Sunday, 8 February 2015

கிர்தி சனோனை அவுட் ஆக்கிய எமி ஜாக்சன்


பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் சிங் இஸ் பிலிங் படத்தில், கிர்தி சனோனிற்கு பதிலாக, எமி ஜாக்சன் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்த கிர்தி சனோன், அதேநேரத்தில், வருண் தவானுடன் மற்றொரு படத்தில் கமிட் ஆனதன் காரணத்தினாலேயே, இந்த மாற்றம் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கரின் ஐ படத்தில், எமி ஜாக்சனின் நடிப்பு, பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment