ்சு மாடல் அழகியும், நடிகையுமான ஆண்ட்ரியன் நடிக்கிறார்.
ராஜ்கமல் ஹீரோவாக நடிக்கிறார். எம்.எஸ்.எஸ் இயக்குகிறார்.
"தமிழ்நாட்டு இளைஞர்கள் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். வெளிநாட்டு மோகத்தில் திளைக்கிறார்கள்.
இன்னும் சிலர் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிடுகிறார்கள்.
அவர்களை பற்றிய கதை ஒருபுறம். இன்னொருபுறம் தமிழ் கலாச்சாரத்தை விரும்பி, நேசித்து தமிழ் இளைஞனை திருமணம் செய்து கிராமத்தில் வாழ விரும்பும் வெளிநாட்டு பெண்ணின் கதை.
இந்த கேரக்டரில் நடிக்க நல்ல வெளிநாட்டு நடிகை தேடியபோது தமிழ் படத்தில் நடிக்க விரும்பம் கொண்டிருந்த ஆண்ட்ரியனை இணையதளம் வாயிலாக கண்டுபிடித்தோம்.
கதையை சொன்னதும் ஒப்புக்கொண்டு நடித்தார்" என்றார் இயக்குனர்.

0 comments:
Post a Comment